Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,466.40
613.46sensex(0.83%)
நிஃப்டி22,590.25
187.85sensex(0.84%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினருக்கு வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் போய் முடியும்.. | 08 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசியினருக்கு வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் போய் முடியும்.. | 08 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 25 ஆம் நாளுக்கான [08 பிப்ரவரி 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

இந்த ராசியினருக்கு வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் போய் முடியும்.. | 08 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

விருப்பங்கள் நிறைவேறும். பணவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அழகான தருணங்கள் உருவாகும். அனைவரிடமும் அன்பாக நடந்துக்கொள்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக மனதை குழப்பிக்கொண்டிருந்த விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாலினத்தவரால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினருக்கு வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் போய் முடியும்.. | 08 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

பணவரவு தாரளமாக இருப்பதால், தொழிலை சாமர்த்தியமாக நடத்துவீர்கள். கூட்டு தொழில் மூலம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவீர்கள். சகஊழியர்களை அனுசரித்து போவதால், அவர்களின் ஒத்துழைப்பை பெறமுடியும். நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். புதிய முயற்சி நல்ல பலன்களை அளிக்கும். கடின உழைப்பிற்கு தக்க பரிசு காத்திருக்கிறது. வாழ்க்கை துணையின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள். சிலர் திடீர் ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். கேட்டது கிடைக்கும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசியினருக்கு வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் போய் முடியும்.. | 08 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க இழுத்தடிக்கும். பணவரவு சிறப்பாக இருக்காது. பணியிடத்தில் சுமை அதிகரிக்கும், இதனால் ஒருவித படபடப்பு காணப்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுமை வேண்டும். மூத்த சகோதர, சகோதரிகளால் குடும்பத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. சுபகாரியங்கள் தள்ளிப்போகும். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலர் காதலை வீட்டில் சொல்ல நினைப்பார்கள். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசியினருக்கு வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் போய் முடியும்.. | 08 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

அதிர்ஷ்டமான நாள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சகஊழியர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாலினத்தவரால் இனிப்பான செய்தி வந்து சேரும். சிலர் மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். குழந்தைகளின் விருப்பதை நிறைவேற்றி வைப்பீர்கள். தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தானியம் சம்பந்தமான வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசியினருக்கு வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் போய் முடியும்.. | 08 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணியிடத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தூரத்து சொந்தம் வழியாக நல்ல செய்தி காதுக்கு வரும். ஆரோக்கியத்தி எந்த பிரச்சனையும் இல்லை. கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். வாழ்க்கை துணையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். சாதனை!

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினருக்கு வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் போய் முடியும்.. | 08 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். உடல் அளவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். லாபம் இரட்டிப்பாகும். கடன் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடனும் கவனத்துடனும் செயல்படவும். பணவரவு தாராளமாகவே இருக்கும். மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீர்கள். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்களின் மீதே உங்களுக்கு புது நம்பிக்கை பிறக்கும் நாள். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசியினருக்கு வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் போய் முடியும்.. | 08 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் முடியும். எனவே, முடிந்த வரை மற்றவர்களிடம் பேசாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். எதிர்பாலினத்தவரால் பிரச்சனை வரும், கோபத்தை அடக்க வேண்டும். பணியிடத்தில் மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். சுபகாரியம் சம்பந்தமான விஷயங்களில் தடை வரும். எனவே, முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். துணையுடன் கிண்டலான பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்கவும் வாய்ப்புள்ளது. அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசியினருக்கு வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் போய் முடியும்.. | 08 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

தன்நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். பணியிடத்தில் மற்றவர்களை நம்பாமல், தானே பணிகளை மேற்கொண்டால் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் காலதாமதமாகும். துணையுடன் வீண் வாக்குவாதங்களை குறைத்துக்கொண்டு, அனுசரித்து போவது நல்லது. இறை வழிபாட்டில் கவனம் செலுத்துவதன் மூலம் மனஅமைதி பெறமுடியும். ஆக மொத்தம் சோதனை நிறைந்த நாளாக இருக்கும். ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினருக்கு வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் போய் முடியும்.. | 08 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

பணியிடத்தில் உங்களுக்கு கோபம் ஏற்படுத்தும் விதமாக சில விஷயங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். எண்ணத்தில் தெளிவு வேண்டும். கண்டதையும் நினைத்து கொண்டு, முக்கியமான காரியங்களில் கோட்டைவிட்டு விட வேண்டாம். கவனக்குறைவால் சிலர் முக்கியமான பொருட்களை தொலைக்க வாய்ப்புள்ளது. மறதி!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினருக்கு வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் போய் முடியும்.. | 08 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள். புதிய முயற்சிகள் அதிர்ஷ்டமான பலன்களை தேடி தரும். உறவினர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும். பணியிடத்தில் கொடுத்த வேலையை குறித்த செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் நட்பாக பழகுவீர்கள். சுமாராக சென்ற வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியில் சென்று வர வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசியினருக்கு வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் போய் முடியும்.. | 08 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவுகள் நீங்கி அன்பும் பாசமும் அதிகரிக்கும். நீண்ட நாட்கள் கழித்து நண்பர்களை சந்திப்பீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் இருந்து சுபசெய்திகள் வந்து சேரும். பணியிடத்தில் அனைத்தும் சுமுகமாக இருக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டம் அடிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் ஏற்படும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசியினருக்கு வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் போய் முடியும்.. | 08 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வயதில் மூத்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது அனுகூலப் பலன்களை தேடி தரும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் திறமையாக செயல்பட்டு, மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பணவரவில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்கள் கைக்கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான தருணம் உருவாகும். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்