Fri ,Dec 08, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

Margazhi Rasi Palan 2022 Magaram : ஜென்மத்தில் ராசிநாதன் இருப்பது நல்லதா..? மார்கழி பலன்...!

Manoj Krishnamoorthi Updated:
Margazhi Rasi Palan 2022 Magaram : ஜென்மத்தில் ராசிநாதன் இருப்பது நல்லதா..? மார்கழி பலன்...! Representative Image.

மகர ராசிக்காரரே 2022 மார்கழி மாதத்தில் ஜென்மத்தில் சனி ஆட்சி பலம் பெற்று இருக்கிறது. மேலும் 3இல் குரு,  4 இல் இராகு, 5 இல் செவ்வாய் வக்கிரம், 10 இல் கேது 12 ஆம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன்  பெயர்ச்சி செய்கிறது. இதனால் மார்கழியில்  மகரத்திற்கு என்ன மாதிரியான பலன் உண்டாகும் என்பதை அறியலாம்.  

மார்கழி மாத ராசிபலன் 2022- மகரம் (Margazhi Month Tamil Rasi Palan 2022 Magaram)

Margazhi Rasi Palan 2022 Magaram : ஜென்மத்தில் ராசிநாதன் இருப்பது நல்லதா..? மார்கழி பலன்...! Representative Image

மகரம் 

பொது பலன்:

ராசிநாதன் சனி ஆட்சி பலமாக இருப்பது இந்த மாதம் பலவித நலன்களை அளிக்கும். தொழிலில் இருக்கும் சிக்கலை லாவகமாகத் தீர்க்கும் சாமர்த்தியம் கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டவர் மூலம் முக்கிய உதவி கிடைக்கும். 

குடும்ப  வாழ்க்கை:

சுக்கிரன் 12 இருந்தாலும் குடும்பத்தில் நல்ல புரிதல் இருக்கும். இல்லற வாழ்வில் நல்ல அன்யோன்யம் கூடும். சுற்றத்தார் மத்தியில் உங்கள் புகழ் அதிகரிக்கும், பலரின் சந்திப்பு கிடைக்கும்.  

தொழில்: 

நீதி துறை மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு  சாமர்த்திய முறையில் வருமானம் கூடும். சனியின் பார்வை குருவின் மீது விழுவது புகழை அதிகப்படுத்தும். புதிய மனிதர்கள் மூலம் ஆதாயம் உண்டு. தொழில் சார்ந்த குழப்பங்களுக்கு தீர்க்கமான முடிவு பிறக்கும். செல்வ நிலையில் பிரச்சனை இருக்காது.  

உடல்நலம்:

சுக்கிரன் 12 இல் வருவதால் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். தூக்கமின்மை பிரச்சனை சரியாகும், உடலுக்கு நல்ல ஓய்வு தேவைப்படும். 

சந்திராஷ்டமம்:

ஜனவரி 9, 10, 11

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்