Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Aippasi Month Rasi Palan 2022 In Tamil Thulam: மற்றவர்கள் பேச்சை கேட்காமல் நிதானமாக இருந்தால் துலாம் ராசிக்கு நல்லது..!

Manoj Krishnamoorthi October 12, 2022 & 10:00 [IST]
Aippasi Month Rasi Palan 2022 In Tamil Thulam: மற்றவர்கள் பேச்சை கேட்காமல் நிதானமாக இருந்தால் துலாம் ராசிக்கு நல்லது..! Representative Image.

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் சூரியன் கன்னியில் இருந்து துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் துலாம் ராசிக்கு என்ன பலன் அளிக்கும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள், குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம் போன்றவை 2022  ஐப்பசி மாதம் (18.10.2022- 16.11.2022) எப்படி இருக்கும் என்பது இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ஐப்பசி மாத ராசிபலன் 2022- துலாம் (Aippasi Month Rasi Palan 2022 In Tamil Thulam)

பொது பலன்: 

ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி பலமாக குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் தெளிவான சிந்தனைகள் மற்றும் செயல் இருக்கும். ஆனால் ராசியில் சூரியன் மற்றும் கேது இருக்கிறது, ராசியில் இருக்கும் கேது மற்றவர்கள் மூலம் இடையூறு ஏற்படும்.

குடும்ப  வாழ்க்கை: 

குடும்ப ஸ்தானத்தில் குரு பார்வை இருப்பதால் வீட்டில் நிம்மதி கிடைக்கும்.  7 ஆம் வீட்டில் இருக்கும் இராகு திருமண பந்தத்தில் தாமதம் அளிக்கும். காதல் வாழ்வில் மற்றவர் மூலம் பிரச்சனை வரும், பொறுமையாக இருந்தால் உறவில் பிரச்சனை வராது. 

தொழில்: 

சந்திரன் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருப்பது தொழிலில் இருந்த மந்த தன்மை  நீங்கும். உங்கள் கடினமான உழைப்புக்கேற்ற மதிப்பு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது தொழில் மாற்றம் ஏற்படும். 

புதன் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் நிதானமாக செயல்பட்டால்  கெடுதல் அமையாது. குருவின் பார்வை வருமானத்தில் உயர்வு அளித்தாலும் குருவின் வக்கிரம் கடன் வாங்கும் நிலையை உருவாக்கிவிடும். கல்வி நிலை ஓரளவு நன்றாக உள்ளது, உயர்கல்வியில் முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்படும். 

உடல்நலம்: 

செவ்வாயின் வக்கிரம் மனதில் பதட்டம் அளிக்கும். மேலும் ஆரோக்கியத்தில் பிரச்சனை அளிக்கும். உஷ்ணம் சார்ந்த பிரச்சனை தான் ஆரோக்கியத்தில் குறை ஏற்படுத்தும். 

சந்திராஷ்டமம்:

 நவம்பர் 8, 9, 10  

 

Most Read: மேலும் 12 ராசியின் (மேஷம்- மீனம்) ஐப்பசி மாத ராசிபலன் 2022 கீழே உள்ள அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்