Sat ,Jul 20, 2024

சென்செக்ஸ் 80,604.65
-738.81sensex(-0.91%)
நிஃப்டி24,530.90
-269.95sensex(-1.09%)
USD
81.57
Exclusive

இவ்ளோ நாளா காத்திருந்தது நிறைவேறப் போகுது..! அதுக்கு இத மட்டும் கட்டாயம் செய்யணும்.. | Magaram Sani Vakra Peyarchi Palan 2023 in Tamil

Gowthami Subramani Updated:
இவ்ளோ நாளா காத்திருந்தது நிறைவேறப் போகுது..! அதுக்கு இத மட்டும் கட்டாயம் செய்யணும்.. | Magaram Sani Vakra Peyarchi Palan 2023 in TamilRepresentative Image.

ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அதேபோல், சில கிரகம் உதயமாகும், அஸ்தமனமாகும் மற்றும் பின்நோக்கி நகரும். அதன்படி, ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆபத்தான கிரகமாக கருதப்படும் சனி கிரகம் அனைத்து கிரகங்களை காட்டிலும் மெதுவாக நகரக்கூடியது. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளுவார்.

அந்தவகையில், சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் ஜனவரி 17 ஆம் தேதி அவிட்டம் 3 ஆம் பாதத்தில் மாலை 06.30 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு, மார்ச் 14 ஆம் தேதி சதய நட்சத்திற்கு மாறினார். இந்த நிலையில், வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் பின்நோக்கி நகரப் போகிறார். இதை தான் 'சனி வக்ரம்' என்று சொல்வார்கள். பொதுவாக, சனி 133 நாட்களுக்கு வக்ர நிலையில் நகரும். அதன்படி, ஜூன் 17 தேதியில் இருந்து வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை வக்ர நிலையிலேயே இருப்பார். இந்த காலக்கட்டத்தில் மகர ராசியினர் எம்மாதிரியான பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

இவ்ளோ நாளா காத்திருந்தது நிறைவேறப் போகுது..! அதுக்கு இத மட்டும் கட்டாயம் செய்யணும்.. | Magaram Sani Vakra Peyarchi Palan 2023 in TamilRepresentative Image

சனி வக்ர பெயர்ச்சி 2023 மகரம்:

மகர ராசியைப் பொறுத்த வரை, சனி வக்ரப் பெயர்ச்சியினால் உங்களுக்கு நன்மையே உண்டாகும். இதுவரை, இருந்து வந்த பிரச்சனைகள், கவலைகள் அனைத்தும் குறையும். அதே நேரத்தில் பிரச்சனைகள் குறையவில்லை என்றாலும், புதிய பிரச்சனை எதுவும் ஏற்படாது. குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த கவலைகள் நீங்கி விடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் உண்டாவதற்கான சிறப்பு காலமாக அமைகிறது. வீட்டில் மகிழ்ச்சி நிறைந்த சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, உங்களுக்கு சாதகமான பலன்களைப் பெறப்போகிறீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

உங்கள் சாதுரியமான பேச்சுக்களால், முன்னேற்றம் அடைவீர்கள். எல்லாவற்றிலும் சிறந்து செயல்பட்டு வெற்றியை ஈட்டக்கூடிய நேரம். பொருளாதார ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகி, வரவு மேம்படும். பணப்புழக்கம் உண்டாகும். நீங்கள் விரும்பிய விஷயங்களில் ஈடுபடுவதால், மனமகிழ்ச்சி உண்டாகும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் எந்த பிரச்சனையும் இன்றி சீராக முடிவடையும் நாள். வீடு கட்டுதல், வண்டி வாகனம் வாங்குவது உள்ளிட்டவை அனைத்தும் நிறைவேறும். ஏழரை சனியின் பிடியிலிருந்து, விடுபடும் போது சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.

இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், உங்களின் திறமையை வளர்த்துக் கொண்டு, மேன்மை அடையலாம். சுபஸ்தானத்தில் குரு இருப்பதால், இடமாற்றம் நிகழலாம். இதுவரை இருந்த மந்தத்தன்மை அனைத்தும் விலகி விடும். சமீபத்தில் பாதிக்கப்பட்ட விஷயத்தில் இருந்து, விரைவில் குணமாக்கப்படுவீர்கள். தாயாரின் உடல்நிலை சார்ந்தவற்றில் நல்லது நடக்கும். சில காரியங்களில் தடைகள் உண்டாகலாம். இருப்பினும், தடைகளை விலக்கி மேன்மை அடைவதற்கான வழியைத் தேடுவீர்கள்.

மாணவ, மாணவியர்களுக்கு மந்தத் தன்மை உண்டாகலாம். திடீர் விபத்த்கள் உண்டாவதற்கான வாய்ப்பு அதிகம். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி, ஆரோக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சிகரமான சூழ்நிலைகள் மேம்படும். உங்களுக்குச் சாதகமான நிலை ஏற்படும். தொழில் செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். தேவையில்லாத பிரச்சனைகளைச் சந்தித்து சிரமப்பட்ட விஷயங்கள் அனைத்தும் விலகி உயர்வு பெறுவீர்கள். ஏளனமாய் பேசிய நபர்கள் முன்பு நீங்கள் நிமிர்ந்து விளங்குவீர்கள்.

பொருளாதார ரீதியான சிந்தனை அதிகரிக்கும். சுபஸ்தானத்தில், குரு ராகு என  இருவரும் இருப்பதால், நன்மை, தீமை இரண்டுமே உண்டாகும். பொருளாதாரத்தில் மிதமான வளர்ச்சி இருக்கும். மூத்த சகோதரர், சகோதரி வழியில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும் வகையில் நன்மைகள் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமணத்தடைகள் நீங்கி, திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகி நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சியையும், ஆதாயத்தையும் பெறுவீர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்