Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.. | 09 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.. | 09 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 26 ஆம் நாளுக்கான [09 பிப்ரவரி 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: இல்லை

பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.. | 09 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வாடிக்கையாளர்களால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சிரமங்களை சந்தித்து வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் கண்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். மகளுக்கு தள்ளிப்போன திருமணம் சிறப்பாக கூடி வரும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.. | 09 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

நண்பர்கள் உதவுவார்கள். மகனுக்கு புதுவேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல தீர்வு கிடைக்கும். பணியிடத்தில் உழைப்புக்கேற்ற பாராட்டு கிடைக்கும். சிலருக்கு தாய்வழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் அதிகரித்தாலும் ஆதாயமும் உண்டு. சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்!

அதிர்ஷ்ட எண்: 5

பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.. | 09 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

காதல் வாழ்க்கையை பொறுத்தவரை மிகவும் சிறப்பான நாள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மட்டும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வணிகர்கள் பெரிய முதலீடுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் உங்கள் தந்தையின் ஒத்துழைப்பும், ஆசியும் கிடைக்கும். பண வரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் விருத்திக்காக போட்ட திட்டங்கள் அனுகூலமான பலனை தரும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். புதிய மாடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.. | 09 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தக்க சமயத்தில் பணஉதவிகள் கிடைக்கும். இருப்பினும், குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவ செலவு ஏற்படும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். பயணத்தின் போது விலையுயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை. வீண் அலைச்சலால் சுறு சுறுப்பு குறையக்கூடும். பணியிடச்சூழல் சாதகமாக இருக்காது, வேலையில் அதிக கவனத்தோடு ஈடுபட வேண்டும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.. | 09 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

உடல் உஷ்ணம் அதிகரிக்கும், உணவு விஷயத்தில் கவனம் தேவை. யாருக்கும், எதற்காகவும் வாக்கு கொடுப்பதை தவிர்க்கவும். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். திடீர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் மன நிம்மதி கிட்டும். புதிய தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். எந்த வேலை செய்தாலும் அதில் நற்பெயர் கிடைக்கும். சகோதரர் வழியில் உதவிகள் கிடைக்க கூடும். இருப்பினும், கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. வாழ்க்கை துணியால் ஒரு இனிப்பான செய்தி காத்திருக்கிறது. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.. | 09 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

நாளின் இரண்டாம் பகுதியில் திடீரென பயணம் செய்ய நேரிடலாம். நீண்ட நாட்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாலினத்தவரால் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். காதலர்களுக்கு அற்புதமான நாள். சிறிய வேலையைக் கூட கவனமாகச் செய்வேண்டும். ஒரு சிறிய தவறும் உங்களை சிக்கலில் ஆழ்த்தும். வேலை வாய்ப்புக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி சகஜமான நிலை உண்டாகும். சுபச் செலவுகள் வரும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தடைகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்ரி பெறுவீர்கள். உடன்பிறந்தோர் பக்கபலமாக இருப்பார்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 3

பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.. | 09 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. சிலருக்கு பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் புது திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடையே அன்பான உணர்வு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனை அகலும். பயணம் செல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் எவ்வளவு அதிகமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு சிறந்த பலனை பெறுவீர்கள். உறுதி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.. | 09 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். சிறு முடிவையும் மிகவும் கவனமாக எடுக்கவும். பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். கொடுக்கல் வாங்கலில் அவரசம் காட்ட வேண்டும். கடனாக கொடுத்தப்பணம் கைக்கு வர இழுத்தடிக்கும். தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம். மலைசார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புக்கிடைக்கும். வாகன பயணத்தின்போது எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஈகை!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.. | 09 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

தனவரவு தாராளமாக இருக்கும். கனவுகள் நிறைவேறும் நாள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும், அதனால் ஆதயாமும் கிடைக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவீர்கள். மாணவர்களுக்கு சிறப்பான நாள். பழைய சொந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். டல்லாக இருந்த வியாபாரத்தில் திடீர் லாபம் அதிகரிக்கும். தந்தையின் உடல் நலம் சீராகும். பணியிடத்தில் உங்கள் எதிரிகள் கூட உங்களைப் புகழ்வார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. ஆடம்பர செலவுகளைத் தவிர்க்கவும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.. | 09 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

கோபம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையிடமிருந்து உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பொருளாதார நிலையில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி இழப்பும் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். வீண் விரயம், டென்ஷன், பிள்ளைகளால் பொருட் செலவுகள் வரக் கூடும். அண்டை வீட்டாருடன் அளவாக பழகுங்கள். பணியிடத்தில் சகஊழியர்களால் பிரச்சனை வரலாம். ஆகமொத்தம் பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டும். பகை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.. | 09 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

வர வேண்டிய பணம் கைக்கு வரும். குலதெய்வம் கோயிலுக்கு கும்பத்துடன் சென்று வருவீர்கள். பல நாட்களாக மனதை உறுத்திக்கொண்டிருந்த விஷயம் முடிவுக்கு வரும். உறவினர்கலால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். பிள்ளைகளால் அந்தஸ்து மரியாதை கூடும். கடினமான வேலையையும் சாதுர்யமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும், உடன்பிறந்தவர்களுடனான உறவும் மேம்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.. | 09 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். பணியிடத்ஹில் கலவையான நாளாக இருக்கும். துணையுடம் இருந்த மனக்கசப்பு விலகி, அன்பு, பாசம் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருந்தாலும், பணப் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் நல்ல லாபகரமான சூழ்நிலை உருவாகும். தேடிப்போய் உதவி செய்வீர்கள். சிலர் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் லாபம் கிடைக்கும். சகோதரவழியில் இருந்த பிரச்சனை தீரும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்