ஜூன் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:
ஜூன் மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷப ராசியில் சூரியன், மிதுன ராசியில் சுக்கிரன், கடக ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் சந்திரன் மற்றும் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூன் 07 ஆம் தேதி புதன் பகவான் ரிஷப ராசிக்கும், ஜூன் 15 ஆம் தேதி சூரிய பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 24 ஆம் தேதி புதன் பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 30 ஆம் தேதி செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதேபோல், ஜூன் 17 ஆம் தேதி சனி பகவானின் வக்கிர நிலையானது ஆரம்பமாகிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் கன்னி ராசி மற்றும் கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
ஜூன் மாத ராசிபலன் 2023 கன்னி:
கன்னி ராசிக்கு ராசி அதிபதியான சூரியனும், புதனும் 9 நாள்களுக்கு இணைந்து இருக்கப்பட உள்ளனர். இவர்கள் ரிஷபம் என்று சொல்லக் கூடிய லாப ஸ்தானத்தில் இருக்கப் போகிறார். இதனால், பூர்வீக சொத்து, முன்னோர்கள் சொத்து, பாரம்பரிய சொத்துக்கள், சுபகாரியம், சுபநிகழ்ச்சிகள் நடப்பது, வண்டி வாகனம் வாங்குவது உள்ளிட்ட அனைத்து நன்மைகளும் நடக்கும். அதிர்ஷ்ட யோகம் கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மகாலட்சுமியின் உதவியால், நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். அதீத சந்தோஷமான காலமாக இந்த காலம் அமைகிறது.
அதே சமயம், கன்னி ராசி நேயர்களுக்கு, கடகத்தில் இருக்கக்கூடிய செவ்வாய் மற்றும் சுக்கிரனும் எந்த வித பாதிப்புகளைக் கொடுக்க உள்ளது என்பதைக் கணலாம். கடகத்தில் செவ்வாய் நீட்சம் ஆகும் போது, 11 ஆம் ஸ்தானத்தில் லாபத்தில் நடக்கிறது. பெண்கள் தங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் காலமாக அமைகிறது. எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். வீடு வாங்கி, கிரகப் பிரவேசம் செய்யக்கூடிய மாதமாக அமைகிறது. எதிர்பார்க்கக்கூடிய அனைத்து விஷயங்களும் நல்லதாகவே நடக்கும். முயற்சி செய்தால், எல்லா செயல்களிலும் வெற்றியே உண்டாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். பொருளாதார சேர்க்கை சிறப்பாக உள்ளது. வரலாறு காணாத மிக முக்கியமான மாற்றம் உண்டாகும் நாள். அது உங்களுக்கு அபரிமிதமான நம்பிக்கையை உண்டாக்கும். ஏராளமான நல்ல விஷயங்கள் உண்டாகும். எல்லா விதமான பிரச்சனைகளும் விலகி விடும்.
சுக்கிரனும், செவ்வாயும் 11 ஆவது இடத்தில் சேர்ந்து இருப்பது, லாபத்தைத் தரும். விற்பதாலும் லாபம் உண்டாகும். சனி வக்ரப் பெயர்ச்சியினால், உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். தேவையில்லாத சலசலப்பு உண்டாகலாம். பிரச்சனைகள் ஏற்படலாம். சந்திரனின் வீடாக இருப்பதால், வீட்டில் மூத்த பெண்களுக்கு உடல் உறுப்புகள் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகலாம். தேவையில்லாமல் மற்றவர்களை நம்ப வேண்டாம். மகா கணபதி வழிபாடு உங்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…