ஜோதிடத்தைப் பொருத்தவரை கிரக நிலை மாற்றமே ராசிகளின் நிலையை மாற்றும், அந்த கிரக நிலையை மையப்படுத்தி ராசிகளின் பலன் அமையும், கிரகங்களின் நிலை மாற்றம் இந்த ஆனி மாதம் துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிகளுக்கு எந்த மாதிரியான பலன் அளிக்கும் என்பதை அறிய இவ்வாசகத்தைப் பின்தொடரவும்.
துலாம்
பொது பலன்: இந்த மாதம் உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும், உங்கள் பேச்சு திறமையால் ஏற்படும் பல பிரச்சனைகளை சமாளித்து அதற்கான் தீர்வைக் காண்பீர்கள். அமோகமான செல்வ வரவு இருக்கும். தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது, தொழில் உங்கள் முக்கியத்துவத்தை மற்றவர்கள் புரிந்து கொள்வர். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமை சிறிய விரிசல் உருவாகும், திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையில் தற்காலிக பிரிவு இருக்கும், அது பணி நிமித்தமாகவும் இருக்கும். உறவினர் மத்தியில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். சொத்துகள் வாங்கும் யோகம் அல்லது ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எதிர்பார்க்காத பண வரவு இருக்கும்.
சித்திரை: சுபகாரியம் நடக்கும்.
சுவாதி: பேச்சு திறமை அபதிகரமாக இருக்கும்.
விசாகம்: குடும்பத்தில் பொறுமை காக்க வேண்டும்.
வழிபட வேண்டிய தெய்வம்: ரங்கநாதர் வழிபாடு
பரிகாரம்: குடும்பத்தில் நிம்மதி அதிகமாக சனிக்கிழமை அன்று பெருமாள் கோவில் சென்று வர வேண்டும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 26, 27
விருச்சிகம்
பொது பலன்: இந்த மாதம் உங்களுக்கு நன்மைகள் தரும் மாதமாக இருக்கும், நன்மைகள் நிகழத் தாமதமாக இருந்தாலும் நிச்சயமாக வெற்றி அளிக்கும் சாதகமான தருணம் இந்த மாதம் ஆகும். தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது, உத்தியோகத்தில் பல சாதகமான நிகழ்வுகள் நிகழும். பண வரவு நன்றாக இருக்கும்.
கணவன் மனைவி உறவில் நல்ல இணக்கம் இருக்கும், விட்டுக்கொடுத்து போவீர்கள். மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், எதிர்பார்த்த நல்ல கல்லூரியில் சேர முடியும். ஆரோக்கியத்தில் அதிகமான கவனம் தேவை.
விசாகம்: குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.
கேட்டை: வியாபாரத்தில் உங்கள் பேச்சு நல்ல பலனை அளிக்கும், வாடிக்கையாளரின் மதிப்பைப் பெறுவீர்கள்.
அனுஷம்: உங்கள் பேச்சாற்றல் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை உருவாகும், பண வரவு கணிசமாக இருக்கும். இல்லறம் சிறப்பாக உள்ளது.
வழிபட வேண்டிய தெய்வம்: குல தெய்வ வழிபாடு
பரிகாரம்: உங்கள் குலதெய்வ கோவில் சென்று விளக்கு ஏற்றி அமைதியாக 5 நிமிடம் இறைவனை நினைத்து உட்கார வேண்டும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 28, 29, 30
தனுசு
பொது பலன்: இந்த மாதம் உங்கள் உறுதியான குணத்துக்கு தேவையான வெற்றி இருக்கும், தொழிலில் மிகப்பெரிய லாபம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும், முக்கியமாகக் கூட்டு வியாபாரத்தில் நல்ல பண வரவு இருக்கும். மொத்தத்தில் தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது.
மாணவர்களின் கல்வி ஸ்தானத்தில் கல்வி ஆற்றல் நன்றாக உள்ளது. குடும்ப வாழ்க்கை சிறப்பாக உள்ளது. உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் காட்ட வேண்டும்.
மூலம்: சீரான வாழ்க்கையை நடத்துவீர்கள்.
பூராடம்: தொழில் போட்டிகள் குறைந்து இந்த மாதம் நல்ல பண வரவு இருக்கும்.
உத்திராடம்: கணமான பண வரவு உண்டு, தொழிலில் நல்ல லாபம் இருக்கும்.
வழிபட வேண்டிய தெய்வம்: கிருஷ்ணர் வழிபாடு
பரிகாரம்: தினமும் காலையில் சூரிய நாராயணன் வழிபாடு செய்தல் வேண்டும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 1, 2, 3
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…