Tamil Horoscope Full Predictions Tamil Online Horoscope Free
நல்ல நேரம்
காலை: 09:30- 10:30 வரை
மாலை: 03:30- 04:30 வரை
Daily Rasi Palan Tamil
மேஷம் (Aries 2022 Horoscope)
ஆக்கப் பூர்வமான உங்களுக்கு இன்று தேவையில்லாத வாக்குவாதம் வரும், புதிய நபர்களின் அறிமுகம் உங்கள் தொழிலிலிருக்கும் சிக்கலைப் போக்க உதவும். காதல் வாழ்க்கையும் வழக்கம்போலத் தான் உள்ளது. தொழிலில் பெரியதாக எந்த பாதிப்பும் இல்லை, அதிகமான நேரம் தொழிலில் உருவான பிரச்சனையைச் சரி செய்ய செலவாகும். உடலில் கால் வலி போன்ற உபாயங்கள் இருக்கும். குடும்பத்தில் அமைதியாக இருப்பது நிம்மதியைக் கெடுக்காது, விட்டிலுள்ளவர்கள் உங்களுடன் நட்பாக நடப்பர். சிக்கல்!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
ரிஷபம் (Taurus 2022 Horoscope)
சாமத்திய பேச்சாற்றல் கொண்ட உங்களுக்கு இன்று ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. வருமானத்தை எப்படி அதிகமாக்குவது என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். இன்று செலவு அதிகமாகும், ஆனால் சேமிப்பு இருக்கும். தொழில் வேலைச் சுமை அதிகமாக இருந்தாலும் ஆர்வத்துடன் வேலை செய்வீர்கள். கல்வி நிலை நன்றாக உள்ளது, உங்களின் சுற்றியுள்ளவர்களை இன்பமாக வைத்திருப்பீர்கள். காதல் வாழ்கையில் தூரமான விலகல் உருவாகும், அதனால் காதலர்க்குள் புரிதல் ஏற்படும். ஆதரவு!
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6
மிதுனம் (Gemini 2022 Horoscope)
பிறரிடமிருந்து மரியாதை எதிர்பார்க்கும் உங்களுக்கு இன்றைய தினம் வரவும் செலவும் சமமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியருடன் அதிகமான நேரத்தை வீணடிப்பீர்கள். மனதில் தேவையில்லாத மன அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் எண்ணிய காரியம் நிறைவேற அதிகமான முயற்சி தேவைப்படும். திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையில் புரிதல் இருக்கும். மரியாதை!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2
கடகம் (Cancer 2022 Horoscope)
பணிவான குணத்தால் அனைவரின் நட்பைப் பெற்ற உங்களுக்கு இன்றைய தினம் முக்கியமான நாளாக இருக்கும், தொழிலில் நிலைத்திருந்த தடைகள் நீங்கி இன்று முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் ஆனால் அதை தவறவிட்டதாக மனம் நினைக்கும். குடும்பத்தில் நல்ல உறவு இருக்கும், கணவன் மனைவிக்கு இடையில் நல்லுறவு அமையும். கணவன் மனைவி உறவு மிகவும் இன்பமாக இருக்கும். நிதி நிலையில் சேமிப்பு இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள். ஏமாற்றம்!
அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்
அதிர்ஷ்ட எண்: 3
சிம்மம் (Leo 2022 Horoscope)
கருணை குணம் கொண்ட உங்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கும். தொழில் நடக்கும் எதிர்பார்க்காத மாற்றங்கள் போதுமான செல்வ வரவை அளிக்கும். அலுவலகத்தில் இதுவரை இருந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு இன்று செய்யும் வேலை புத்துணர்ச்சி தோன்றும், மேலதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர். பொறுமையாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். திருமண வாழ்வில் சிறிய ஊடல் இருந்தாலும், உங்கள் வாழ்க்கைத் துணையின் மனதைப் புரிந்து கொள்வீர்கள். நிதி வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது, மாணவர்களின் கல்வி நிலையில் வளர்ச்சி இருக்கும், எதிர்பாராத முன்னேற்றம் அடைவர். தன லாபம்!
