ஜூன் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:
ஜூன் மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷப ராசியில் சூரியன், மிதுன ராசியில் சுக்கிரன், கடக ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் சந்திரன் மற்றும் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூன் 07 ஆம் தேதி புதன் பகவான் ரிஷப ராசிக்கும், ஜூன் 15 ஆம் தேதி சூரிய பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 24 ஆம் தேதி புதன் பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 30 ஆம் தேதி செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதேபோல், ஜூன் 17 ஆம் தேதி சனி பகவானின் வக்கிர நிலையானது ஆரம்பமாகிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் மிதுன ராசி மற்றும் மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
ஜூன் மாத ராசிபலன் 2023 மிதுனம்:
மாதத்தின் முதல் பாதி அற்புதம். குறிப்பாக வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருப்பவர்கள் ஏராளமான நன்மைகள் நடைபெறும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும் அல்லது நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த அதிகாரிகள் மாறலாம். பெண்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்க்கவும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். வீட்டில் பெரியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுப விரயங்கள் ஏற்படும்.
9 ஆம் ஸ்தானத்தில் சனி வக்கிரம் பெறுவதால், முன்னோர்கள் சம்பந்தமான விஷயங்களில் தடை, தாமதம் ஏற்படும். சிலருக்கு இடுப்பு, ஆசன வாய் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பிரச்சனை வரும். தெய்வ நம்பிக்கை குறையலாம். அதிகப்படியாக கோபம் படுவதை தவிர்க்க வேண்டும். யாரிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். நிலம் சார்ந்த விஷயங்களில் முதலீடுகளில் எச்சரிக்கை வேண்டும். இந்த மாதத்தில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…