Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

Aani Month Rasi Palan 2022 in Tamil: இந்த மாதத்தில் அமோகமான தொழில் வளர்ச்சி கொண்ட 3 ராசிகள்.... ஆனி மாத ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 14, 2022 & 12:30 [IST]
Aani Month Rasi Palan 2022 in Tamil: இந்த மாதத்தில் அமோகமான தொழில் வளர்ச்சி கொண்ட 3 ராசிகள்.... ஆனி மாத ராசிபலன்!Representative Image.

சுபகிருது வருடம் ஆனி மாதத்தில்  கடகம், சிம்மம் மற்றும் கன்னி ராசிக்கு (Aani Month Rasi Palan 2022 in Tamil) ஏற்பட்ட மாற்றமும் பலனும் பற்றி அறிய வேண்டுமா...! இந்த வாசகம் மாத பலன் மட்டுமின்றி என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.   


Representative Image. மேலும் படிக்க: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியின் ஆனி மாத ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


கடகம்

பொது பலன்:  இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக உள்ளது, சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவீர்கள். பல நன்மைகள் நடந்து மனதை நிம்மதியாக வைக்கும். சுய தொழில் செய்ய நினைப்பவருக்கு தொழில் தொடங்க அருமையான நேரம் இந்த ஆனி மாதம். செல்வ நிலையில் திருப்திகரமான நிலை இருக்கும். 

கணவன் மனைவிக்கு இடையில் வாக்குவாதம் இருந்தாலும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், பாராட்டு கிடைக்கும். உடல்நலத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நலமான வாழ்க்கை கொள்வீர்கள். 

புனர் பூசம்: தொழிலில் நல்ல மாற்றம் இருக்கும்.

பூசம்: பொருளாதாரம் நிலை கணிசமாக உயரும், நிதி நெருக்கடி குறையும். தொழில் மாற்றம் நிகழும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.

ஆயில்யம்: ஆரோக்கியம் சிறக்கும், மன நிலை தெளிவாக இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ராகவேந்திரர்

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று தட்சணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சமர்ப்பிக்க வேண்டும்.

சந்திராஷ்டமம்: ஜூன் 19, 20

சிம்மம்

பொது பலன்: இந்த மாதம் உங்களுக்கு இருந்த பிரச்சனை படிப்படியாகக் குறைந்து, தொழிலில் நல்ல மாற்றம் நிகழும். தொழிலில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும், பதவி உயர்வு வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுய தொழில் செய்யும்  வாய்ப்பு உருவாகும்.  உறவினர் மத்தியில் இன்று கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.  

குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்,  குடும்பத்தினருடன் நல்லிணக்கமாக நடப்பீர்கள். செல்வ வரவு அமோகமாக உள்ளடு. ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். 

மகம்: நல்ல செல்வ நிலை அமையும்.

பூரம்: இந்த மாதம் விட்டுக்கொடுத்து சென்றால் இன்பமான தருணமாக இருக்கும். 

உத்திரம்: தொழிலில் நன்மைகள் இருக்கும். குடும்பத்தில் அமைதி காக்க வேண்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன் 

பரிகாரம்: உங்கள் ராசியின் அதிபதி சூரிய பகவானைத் தினமும் வழிபாடு செய்ய வேண்டும். 

சந்திராஷ்டமம்: ஜூன் 21, 22,  23

கன்னி

பொது பலன்: உங்கள் ராசி சுக்கிரன் மற்றும் செவ்வாய் சேர்க்கை இருப்பதால் எதிர்பார்க்காத பல செயல்கள் எடுக்கும், சில சமயம் நன்மையிலும் சில சமயம் எதிர்மறை காரியங்களும் நடக்கும். ஆனால் தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். கல்வி நிலை சிறப்பாக உள்ளது, போட்டி தேர்வில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த மாதம் கவனம் சிதறும். 

குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும், பெண் குழந்தை பிறக்கும் பாக்கியம் அதிகமாக உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ செலவு வரும், கன்னி ராசி பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும்.  மன உறுதி இருக்கும். 

உத்திரம்: புதிய பொருட்கள் வாங்குவீர்கள். நிதி நிலை உயர்ந்து வசதி கூடும்.

அஸ்தம்: தொழில் தடைகள் குறைந்து முன்னேற்றம் கொள்வீர்கள். குடும்பத்தில் இன்பம் இருக்கும். 

சித்திரை:  தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். உடல்நலத்தில் சிறிய கவனம் வேண்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அனுமன்

பரிகாரம்: வாரம் ஒருமுறை பெருமாள் சன்னதி சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்..

சந்திராஷ்டமம்: ஜூன் 24, 25, 26

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்… 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்