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5
கன்னி (Virgo 2022 Horoscope)
இறை நம்பிக்கை அதிகம் கொண்ட உங்களுக்கு வழக்கமான காரியத்தில் அதிகமான சுறுசுறுப்பாக இருப்பீர்கள், உத்தியோகத்தில் இன்று மும்முரமாக இருக்கும், ஓய்வு நேரம் குறைவாக இருக்கும். குடும்பத்தில் பெரியவருடன் பேசும்போது மரியாதையாகப் பேச வேண்டும். காதல் வாழ்க்கையில் இன்று இனிமையான உரையாடல் இருக்கும். செல்வ நிலை நன்றாக இருக்கும், செலவு கொஞ்சம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். ஆரோக்கியப் பிரச்சனை ஏற்படும், எனவே உடற்பயிற்சி செய்வது நன்மை அளிக்கும். செலவு!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3
துலாம் (Libra 2022 Horoscope)
துடிப்பான மனதைக் கொண்ட உங்களுக்கு இன்று சில தடங்கல் உருவாகும், எனவே சரியான திட்டமிடல் வழக்கமான வேலையைப் பாதிக்காது. இன்று தொழிலில் வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இருக்காது. வேலையிடத்தில் பதட்டம் உருவாகும், கடமையை நிறைவேற்ற அதிகமான நேரம் செலவாகும், உடல் சோர்வாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவாக இருக்கும், விட்டிலுள்ளவர்களிடம் பேசும்போது பக்குவமாகப் பேச வேண்டும். செல்வம் கையில் நிலையாக இருக்காது. ஆரோக்கியத்தில் திடீர் பிரச்சனைகள் வரும், உஷ்ணமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். திட்டம்!
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்
அதிர்ஷ்ட எண்: 5
விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)
மனதில் பிரகாசமான எண்ணங்களைக் கொண்ட உங்களுக்கு இன்றைய நாள் மந்தமாக இருக்கும், ஆனால் நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள், நம்பிக்கை கிடைக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் பிரச்சனை இல்லை, வெளிப்படையான பேச்சு மன வருத்தத்தை அளிக்கும். புதிய நபரின் அறிமுகம் உங்களை நல்வழிப்படுத்தும். திருமண வாழ்க்கை ஓரளவு நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். கவலை!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 2
தனுசு (Sagittarius 2022 Horoscope)
சந்தோஷமான வாழ்வு வேறு எங்கும் இல்லை நம் செயலில் தான் உள்ளது என்பதை அறிந்த உங்களுக்கு இன்று வேலைச் சுமை குறைவாக இருக்கும், கடினமான உழைப்பு தேவைப்படும். இன்று பணம் வழக்கத்தை விட அதிகமாக செலவாகும், ஆனால் வரவு இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை இல்லை. உடலுக்கு ஓய்வு தேவைப்படும். பூர்வீக வழியிலிருந்து செல்வ வரவு இருக்கும். சுகம்!
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
அதிர்ஷ்ட எண்: 5
மகரம் (Capricorn 2022 Horoscope)
அரசியல் ஞானம் இருந்த ஆசையில்லாத மகர ராசி வாசகரே உங்கள் உடல்நலத்தில் திடீர் கோளாறு ஏற்படும். இன்று மருத்துவச் செலவு வரும். தொழில் வேலை நேரம் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது, சிறப்பான திட்டமிடல் இன்று வேலையை எளியதாக முடிக்க வழி செய்யும். குடும்ப வாழ்வு நன்றாக உள்ளது. திருமண வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக இருக்கும், அன்பை வெளிப்படுத்துவீர்கள். காதல் விவகாரம் நன்மையில் முடியும். நிதி நிலைமை நன்றாக உள்ளது. முயற்சி!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட எண்: 6
கும்பம் (Aquarius 2022 Horoscope)
துடிப்பான மனதைக் கொண்ட உங்களுக்கு இன்று தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும், முக்கியமான பொறுப்புகள் கிடைக்கும். உங்கள் சக பணியாளர் உதவி பணியில் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கை ஓரளவு ஏற்றத் தாழ்வுடன் இருந்தாலும், கணவன் மனைவிக்கு இடையில் நல்லுறவு இருக்கும். மனம் தெளிவாக இருந்தாலும், உடல் நிலையில் பதட்டம் இருக்கும். செலவுகள் அதிகமாகும், அதைக் கட்டுப்படுத்துவது எதிர்கால நிதி நெருக்கடியைச் சரி செய்யும். இறை வழிபாடு செய்வது நல்லதாகும். பதட்டம்!
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 7
மேலும் படிக்க: மகரம், கும்பம், மீன ராசியின் ஜூன் மாத ராசிபலன்..! பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.
மீனம்(Pisces 2022 Horoscope)
நிம்மதியான மனநிலையை எதிர்பார்த்த உங்களுக்கு இன்று மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும், அலுவலகத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகரிக்கும், தொழிலில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும், முன்னேற்றப் பாதையில் செல்வதாக உணர்வீர்கள். செல்வத்தை எதிர்காலத் தேவைக்காக முதலீடு செய்வீர்கள், முதலீடு செய்யும்போது கவனமாகக் கையாள வேண்டும். குடும்ப வாழ்க்கையில் பொறுமை அவசியமாகும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வது குடும்ப வாழ்க்கை மேம்படுத்தும். உடல்நலம் நன்றாக இருக்கும். அச்சம்!
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 8
இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…