ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் நிலை மாறுதல் அடிப்படையில் சனியின் வக்கிர பார்வையால் இந்த வருட 2022 ஆனி மாதம் முதல் 3 ராசிகள் (மேஷம்- மிதுனம்) அடையும் மாத பலன் பற்றி அறிய இவ்வாசகத்தைத் தொடர்ந்து படிக்கவும்.
மேஷம்
பொது பலன்: மேஷ ராசிக்காரருக்கு இந்த ஆனி மாதம் தொழில் ஸ்தானம் அமோகமாக உள்ளது, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும், முக்கியமாக முன்னோர்களின் மூலம் செல்வ வரவு உண்டு. படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
புதிய வேலைகள் கிடைக்கும், தொழிலில் அடுத்த நிலைக்கு செல்லுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் அதிகமாகும். திருமண வாழ்க்கையில் அனுசரித்து செல்வீர்கள், குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சில முயற்சிகள் செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்.
அஸ்வினி: தொழிலில் நல்ல வளர்ச்சி அமோகமாக இருக்கும்.
பரணி: நற்செயல்கள் பல நடக்கும்.
கிருத்திகை: இரத்த சொந்தத்தின் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.
வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர் வழிபாடு
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனீஸ்வர வழிபாடு செய்வது இருக்கும் நிலையிலிருந்து உங்களை உயர செய்யும்.
ரிஷபம்
பொது பலன்: இந்த ஆனி மாதம் உங்களுக்கு கொஞ்சம் நிம்மதியளிக்கும் தருணமாக இருக்கும், கணவன் மனைவி உறவில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் மாற்றத்தை பற்றிய சிந்தனைகள் அதிகமாக மனதில் தோன்றும். ஆன்மீக எண்ணம் இருக்கும். சுப நிகழ்ச்சி நடக்கும்.
செல்வ நிலையில் விரைய செலவு இருக்கும். கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மருத்துவ செலவு வருவதற்கு வாய்ப்புள்ளது.
கிருத்திகை: முன்னோர்களின் மூலம் சந்தோஷம் அதிகமாகும்.
மிருக ஸீரிஷம்: பொருள் சேர்க்கை உருவாகும்.
ரோகிணி: சுப நிகழ்ச்சி நடக்கும், நிம்மதியான நிலை சுழலும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி வழிபாடு செய்வது நன்மை அளிக்கும்.
வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: காமாட்சி அம்மன்
சந்திராஷ்டமம்: ஜூன் 15, 16
மிதுனம்
பொது பலன்: இந்த மாத ம் உங்கள் தொழில் ஸ்தானம் மிகவும் நன்றாக உள்ளது, சுய தொழில் செய்பவர்கள் உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லுவீர்கள். எதிர்பார்க்காத லாபங்கள் இருக்கும். அறிமுகமில்லாதவர்களின் மூலமாக ஆதாயம் கிடைக்கும். சில மிதுன ராசிக்காரருக்கு திருமண யோகம் அதிகமாக உள்ளது.
குடும்பத்தில் நிம்மதி இருக்கும். அலுவலகத்தில் உருவாகும் வேலைச் சுமைகளை லாவகமாக சமாளிப்பீர்கள். கல்வி நிலையில் திட்டமிடல் வேண்டும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சனைகள் உதிக்கும்.
மிருகசீரிஷம்: உதவி கிடைக்கும்.
திருவாதிரை: குடும்பத்தில் நிம்மதி இருக்கும், பண வரவு இருக்கும்.
புனர் பூசம்: தொழில் மாற்றம்
பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு நல்லெண்ணெய் விளக்கு போடவும்.
வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: பெருமாள்
சந்திராஷ்டமம்: ஜூன் 17, 18
இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…