சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் சூரியன் கன்னியில் இருந்து துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் கும்பம் ராசிக்கு என்ன பலன் அளிக்கும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள், குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம் போன்றவை 2022 ஐப்பசி மாதம் (18.10.2022- 16.11.2022) எப்படி இருக்கும் என்பது இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.
ஐப்பசி மாத ராசிபலன் 2022- கும்பம் (Aippasi Month Rasi Palan 2022 In Tamil Kumbam)
பொது பலன்:
ராசியின் அதிபதி சனி பகவான் விரைய ஸ்தானத்தில் வக்கிர நிவர்த்தியாவது ஓரளவு நன்மை அளிக்கும். புதன் உச்ச பலத்தில் பலன் தருவதால் செய்யும் காரியத்தில் வெற்றி அளிக்கும்.
குடும்ப வாழ்க்கை:
செவ்வாயின் வக்கிரம் வீட்டில் வாக்குவாதங்களை உருவாக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய நீங்கள் அதிகமாக கஷ்டப்பட வேண்டியதாக இருக்கும். 9இல் சுக்கிரன் இருப்பதால் திருமண முயற்சி சாதகமாக அமையும், திருமணம் பற்றிய எண்ணம் அதிகமாக இருக்கும். ஆனால் திருமண வாழ்வில் அனுசரித்து பொறுமையாக இருக்க வேண்டும்.
தொழில்:
அலுவலகத்தில் வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும். வழக்கமான வேலையில் பிரச்சனை இல்லை. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் செய்யாமல் இருப்பதே நன்மை ஆகும். செவ்வாயின் வக்கிரம் கோபத்தால் சில நஷ்டத்தை ஏற்படுத்தும்.
3 இல் இராகு இருப்பதால் முயற்சிகளை வெற்றியாக மாற்றுவார். கல்வி நிலையில் முன்னேற்றம் பிறக்கும். 9இல் சுக்கிரன் இருப்பதால் வீடு, மனை, வண்டி வாங்குவது போன்ற சுப செலவுகள் அமையும். கடனை அடைக்க முடியும்.
உடல்நலம்:
ஆரோக்கியத்தில் சிறிய கவனம் வேண்டும். இரத்த காயம் போன்ற பிரச்சனை ஏற்படும். சிலருக்கு வயிறு சார்ந்த தொல்லைகள் ஏற்படும். தந்தையின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சந்திராஷ்டமம்:
அக்டோபர் 22, 23
Most Read: மேலும் 12 ராசியின் (மேஷம்- மீனம்) ஐப்பசி மாத ராசிபலன் 2022 கீழே உள்ள அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் | ரிஷபம் |
மிதுனம் | கடகம் |
சிம்மம் | கன்னி |
துலாம் | விருச்சிகம் |
தனுசு | மகரம் |
கும்பம் | மீனம் |
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…