Mon ,Jun 05, 2023

சென்செக்ஸ் 62,547.11
118.57sensex(0.19%)
நிஃப்டி18,534.10
46.35sensex(0.25%)
USD
81.57
Exclusive

ஏழரை சனியில் இருந்து விலகும் ராசிக்காரர்கள் நீங்க தான்…நிவாரணம் உண்டு | Sani Peyarchi Palan

Priyanka Hochumin Updated:
ஏழரை சனியில் இருந்து விலகும் ராசிக்காரர்கள் நீங்க தான்…நிவாரணம் உண்டு | Sani Peyarchi PalanRepresentative Image.

ஜோதிடத்தைப் பொறுத்தவரை சனி பகவான் மனிதர்கள் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களை தரும் நீதி கடவுளாவார். நவகிரகங்களுள் சனி பகவான் மட்டுமே மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால் அவரின் நிலையில் இருந்து சிறிய மாற்றம் ஏற்பாட்டாலும் அது 12 ராசிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இவர் அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் இருந்து நிவர்த்தியாகி இயல்பு நிலைக்கு திரும்புகிறார். பின்பு வரும் ஜனவரி 17, 2023 அன்று சனி பெயர்ச்சியாகி கும்ப ராசிக்குள் நுழைகிறார்.

ஏழரை சனியில் இருந்து விலகும் ராசிக்காரர்கள் நீங்க தான்…நிவாரணம் உண்டு | Sani Peyarchi PalanRepresentative Image

சனி பகவானின் இந்த பெயர்ச்சியான சில ராசிக்கு சாதகமாகவும், சில ராசிக்கு பாதகமாகவும் அமையும். அதே போல ஏழரை சனி மற்றும் சனி திசை நடக்கும் ராசிக்காரர்களுக்கு அது விலகும். அங்கு விலகுவதால் சனி திசை மற்றும் ஏழரை சனி சில ராசிக்கு தொடங்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்கு எப்படியான தாக்கம் நடைபெறும் என்பதைப் பற்றி பாப்போம்.

சனி பெயர்ச்சி நடக்கும் நேரம் : வரும் 2023, ஜனவரி 17 ஆம் தேதி இரவு 8 மணி 2 நிமிடத்தில் சனி பெயர்ச்சியாகி கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதனால் மூன்று ராசிக்கு சாதகமாகவும், நான்கு ராசிக்கு சனி திசையின் தாக்கம் அமையும் என்று கூறப்படுகிறது.

ஏழரை சனியில் இருந்து விலகும் ராசிக்காரர்கள் நீங்க தான்…நிவாரணம் உண்டு | Sani Peyarchi PalanRepresentative Image

பலன் பெரும் ராசிக்காரர்கள்

சனி பெயர்ச்சி 2023 அப்போது துலாம் மற்றும் மிதுன ராசிக்காரர்களுக்கு சனி திசையில் இருந்து விடுதலை கிடைக்கும். தனுஷ் ராசிக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறதால் அதன் தாக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். எனவே, சனி திசை மற்றும் ஏழரை சனியின் தாக்கம் நீங்கியவுடனே இதனை நாட்களாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் உங்களை வந்து சேரும். தொழில் செய்வோருக்கு லாபம் கிடைக்கும், பண வரவு நன்றாக இருக்கும், சமூகத்தில் அந்தஸ்து மொத்தத்தில் இவர்களுக்கு சந்தகமான காலம்.

ஏழரை சனியில் இருந்து விலகும் ராசிக்காரர்கள் நீங்க தான்…நிவாரணம் உண்டு | Sani Peyarchi PalanRepresentative Image

தாக்கம் ஏற்படும் ராசிக்காரர்கள்

இந்த 2023 சனி பெயர்ச்சியானது மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்க உள்ளது. ஏழரையின் தாக்கமானது மகரம் மற்றும் கும்ப ராசிக்கு வந்து சேரும். மேலும் கடகம் மற்றும் விருச்சக ராசிக்காரர்களுக்கு சனி திசை தொடங்க உள்ளது. எனவே, இந்த ராசிக்காரர்கள் எதிலும் கவனமாக இருப்பது அவசியம். கவலை வேண்டாம் நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப தான் சனி பகவான் நமக்கு பலனளிப்பார்.

பரிகாரம்: சனியின் மனதை சாந்தி படுத்த ஒவ்வொரு சனிக்கிழமையும் பரிகாரம் செய்வது நல்லது. மேலும் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபட்டு, இல்லாதவர்களுக்கு மற்றும் விலங்குகளுக்கு உணவளித்து நற்பலன்கள் அளிக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்