மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 14 ஆம் நாள் வியாழக்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
ராசிபலன்:
மேஷம் - சோதனை
ரிஷபம் - சுபம்
மிதுனம் - பாராட்டு
கடகம் - கவனம்
சிம்மம் - நம்பிக்கை
கன்னி - சிக்கல்
நல்ல நேரம்:
காலை: 10.45 - 11.45 வரை
மாலை: -
மேஷம் | Mesham Nalaya Rasi Palan
உங்க பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம். அதனால், எதிலும் அவரசம் காட்டாமல், நம்பிக்கையோடு கையாளுவது நல்லது. இல்லையென்றால் வீண் விவாதங்கள் வந்து நிற்கும். வேலை செய்யும் இடத்தில் வேலை அதிகமாக இருக்கும். உங்க துணையிடம் கேலியாக பேசுவதை தவிர்க்கவும். பண வரவு சற்று குறைவாக தான் இருக்கும். அனாவசிய செலவை குறைக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சோதனை!
அதிர்ஷ்ட நிறம்: சந்தன வெள்ளை நிறம்
அதிர்ஷ்ட எண்: 6
ரிஷபம் | Rishabam Nalaya Rasi Palan
புதிய வாய்ப்புகள் தேடி வரும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இவ்வளவு நாட்களாக எதற்கு ஆசைப்பட்டீர்களோ, அதை அடைய வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பொறுமை தேவை. சுபம்!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 9
மிதுனம் | Mithunam Nalaya Rasi Palan
பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிவிடாதீர்கள், அப்பறம் அவஸ்தை பட வேண்டிருக்கும். அனாவசிய பேச்சை குறைத்து கொள்வது நல்லது. தாய்மாமன் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு. வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். மேலதிகாரிகள் உங்களின் பணித்திறனை பார்த்து பாராட்டுவார்கள். உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அநாவசியமாக தெரியாதவர்களிடன் பேச வேண்டாம். பாராட்டு!
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 7
கடகம் | Kadagam Nalaya Rasi Palan
பணிச்சுமையால் செம சோர்வில் இருந்தவர்களுக்கு கொஞ்சம் ஃபிரீ டைம் கிடைக்கும். நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசும்போது சற்று கவனத்தோடு பேசுங்கள். இல்லையெனில் அதுவே நட்பை முறித்துவிடும். உங்களுடைய துணைக்கு உங்களின் மீது காதல், பாசம் அதிகரிக்கும். உங்களுடைய வார்த்தைக்கு உறவினர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். தொழிலில் லாபம் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும். கவனம்!
அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்
அதிர்ஷ்ட எண்: 4
சிம்மம் | Simmam Nalaya Rasi Palan
வேலை செய்யும் இடத்தில் நிறைய போட்டி இருக்கும். ஆனால், அதையெல்லாம் சாமாளிச்சி பாராட்டு பெறுவீர்கள். கடன உழைப்பு தேவை. வாழ்க்கையில் நன்மை தீமையை அறிந்துக் கொள்ளும் நாள் இன்று. நீங்க உங்க கணவன் அல்லது மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். இதனால் உறவில் அன்பு அதிகரிக்கும். பணவரவு உண்டு. ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். நம்பிக்கை!
அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்
அதிர்ஷ்ட எண்: 5
கன்னி | Kanni Nalaya Rasi Palan
கடினமான வேலையை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. பொறாமை குணத்தால் மனதில் நிம்மதி இருக்காது. நெருங்கிய நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ வியாபாரம் செய்பவர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய நாள். திருமணமானவர்கள் தேவையில்லாத காரணத்தால் சில சலசலப்பு ஏற்படும். செலவுகள் செய்வதில் அதிக கவனம் தேவை. சிக்கல்!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்
அதிர்ஷ்ட எண்: 6
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…