Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

Erode Periya Mariamman Temple: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் தேர்த் திருவிழா!

Nandhinipriya Ganeshan March 04, 2022 & 15:15 [IST]
Erode Periya Mariamman Temple: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் தேர்த் திருவிழா!Representative Image.

Erode Periya Mariamman Temple: சமயப்புரத்து மாரியம்மன், மேச்சேரி பத்ரகாளியம்மன் போன்ற பெரிய கோயில்களை போலவே ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலும் (Erode Periya Mariamman Kovil) மிகவும் பிரசித்தி பெற்றது. ஈரோடு மாவட்டத்தின் மையத்தில் அமைந்திருக்கும் இந்த கோயிலில் ஆண்டிற்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் வரும் பங்குனி தேர்த்திருவிழா மிகவும் பிரபலமானது. பழம்பெறும் கோவில்களில் ஒன்றான பெரிய மாரியம்மன் கோயில் ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன் இங்கு ஆட்சி செய்த கொங்கு சோழர்களால் கட்டப்பட்டது.

பெரிய மாரியம்மன் (Erode Periya Mariamman)

 

 

பெரிய மாரியம்மன் மிகவும் சக்தி படைத்த தெய்வமாக அனைவராலும் வணங்கப்படுகிறாள். அம்மனுக்கு பெரிய அம்மை, சின்னம்மை போன்ற அதிக வெப்பத்தால் ஏற்படும் நோயை அழிக்கும் சக்தி உள்ளது. அதனால், ஜாதி, மதம் மற்றும் மத வேறுபாடு இன்றி அனைவராலும் வணங்கப்படுகிறாள்.

பண்டிகைகள் (Erode Periya Mariamman Kovil Festivals)

 

 

அருள்மிகு பெரிய மாரியம்மன் (Arulmigu Periya Mariamman) கோயிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் "பங்குனி தேர்விழா" (Panguni Theervizha) வின் போது ஈரோடு மாவட்ட மக்கள் கூட்டமே அங்கு தான் இருக்கும். ஏனெனில் அவ்வளவு கோலாகலாமான பண்டிகை அது. இந்த பண்டிகை ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கும். ஒவ்வொரு நாளும் தனிதனி பண்டிகைகளாக கொண்டாடப்படுகிறது.

1. கம்பம் நடுதல்

2. மா விளக்கு வழிபாடு

3. கரகம் எடுத்தல்

4. பொங்கல் வைத்தல்

5. தேரோட்டம்

6. மஞ்சல் நீராட்டம்

மேலும், இந்த பண்டிகை கம்பம் நடுவதில் இருந்து மஞ்சல் நீராட்டம் விழா என மொத்தம் 20 நாட்களுக்கு நடைபெறும். பெரிய மாரியம்மனுக்கு கம்பம் நடும்போது தான் அருள்மிகு சின்ன மாரியம்மன் கோயிலிலும் (Arulmigu chinna Mariamman), அருள்மிகு வாய்க்கால் மாரியம்மன் (Arulmigu Vaikkal Mariamman) கோயிலிலும் கம்பம் நடப்படும்.

தேர்

 

 

பெரிய மாரியம்மன் கோயில் பண்டிகையின் போது இழுக்கப்படும் தேரானது மிகவும் பிரசித்தி பெற்றது. 30 அடி உயரம் கொண்ட இந்த தே சின்ன மாரியம்மன் கோயிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்படும். பெரிய மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 9 நாட்களுக்கு நவராத்திரி விழா (Navarathri Festival நடத்தப்படும். கோயிலில் நடத்தப்படும் பண்டிகைகளில் இதுவும் புகழ்பெற்றதாகும். அந்த ஒன்பது நாட்களும் அம்மனை ஒவ்வொரு கடவுளின் அலங்கரித்து தரிசனம் செய்யப்படுகிறாள். 

சிறப்பம்சம்

 

 

இம்மாபெரும் ஈரோடு நகரில் வாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன், கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன், கொங்கலம்மன் கோயில், சூரம்பட்டிவலசு மாரியம்மன் என ஏராளமான அம்மன் கோயில்கள் இருக்கின்றன. இவர்கள் அனைவருக்கும் தலைவியாக பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கிறாள். இதனாலே "பெரிய மாரியம்மன்" என்றும் அழைக்கப்படுகிறாள்.

Periya Mariamman தேர்த்திருவிழா 2022

 

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக திருவிழா எளிமையாக நடந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்த வருவதால், இந்தாண்டு குண்டம் தேர்த்திருவிழா வருகிற மார்ச் 15ஆம் தேதி இரவு 9 மணியளவில் பூச்சாட்டுதலுடன் தொடங்கவுள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள Search Around Web என்ற Tamil வலைதளப்பக்கத்தை தொடர்ந்திருங்கள்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்