'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம்.
அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 22 ஆம் நாளுக்கான [05 பிப்ரவரி 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!
நல்ல நேரம்:
காலை: 07.30 - 08.30 வரை
மாலை: 03.30 - 04.30 வரை
கடின முயற்சியால் சிறந்த வளர்ச்சி காணப்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவுகள் நீங்கி அன்பும் பாசமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட இடத்திற்கு சென்று வருவீர்கள். காதல் உறவில் இருப்பவர்கள் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வரவு!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 2
எதிர்காலத்தை பற்றிய சிந்தனையால் வருத்ததுடன் இருப்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். துணையுடன் அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்களிடம் அனாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனத்தின்போது கவனம் தேவை. செலவுகள் தேடி வரும், திட்டமிட்டு பணத்தை செலவு செய்ய வேண்டும். வெளி உணவினை தவிர்ப்பது நல்லது. பயம்!
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 8
உங்கள் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். தடைப்பட்டு நின்ற காரியங்கள் நடந்து முடியும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். சிலருக்கு புதிய நபர்களின் பழக்கம் ஏற்படும். பணியிடத்தில் கீழ் பணிபுரிவர்களால் பிரச்சனை ஏற்படலாம், உணர்ச்சிகளை கட்டுபடுத்த வேண்டும். எதிர்பாராத சில உதவிகள் தேடி வரும். பணபுழக்கம் திருப்திகரமாக இருக்கும். திடீர் ஆன்மீக பயணம் செய்ய வாய்ப்புள்ளது. நன்மை!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட எண்: 5
சுமாரான நாளாக தான் இருக்கும். எனவே, அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். வியாபாரத்தில் கூட்டாளியால் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்பாராத செலவுகள் கவலையை கொடுக்கும். யாரிடம் பேசும் போதும் பேச்சில் பொறுமையும், நிதானமும் வேண்டும். வாகன பயணத்தின்போது எச்சரிக்கை வேண்டும். விலையுயர்ந்த பொருள் திருடுபோகலாம். தோல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். விலங்குகளிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. செலவு!
அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்
அதிர்ஷ்ட எண்: 3
காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள். வியாபாரம் அற்புதமாக இருக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். பணப்புழக்கம் சிறப்பாகவே உள்ளது. நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உங்களின் மீதே உங்களுக்கு புது நம்பிக்கை பிறக்கும் நாள். ஆதாயம்!
அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்
அதிர்ஷ்ட எண்: 8
சிந்தனையின் போக்கில் உங்களிடம் உறுதியும் உத்வேகமும் உண்டாகும். ஏழைகளுக்கு உதவி செய்வீர்கள். உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும் நாள். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். நிதிநிலைமை அற்புதமாக இருக்கும். துணையிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். நீண்ட நாள் கழித்து மனதிற்கு பிடித்தவரை சந்திப்பீர்கள். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்களிடமிருந்து இனிமையான செய்தி காத்திருக்கிறது. சுகம்!
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்
அதிர்ஷ்ட எண்: 7
உங்க துணை உங்களை புரிந்து நடந்துக்கொள்வார். கடனாக கொடுத்த பணம் வந்தடையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு சிறப்பான நாள். சில விஷயங்களில் நேர்மையாக நடந்து பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணம் செய்யும் சூழல் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலமான பலன்களை அனுபவிப்பீர்கள். நேர்மை!
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்
அதிர்ஷ்ட எண்: 4
ஏமாற்றம் மிகுந்த நாள், அதனால் அதிகமாக எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் பணிசுமை அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். வேண்டுமென்றே சிலர் உங்களை வம்பிற்கு இழுப்பார்கள். சுதாரித்திக்கொண்டு சிக்கிக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் ஒருவருக்கு மருத்துவ செலவு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். புதிய நபர்களால் நண்பர்களுடன் பிரச்சனை ஏற்படும். கவலை!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்
அதிர்ஷ்ட எண்: 1
விருப்பத்தை அடைவதில் சில தடைகளை சந்திக்கலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். தனிமையாக இருப்பது போன்று உணர்வீர்கள். தந்தைவழி உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். தாமதம்!
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்
அதிர்ஷ்ட எண்: 8
உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். இத்தனை நாட்களாக இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நிதிநிலைமை தாராளமாகவே உள்ளது. இதனால், சேமிப்பு உயரும். கூட்டு தொழிலில் லாபம் மேம்படும். அனுசரனையான வார்த்தைகளின் மூலம் பிறரை கவர்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். சுபகாரியங்களில் இருந்து வந்த அலைச்சல்கள் குறையும். இரும்பு சார்ந்த வியாபாரம் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். லாபம்!
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
அதிர்ஷ்ட எண்: 3
வியாபார பணிகளில் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய நாள். கணவன்- மனைவிக்கு இடையே அனுசரித்து செல்வது உத்தமம். வர்த்தக பணிகளில் அதிகமாக முதலீடு செய்வதை குறைத்துக் கொள்ளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். நினைத்து காரியங்கள் நிறைவேறுவதில் தடை ஏற்படலாம். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற செலவுகளை எதிர்க்கொள்ள நேரும். அச்சம்!
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்
அதிர்ஷ்ட எண்: 5
வீண் பேச்சால் வம்பை தேடிக்கொள்வீர்கள். நண்பர்களால் அலைச்சல் ஏற்படும். பணியிடத்தில் மறைமுக விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். பெற்றோர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்ளவும். மாணவர்களுக்கு சிறப்பான நாள் அல்ல. பகை!
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 8
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…