Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,895.44
899.13sensex(1.23%)
நிஃப்டி22,415.30
291.65sensex(1.32%)
USD
81.57
Exclusive

Margazhi Rasi Palan 2022 Mesham : வாயைத் திறக்காமல் அமைதியா இருக்கனுமா..?

Manoj Krishnamoorthi Updated:
Margazhi Rasi Palan 2022 Mesham : வாயைத் திறக்காமல் அமைதியா இருக்கனுமா..?Representative Image.

மார்கழி மாதத்தில் மேஷ ராசிக்காரரே  வக்கிர செவ்வாயாக உள்ளார். மேலும் 1 இல் இராகு, 2 இல் செவ்வாய் வக்கிரம், 7 இல் கேது, 8 இல் இருக்கும் சூரியன் 9 இல் சஞ்சாரம் கொள்கிறார், 9 இல் புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை, 10 இல் சனி மற்றும் 12 இல் குரு  அமைந்துள்ளது. இந்த கிரக நிலையின் மாற்றம் என்ன பலன் அளிக்கும் (Margazhi Month Tamil Rasi Palan 2022 Mesham) என அறிய இந்த பதிவு உதவியாக இருக்கும். 

டிசம்பர் மாத ராசிபலன் 2022- மேஷம் ( Margazhi Month Tamil Rasi Palan 2022 Mesham)

Margazhi Rasi Palan 2022 Mesham : வாயைத் திறக்காமல் அமைதியா இருக்கனுமா..?Representative Image

மேஷம்

பொது பலன்: 

வக்கிர நிலையில் செவ்வாய் இருப்பதால் பேச்சில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பேச்சில் கவனம் காட்டினால் பிரச்சனை இல்லாமல் இருக்கலாம். குடும்பத்தில் பிரச்சனை இருந்தாலும் ஓரளவு புரிதல் இருக்கும்.

குடும்ப  வாழ்க்கை:

இல்லற வாழ்வில் சிறிய மனஸ்தாபம் ஏற்படலாம்.  இருப்பினும் 9 இல் இருக்கும் சுக்கிரன் கொஞ்சம் இனிமையான தருணங்களை உருவாக்கும். திருமண முயற்சி செய்யலாம், திருமண தடை நீங்கும். 

தொழில்: 

ராசிநாதன் செவ்வாய் வக்கிரமாக இருப்பது உங்கள் தொழில் ஸ்தானத்தை சற்று இக்கட்டான சூழலில் செயல்படுத்தும். சூரியன் மாதத்தில் 9 ஆம் வீட்டிற்கு சஞ்சாரம் கொள்கிறார் இதனால் தொழிலில் பெரிய முன்னேற்றம் எதிர்க்க முடியாது. 9 இல் இருக்கும் புதன் கல்வியில் புதிய முயற்சியை சாதகமாக அமைக்கும், மாணவர்களுக்கு அரசு சார்ந்த உதவி கிடைக்கும். எதிர்பாராத சூழலில் இருந்து பண வரவு உண்டாகும். 

உடல்நலம்: 

ஜென்மத்தில் இராகு மற்றும் 7 இல் கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உடலில் இருக்கும் சிறுசிறு தொல்லைகள் பெரும் தொந்தரவு அளிக்கும். செவ்வாயின் பார்வை 8 வீட்டில் இருப்பதால் ஆரோக்கியத்தில் குறை உண்டாகும், ஆனால் 12 இல் இருக்கும் குருவின் பார்வை 8 ஆம் வீட்டில் விழுவது ஆரோக்கிய குறையை ஓரளவு மேம்படுத்தும்.   

சந்திராஷ்டமம்: 

டிசம்பர் 20, 21, 22

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்