Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

Margazhi Rasi Palan 2022 Thulam : வாயை திறக்கமா இருந்தால் இந்த மாதம் சூப்பர்.....!

Manoj Krishnamoorthi Updated:
Margazhi Rasi Palan 2022 Thulam : வாயை திறக்கமா இருந்தால் இந்த மாதம் சூப்பர்.....!Representative Image.

துலாம் ராசிக்காரரே 2022 மார்கழி மாதத்தில் ஜென்மத்தில் கேது இருப்பது என்ன மாதிரியான பலன் அளிக்கும் என்பதை பற்றி கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3 இல் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை, 4 இல் சனி மற்றும் 6 இல் குரு, 7 இல் இராகு, 8 இல் செவ்வாய் சஞ்சாரம் கொள்கிறது. 

மார்கழி மாத ராசிபலன் 2022- துலாம் (Margazhi Month Tamil Rasi Palan 2022 Thulam)

Margazhi Rasi Palan 2022 Thulam : வாயை திறக்கமா இருந்தால் இந்த மாதம் சூப்பர்.....!Representative Image

துலாம்

பொது பலன்: 

ராசியின் அதிபதியை செவ்வாய் பார்க்கிறார். இந்த மாதம் செவ்வாய் நிலை சாதகமாக இல்லாது இருப்பதால் பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருங்கள். குடும்ப உறுப்பினர் மூலம் நிதி நிலையில் ஆதாயம் ஆகும். 

குடும்ப  வாழ்க்கை:

சுக்கிரனை செவ்வாய் பார்ப்பது வீட்டில் சில குழப்பங்களை உருவாக்கும். திருமண முயற்சியில் பெரிய முன்னேற்றம் இருக்காது. காதல் வாழ்வில் சச்சரவு ஏற்படலாம், முக்கிய முடிவு எடுப்பதில் நிதானம் தேவை. குருவின் பார்வை சாதகமாக இருப்பது உறவினர் மத்தியில் அங்கீகாரம் கிடைக்கும், ஆனால் அதிக போராட வேண்டியதாக இருக்கும். 

தொழில்: 

தொழில் ஸ்தானத்தில் அதிகமான வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்த்து கொள்ள வேண்டும். செவ்வாயின் பார்வை 2 வீட்டை பார்ப்பதால் செல்வ நிலையில் சிறிய தடுமாற்றம் இருக்கும். ஆனால் எதிர்பாராத பண வரவு உண்டாகும். வியாபார ரீதியாக சில பயணங்கள் உண்டாகும். 

உடல்நலம்: 

ஜென்மத்தில் இருக்கும் கேது ஆரோக்கியத்தில் சிறிய தொல்லை அளிக்கும். தலைவலி போன்ற பிரச்சனை உண்டாகும். தூக்கமின்மை பிரச்சனையால் சிலருக்கு ஆரோக்கியத்தில் குறை உண்டாகும். 

சந்திராஷ்டமம்:

ஜனவரி 3, 4, 5

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்