நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும். ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.
இந்த ஆண்டு நடக்க உள்ள ராகு – கேது பெயர்ச்சியினால், மேஷ ராசிக்காரர்களுக்கு வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகலாம். மனதிற்குப் பிடித்தவர்களால் மனவருத்தங்கள் உண்டாகலாம். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பதற்கான திறமையும், வாய்ப்பும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்குவதுடன், ஒற்றுமை பிறக்கும். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகலாம். எதிர்பாராத சில உதவிகளின் மூலம், நீண்ட நாள் தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் நேரம். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
பொருளாதாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். செலவுகளின் தன்மை அறிந்து செயல்பட்டால், சேமிப்புத் தொடங்குவதற்கான காலமாக அமைகிறது. உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக நீங்கி விடும். பார்வை சார்ந்த இன்னல்கள் நீங்கும். நுட்பமான விஷயங்களில் செயல்படும் போது, தகுந்த ஆலோசனைகளைப் பெற்று செயல்பட வேண்டும். உத்தியோகம் தொடர்பாக அலைச்சல் அதிகரிக்கலாம். சிந்தனைகளின் போக்கில் கவனம் வேண்டும். வாழ்க்கைத் துணையிடம் புரிந்து, அனுசரித்துச் செல்வது நல்லது. தடைபட்டு வந்த சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் கைகூடும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.
மாணவர்களுக்குக் கல்வியில் இருந்து வந்த மந்தத்தன்மை படிப்படியாகக் குறையும். வெளியூர் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். நண்பர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவால் சிறந்து விளங்குவீர்கள். பிற மொழி நண்பர்கள் கிடைப்பர். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக முயற்சி செய்பவர்களுக்கு, தகுதிக்கேற்ற உயர்வான பதவி கிடைக்கும். முயற்சிக்கு உண்டான உயர்வும் பாராட்டுகளும் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். மேலும், உங்களது ரகசியங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.
வியாபாரத்தில் மேன்மை காணப்படும். சிறு தூர பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்பட்டால் மேன்மை அடைய முடியும். அரசு சார்ந்த முயற்சிகளில் பொறுமையைக் கண்டால் வெற்றி நிச்சயம் உண்டாகும். சூழ்நிலைகளுக்கேற்ப விட்டுக் கொடுத்து சென்றால், சாதகமான நிலை உண்டாகும். விவசாயிகளுக்கு கால்நடைகளின் மூலம் லாபம் உண்டாகும். விவசாயத்தில் புதிய நுட்பமான முறைகளைக் கையாண்டு செயல்படுவீர்கள். வர்த்தம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
பரிகாரம்:
ராகு நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு அகல் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம், செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுகத் தடைகள் நீங்கி எண்ணங்களில் தெளிவு உண்டாகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…