Mon ,Mar 27, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: குடும்பத்துடன் இருப்பதே இன்பம் என்பது புரியும் நாள்.... 1.12.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan: குடும்பத்துடன் இருப்பதே இன்பம் என்பது புரியும் நாள்.... 1.12.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 15 ஆம் நாள் வியாழன்கிழமை (1.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- லாபம்

விருச்சிகம்- உயர்வு

தனுசு- நலம்

மகரம்- பெருமை

கும்பம்- நன்மை

மீனம்- வாழ்வு

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45  வரை

மாலை: -

Part 2:  மேஷம்- கன்னி ராசிபலன் (1.12.2022, வியாழன்)

Nalaya Rasi Palan: குடும்பத்துடன் இருப்பதே இன்பம் என்பது புரியும் நாள்.... 1.12.2022 ராசிபலன்! Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களின் பல நாட்கள் ஆசை இன்று கைகூடும். தொழிலில் ஸ்தானம் வளர்ச்சி கொள்ளும். அலுவலகத்தில் திறமை அங்கீகரிக்கப்படும். பணப்புழக்கம் சிறப்பாக உள்ளது. 

குடும்பத்தில் உள்ளவரிடம் அன்பாக நடந்து கொள்ளுவீர்.  கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவீர். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்  

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: குடும்பத்துடன் இருப்பதே இன்பம் என்பது புரியும் நாள்.... 1.12.2022 ராசிபலன்! Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வாழ்வில் அடுத்த நிலை செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் வேலைகள் சிறப்பாக திட்டமிட்டபடி நடக்கும். சக பணியாளரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  செலவை குறைத்து கொள்ள வேண்டும். 

வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் உண்டு. சுற்றத்தாரின் மதிப்பை பெறுவர், புதிய நட்பு கிடைக்கும். காதல் வாழ்வில் பொறுமை காப்பது ஊறவை காக்கும். சருமம் சார்ந்த தொல்லை உண்டாகும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: குடும்பத்துடன் இருப்பதே இன்பம் என்பது புரியும் நாள்.... 1.12.2022 ராசிபலன்! Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று இனிமையாக நாள் செல்லும், தொழிலில் அடுத்த நிலையை அடைய சந்தர்ப்பம் அமையும். கூடுதல் செலவுகள் உண்டாகலாம், உஷாராக இருப்பது நல்லது. 

வீட்டில் பேசும் போது அமைதியாக இருப்பது நல்லது. குடும்ப தேவைக்காக பணம் அதிகமாக செலவாகும். ஆரோக்கியத்தில் முதுகுவலி, இடுப்பு வலி உண்டாகும், ஓய்வு தேவைப்படும்.  நலம்!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: குடும்பத்துடன் இருப்பதே இன்பம் என்பது புரியும் நாள்.... 1.12.2022 ராசிபலன்! Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும், மனம் எதிர்பார்த்த விஷயத்தை அடைய முடியும்.  பணியில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகமாகும். பண வரவு உண்டு.

குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை செலவிடுவீர். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, சிறப்பாக செயல்பட முடியும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: குடும்பத்துடன் இருப்பதே இன்பம் என்பது புரியும் நாள்.... 1.12.2022 ராசிபலன்! Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று தடைகளை கடந்து சாதிக்க மிகவும் போராட வேண்டியதாக இருக்கும். வியாபார ரீதியான பயணம் உண்டு. வரவு செலவு இரண்டும் இணைந்தே இருக்கும், சுப செலவு அதிகமாக இருக்கும். 

வீட்டில் அமைதியாக இருப்பதால் நல்ல உறவு மலரும். குடும்பத்தினர் மூலம் உதவி கிடைக்கும்.  ஆரோக்கியத்தில் கவனம் தேவை, மருத்துவர் ஆலோசனை தேவைப்படும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: குடும்பத்துடன் இருப்பதே இன்பம் என்பது புரியும் நாள்.... 1.12.2022 ராசிபலன்! Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நீங்கள் ஏற்படுத்திய சிக்கலை சரி செய்வதிலே நாள் ஓடிவிடும். அலுவலகத்தில் வேலை அழுத்தம் கூடும். பண வரவு குறையும், கையிருப்பை செலவிட வேண்டியதாக இருக்கும். 

குடும்பத்தினர் உடன் வெளியூர் செல்வீர், சிறிய பயணம் உண்டு. மனம் குடும்பத்தினர் உடன் இருக்கும்போது ஆனந்தமாக இருக்கும். வயிறு சார்ந்த தொல்லை உண்டாகும், உணவு பழக்கத்தில் கவனம் தேவை. வாழ்வு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 5

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்