Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Mesha Rasi Palan November 2022 In Tamil : மேஷ ராசிக்கு இந்த மாசம் சுமார் தான்..!

Manoj Krishnamoorthi October 26, 2022 & 14:30 [IST]
Mesha Rasi Palan November 2022 In Tamil : மேஷ ராசிக்கு இந்த மாசம் சுமார் தான்..!Representative Image.

சகஜமாக பழகி புதிய மனிதர்களிடம்  நட்பை உருவாக்கி கொள்ளும் மேஷ ராசிக்காரரே செவ்வாய் வக்கிரம் கொண்டு மிதுனத்திலும் அதே நேரத்தில் மகரத்தில் சனி வக்கிரமாக இருப்பதால் நவம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்? புதிய முயற்சிகள் எடுக்கலாமா... ! போன்ற கேள்விக்கு பதிலாக இந்த பதிவு இருக்கும்.


Representative Image. Most Read: மத்திய அரசு அளிக்கும் தமிழ்நாடு To காசி இலவச பயணம்..! எப்படி பதிவு செய்வது? 


நவம்பர் மாத ராசிபலன் 2022- மேஷம் (Mesha Rasi Palan November 2022 In Tamil)

Mesha Rasi Palan November 2022 In Tamil : மேஷ ராசிக்கு இந்த மாசம் சுமார் தான்..!Representative Image

மேஷம்

பொது பலன்: 

உங்களுக்கு அனைத்தும் இருந்தும் எதுவுமில்லாதது போன்ற நிலை மனதில் இருக்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து கொள்வது நல்லதாகும். சுப செலவு வரும், செலவை சமாளிக்கும் வகையில் பண வரவு உண்டு. 

குடும்ப  வாழ்க்கை:

திருமண வாழ்க்கை ஓரளவு நன்றாக இருக்கும், திருமணமாகாதவர்களுக்கு திருமண காரியம் போராட்டத்திற்கு பிறகு அமையும். காதல் வாழ்வில் வேறுமை ஏற்படும். நண்பர்களின் ஒத்தாசை தேவைப்படும்.

தொழில்: 

தொழில் அமைதியான நிலை இருக்கும், வழக்கம்போல செல்லும். ஆனால் மனதில் வேலை சார்ந்த குழப்பம் பற்றிய எண்ணம் அதிகமாக இருக்கும். மாதத்தில் பிற்பகுதி செவ்வாய் ரிஷபத்தில் வருவதால் வேலை மாற்றம் பற்றிய எண்ணம் வரும். செல்வ நிலை  சுமுகமாக இருக்கும், ஆனால் செலவு அதிகரிக்கும். கல்வியில் கவனம் மாறி மாறி வரும். 

உடல்நலம்: 

ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, ஆனால் மனநிலை மட்டும் ஏற்ற இறக்கமாக இருக்கும். மனதிற்கு விருப்பமானவர்களுடன் பொழுதை செலவிட வேண்டும். 

சந்திராஷ்டமம்:

நவம்பர் 22, 23, 24 


மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்