Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினருக்கு அற்புதமான நாள்.. கனவுகள் நிறைவேறும்.. | 07 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசியினருக்கு அற்புதமான நாள்.. கனவுகள் நிறைவேறும்.. | 07 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 24 ஆம் நாளுக்கான [07 பிப்ரவரி 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

இந்த ராசியினருக்கு அற்புதமான நாள்.. கனவுகள் நிறைவேறும்.. | 07 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

புதிய வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேர்மறையான அணுகுமுறை மூலம் அசாத்தியமான வெற்றியை பெறுவீர்கள். பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும். சகஊழியர்களிடத்தில் இருந்துவந்த மனகசப்பு நீங்கும். கணவன்-மனைவி இடையே பாசம், நெருக்கம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவும். பண தேவை பூர்த்தியாகும். சேமிப்பதற்கான வாய்ப்பு உண்டு. உறவினர்களின் ஆதரவு பெருகும். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசியினருக்கு அற்புதமான நாள்.. கனவுகள் நிறைவேறும்.. | 07 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

எந்த காரியத்தையும் மனநிறைவோடு செய்வீர்கள். உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை பற்றி புரிந்து கொள்ளும் நாளாக இருக்கும். மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். உறவினர்களிடம் கோபத்தை குறைத்துக்கொண்டு விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வித்தியாசமான அணுகுமுறையை பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள். திருமண வாழ்க்கையில் அழகான தருணங்கள் உருவாகும். நல்ல விஷயங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசியினருக்கு அற்புதமான நாள்.. கனவுகள் நிறைவேறும்.. | 07 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

தொழிலை விரிவுபடுத்த புதிய யுக்திகளை கையாளுவீர்கள். எதிர்காலம் தொடர்பான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி சம்பந்தமான விஷயங்களில் பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்புக் கிடைக்கும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசியினருக்கு அற்புதமான நாள்.. கனவுகள் நிறைவேறும்.. | 07 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

வியாபாரத்தில் லாபம் இரட்டிபாகும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். சிலருக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய முயற்சியில் ஈடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம். வம்புக்கு வருபவரிடம் விட்டுக்கொடுத்து போவது சிறந்தது. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசியினருக்கு அற்புதமான நாள்.. கனவுகள் நிறைவேறும்.. | 07 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

அம்மா வழி உறவினரால் அனுகூலப் பலன் உண்டு. பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்தி பாராட்டை பெறுவீர்கள். செலவுகள் அதிகரித்து காணப்படுவதால் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும். மாணவர்கள் கல்வியில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினருக்கு அற்புதமான நாள்.. கனவுகள் நிறைவேறும்.. | 07 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதம் உண்டாகும். பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். வரவு செலவு இரண்டும் இருக்கும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். கடன்களை திருப்பி வாங்கும் போது கனிவான பேச்சு அவசியம். வேலை செய்யும் இடத்தில் கவனக்குறைவால் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருங்கள். அரசு சார்ந்த பணிகளில் தடை ஏற்படும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசியினருக்கு அற்புதமான நாள்.. கனவுகள் நிறைவேறும்.. | 07 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

மனதளவில் இருந்த குழப்பம் விலகும் நாள். கணவன், மனைவிக்கிடையே அன்பு, நெருக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு புதிய பொருள் வாங்கும் யோகம் உண்டு. இழுபறியாக இருந்த தனவரவு வந்து சேரும். சுப விரைய செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. சாதகமான பலன்களை அடைய புத்திசாலித்தனத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசியினருக்கு அற்புதமான நாள்.. கனவுகள் நிறைவேறும்.. | 07 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

எந்த செயலிலும் திட்டமிட்டு செயல்படுவது அனுகூலப் பலன்களை பெற்றுக் கொடுக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் லாபம் மிகும். இருப்பினும், கூட்டுத்தொழில் செய்வோர் கூட்டாளியை அனுசரித்து செல்வது நல்லது. எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் ஆற்றுவீர்கள். பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் உண்டாகும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினருக்கு அற்புதமான நாள்.. கனவுகள் நிறைவேறும்.. | 07 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

பணியிடத்தில் மற்றவர்களை நம்பாமல், தானே பணிகளை மேற்கொண்டால் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாகவே உள்ளது. சேமிப்பு உயரும். சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்திக் கொள்ளுங்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். வர்த்தக பணிகளில் அதிகமாக முதலீடு செய்வதை குறைத்துக் கொள்ளவும். சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினருக்கு அற்புதமான நாள்.. கனவுகள் நிறைவேறும்.. | 07 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

சுபகாரிய பேச்சுவார்த்தைகள் ஈடேறும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும் நாள். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். துணையுடன் பேசுவதால் நல்ல புரிந்துணர்வு கிடைக்கும். சிறு தூர பயணம் செய்ய வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசியினருக்கு அற்புதமான நாள்.. கனவுகள் நிறைவேறும்.. | 07 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இதனால், வாழ்க்கையில் முன்னேறுவதற்காக புதிய வழிகளை தேடுவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும் நாள். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினருக்கு அற்புதமான நாள்.. கனவுகள் நிறைவேறும்.. | 07 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

ஏமாற்றம் மிகுந்த நாள், அதனால் அதிகமாக எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் பனிச்சுமை காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும். மேலதிகாரிகளுடன் சின்ன சலசலப்பு ஏற்படும். புதிய முயற்சிகளில் அனுபவமிகுந்தவர்களிடம் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். குடும்பத்தில் கருத்துவேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமை முக்கியம். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்