ஜூன் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:
ஜூன் மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷப ராசியில் சூரியன், மிதுன ராசியில் சுக்கிரன், கடக ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் சந்திரன் மற்றும் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூன் 07 ஆம் தேதி புதன் பகவான் ரிஷப ராசிக்கும், ஜூன் 15 ஆம் தேதி சூரிய பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 24 ஆம் தேதி புதன் பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 30 ஆம் தேதி செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதேபோல், ஜூன் 17 ஆம் தேதி சனி பகவானின் வக்கிர நிலையானது ஆரம்பமாகிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் மேஷ ராசி மற்றும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
ஜூன் மாத ராசிபலன் 2023 மேஷம்:
பெண்களுக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். வீடு மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மாதத்தில் முயற்சிக்கலாம். இருப்பினும் சுக்கிரனும், செவ்வாயும் 4ஆம் இடமான சுகஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், தாய்வழி உறவினர்களில் ஒரு ஆணுக்கு பாதிப்பு ஏற்படும். அதேபோல், மேஷ ராசியை சேர்ந்த ஆண்கள் உங்களுடைய ரகசியங்கள் மற்றும் திட்டங்களை மற்றவர்களிடம் சொல்லாமல் இருப்பது நல்லது. பெண்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும்.
ஜூன் 17 ஆம் தேதிக்கு பிறகு சனி பகவான் வக்கிர நிலையடைவதால், கால் மூட்டு சம்பந்தபட்ட பிரச்சனைகள் வரும். வீட்டில் இருக்கும் பெரியோர்களின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். இந்த காலக்கட்டத்தில் குறிப்பாக ஆசைகள் நிறைவேறாமல் தள்ளிப்போகும். நண்பர்களிடையே தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு தள்ளிப்போகும். பெரிய தொகை முதலீடு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தை தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…