Mon ,Dec 04, 2023

சென்செக்ஸ் 68,865.12
1,383.93sensex(2.05%)
நிஃப்டி20,686.80
418.90sensex(2.07%)
USD
81.57
Exclusive

Aippasi Month Rasi Palan 2022 In Tamil : ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர் பெறபோகும் அதிர்ஷ்டம்..!

Manoj Krishnamoorthi October 15, 2022 & 17:00 [IST]
Aippasi Month Rasi Palan 2022 In Tamil : ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர் பெறபோகும் அதிர்ஷ்டம்..! Representative Image.

ஜோதிட ரீதியாக துலா மாதம் என அழைக்கப்படும் இந்த ஐப்பசி மாதம்  பல சிறப்பு பண்டிகைகள் கொண்டதாகும். இது குறித்து நம் முன்னோர்கள் ஐப்பசி மாதத்தில் புனித காவிரியில் நீராடுவது மகத்துவம் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த ஐப்பசி மாதம் 5 கிரக சேர்க்கை போன்ற நிகழ்வுகள் நடக்க உள்ளது இதனால் 12 ராசிக்கும் கிடைக்கும் பலன் பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாத ராசி பலன் 2022 (Aippasi Month Rasi Palan 2022 In Tamil)

Aippasi Month Rasi Palan 2022 In Tamil : ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர் பெறபோகும் அதிர்ஷ்டம்..! Representative Image

மேஷம்

களத்திர ஸ்தானத்தில் இருக்கும் சூரியன் குடும்ப வாழ்வில் திருப்தி உண்டு, ஆனால்  செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் வக்கிரமாவதால்  பேச்சில் கவனம் வேண்டும். போதுமான அளவு செல்வம் கையில் புழங்கும். மேலும் படிக்க…..

ரிஷபம்

இந்த மாத வெற்றிகரமாக இருக்கும், மனதில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் உத்வேகமாக இருக்கும். கோபத்தால் பிரச்சனை உருவாகலாம். செல்வ நிலை நன்றாக உள்ளது, மருத்துவ செலவு ஏற்படும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேலும் படிக்க….. 

மிதுனம்

இந்த மாதம் திருப்திகரமாக அமையும்.  நல்ல மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பல நாட்களாக இருந்த கவலைகள் நீங்கள் பல நாட்களுக்கு முன் செய்த செயலால் நன்மை கிடைக்கும். மேலும் படிக்க…..

கடகம்

குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் வக்கிரமாகவும், தைரிய ஸ்தானத்தில் இருக்கும் புதன் சுக ஸ்தானத்தில் இருந்து பின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி உண்டு. தொழில் ஸ்தானத்தில் இராகு இருப்பதால் புதிய முயற்சி சாதகமாகாது. மேலும் படிக்க….. 

சிம்மம்

இந்த மாதம் ஆதாயமும் உண்டு பிரச்சனையும் உண்டு.  புகழ் அதிகரிக்கும் ஆனால் குழப்பத்திற்கு பிறகுதான் மதிப்பு கிடைக்கும். சுக்கிரன் முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால் தொழில் வெற்றியைப் போராடி பெற வேண்டும். மேலும் படிக்க…..  

கன்னி

ராசிநாதன் புதன் பகவானின் சாதகமான பார்வை  நன்மை அளிக்கும். பேச்சின் மூலம் சிக்கல் வரலாம், என்வே கவனமாக இருக்க வேண்டும். குரு திருமண ஸ்தானத்தில்  இருப்பதால் திருமண பாக்கியம் அமைக்கும். மேலும் படிக்க…..

துலாம்

ராசிநாதன் சுக்கிரன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் தெளிவான சிந்தனைகள் மற்றும் செயல் இருக்கும். ஆனால் மற்றவர்கள் மூலம் இடையூறு ஏற்படும். தொழில் மாற்றம் ஏற்படும். மேலும் படிக்க…..

விருச்சிகம்

குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பலமாக இருப்பதால் பணப்புழக்கம் உண்டு, ஆனால் சுப விரையம் உண்டாகும். எண்ணிய காரியத்தில் முயற்சி செய்வீர், ஆனால் வெற்றியைப் போராடி தான் பெற வேண்டும். மேலும் படிக்க…..  

தனுசு

ராசிநாதன் குரு சுக ஸ்தானத்தில் வக்கிரமாக இருப்பது உங்களுக்கு  போதுமான பணப்புழக்கம் அளித்து  பொருளாதார பிரச்சனைகள் நீக்கும். உங்கள் லாப ஸ்தானம் பலமாக இருப்பதால் உயர்வு ஏற்படும். மேலும் படிக்க…..

மகரம்

ராசி அதிபதி சனி பகவான் சாதக நிலையில் இருப்பதால் பிரச்சனைகளை கடந்து செயல்படும் தன்னம்பிக்கை கிடைக்கும். தொழிலில் சிறப்பாக செயல்படும். திடீர் பண வரவு உண்டு. மேலும் படிக்க…..

கும்பம்

சனி பகவான் விரைய ஸ்தானத்தில் வக்கிர நிவர்த்தியாவது ஓரளவு நன்மை அளிக்கும். புதன் உச்ச பலத்தில் பலன் தருவதால் செய்யும் காரியத்தில் வெற்றி அளிக்கும். கடனை அடைக்க முடியும். மேலும் படிக்க….. 

மீனம்

இந்த மாதம் பொருளாதாரத்தில் ஏற்ற தாழ்வு இருக்கும். குடும்ப வாழ்வில் பொறுமை வேண்டும். மாணவர்கள் கல்வி நிலை மந்தமாக மாறும். பணப்பரிவர்த்தனையில் கவனம் தேவை. மேலும் படிக்க…..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்