Sat ,Apr 01, 2023

சென்செக்ஸ் 57,794.75
181.03sensex(0.31%)
நிஃப்டி17,012.25
60.55sensex(0.36%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | வருடத்தின் கடைசி நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 31.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | வருடத்தின் கடைசி நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 31.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 16 ஆம் நாள் சனிக்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி] நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்: 

துலாம் - அனுகூலம்

விருச்சிகம் - எதிர்ப்பு

தனுசு - பொறுமை

மகரம் - சோதனை

கும்பம் - சிக்கல்

மீனம் - கவனம்

நல்ல நேரம்:

காலை: 10.45 - 11.45 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [31.12.2022]

Nalaya Rasi Palan | வருடத்தின் கடைசி நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 31.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் | Thulam Nalaya Rasi Palan

அதிர்ஷ்டமான நாள். கடினமான பணிகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி காண்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். நெருக்கமானவர்களிடம் சின்ன சின்ன கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். ஆசைப்பட்ட பொருள் வாங்குவீர்கள். பெரியோரிடத்தில் அனுசரித்து செல்லுங்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan | வருடத்தின் கடைசி நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 31.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் | Viruchigam Nalaya Rasi Palan

ஆன்மீக ஈடுபாடுகளில் நேரத்தை செலவிடுவதன் மூலமாக மன ஆறுதல் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேறுவதில் உங்களுக்கு அலைச்சல் உண்டாகும். அதேபோல், விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது உத்தமம். பணியிடத்தில் மறைமுக விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தோரின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடலாம். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளநிலம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan | வருடத்தின் கடைசி நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 31.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு | Dhanusu Nalaya Rasi Palan

எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக சொந்த ஊர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் சோர்வாக உணர்வீர்கள். குடும்பத்தினருடன் கலந்து பேசி பழைய பிரச்சனைகளுக்கு முடிவு காண்பீர்கள். துணையுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்க அனுசரித்து நடந்துக்கொள்வது நல்லது. தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்ப சூழலுக்காக கடன் வாங்குவீர்கள். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan | வருடத்தின் கடைசி நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 31.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் | Magaram Nalaya Rasi Palan

சுமாரான நாள். இருந்தாலும், நம்பிக்கை இழக்க வேண்டாம். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும். சுபகாரியம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படலாம். சோதனை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan | வருடத்தின் கடைசி நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 31.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் | Kumbam Nalaya Rasi Palan

சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். எனவே, புத்திசாலித்தனமாக செயல்பட்டால் அனுகூலப் பெறலாம். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். வேண்டுமென்றே சிலர் உங்களை வம்பிற்கு இழுப்பார்கள். சுதாரித்திக்கொண்டு சிக்கிக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் ஒருவருக்கு மருத்துவ செலவு ஏற்படும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan | வருடத்தின் கடைசி நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 31.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் | Meenam Nalaya Rasi Palan

எல்லா விஷயங்களிலும் பொறுமையாக இருக்க வேண்டிய நாள். ந்த செயலையும் செய்வதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். அதேபோல், மற்றவர்களிடம் உரையாடும் போதும் வார்த்தைகளில் கவனம் தேவை. நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பணியிடத்தில் சில தடைகளும் ஏமாற்றங்களும் ஏற்படும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்