'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம்.
அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 28 ஆம் நாளுக்கான [11 பிப்ரவரி 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!
நல்ல நேரம்:
காலை: 07.30 - 08.30 வரை
மாலை: 04.30 - 05.30 வரை
உங்களுடைய அனுசரனையான அணுகுமுறை வெற்றியை தேடி தரும். வீட்டில் ரொம்ப நாட்களாக நின்று போயிருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். இதனால் மனதில் ஒரு நிம்மதி உண்டாகும். உறவினர், நண்பர்களுடன் சந்தோசமான தருணத்தை அனுபவிப்பீர்கள். பல வாய்ப்புகள் தேடி வரும். சின்ன வாய்ப்பாக இருந்தாலும் புத்திசாலி தனமாக சிந்தித்து அவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முயற்சிப் பண்ணுங்க. வியாபாரத்தில், தொழிலில் அதிக லாபம் ஈட்டும் நாள். லாபம்!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 3
வேலை செய்யும் இடத்தில் நல்லபேர் கிடைக்கும். வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். எதிர்பாரா செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். எதையும் நம்பிக்கையோடு செய்தால் வெற்றி உங்கள் கையில். எந்த நிலையிலும் பொறுமையை மட்டும் இழந்துவிட கூடாது. இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பணவரவு உண்டு. சேமித்து வைக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத லாபங்கள் உங்கள் மனதை குளிர்விக்கலாம். சுகம்!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்
அதிர்ஷ்ட எண்: 1
ரொம்ப சிந்திப்பதை தவிர்ப்பது நல்லது. பணியில் பதட்டம் காணப்படும். நிதானத்தோடு செயல்பட வேண்டும். குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் காணப்படும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதிர்பாரா செலவுகள் வரும், பார்த்து பக்குவமாக செலவு செய்யுங்கள். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். எனவே, உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதால் பெரிய செலவுகளை தவிர்க்க முடியும். தொழில் மந்தமாக தான் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. நட்பு!
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 2
எதை செய்தாலும் கவனத்தோடு செய்ய வேண்டும். யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும் கவனமும் அதிகம் இருக்க வேண்டும். நீங்கபாட்டுக்கு ஏனோதானோ என்று பேசிவிட்டு பின்னாடி வருத்தப்பட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும். டென்ஷன் ஆகாமல் பிளான் பண்ணி அதற்கேற்றவாறு வேலையை முடிக்க பாருங்க. பெற்றோர்களிடத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவிஷயத்தில் எச்சரிக்கை வேண்டும். கவனம்!
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 9
புதிய தொழிலில் முதலீடு செய்ய உகந்த நாள். உங்களுடைய புத்திசாலி தனத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டால் நிறைய சாதிக்கலாம். முடிந்த வரை சுய முன்னேற்றத்திற்கான முயற்சி மேற்கொள்ளுங்கள். பணிபுரியும் இடச்சூழல் அற்புதம். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். குடும்பத்தில் ஆனந்தம் விளையாடும். நீங்களும் சந்தோசமாக இருப்பீர்கள், மற்றவர்களையும் சந்தோசப்படுத்துவீர்கள். தேவையற்ற கவலைகளில் இருந்து விலகி வாழ்க்கையை நடத்த முயற்சியுங்கள். வெற்றி!
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 6
குடும்பத்தினரின் நலன் குறித்த எண்ணங்கள் மனதில் அவ்வப்போது வந்துபோகும். எதிர்காலத்தை பற்றிய சிந்தனையால் பணியில் தீவிரமாக இறங்குவீர்கள். நீதிமன்ற வழக்குகள் சாதகமான பலனை கொடுக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்தி வந்தடையும். ஆனால், உங்களிடம் ஏதாவது உதவியை எதிர்பார்ப்பார்கள்.வியாபாரம் சுமாராக தான் இருக்கும். காதலர்களுக்கு இடையில் இருக்கும் சண்டை முடிவுக்கு வரும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். போட்டி!
அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட எண்: 4
உங்கள் விருப்பங்கள் எந்த தடையும் இன்றி நிறைவேறும். தொலைத்துரத்தில் இருந்து நல்ல செய்தி உங்களை தேடி வரும். இதனால் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. பணி சம்பந்தமான பயணம் மேற்கொள்வீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். இருந்தாலும் செலவு செய்யும் போது கவனத்தோடு இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணியிடத்தில் திறமையாக செயல்படுவீர்கள். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்புண்டு. வரவு!
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்
அதிர்ஷ்ட எண்: 8
முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். குடும்ப பொறுப்புகள் அதிகமாக காணப்படும். கவனக்குறைவால் வேலை செய்யும் இடத்தில் சின்ன சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. துணையால் குடும்பத்தில் பிரச்சனை ஓங்கும். நீங்க அட்ஜஸ் செய்து கொள்வது உங்களுக்கு நல்லது. வியாபாரம் சுமாராக இருக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. நண்பர்களால் அலைச்சல் ஏற்படும். ஆகமொத்தம் சோதனைமிகுந்த நாள். துன்பம்!
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்
அதிர்ஷ்ட எண்: 7
குடும்ப வளர்ச்சிக்கான செயல்களை ஆரம்பிக்க சிறந்த நாள். உங்களுடைய திறமையை பயன்படுத்தி பணியில் வெற்றி பெறுவீர்கள். உடன் பணிபுரிவர்கள் உங்களுடைய திறமையை பார்த்து வியந்து பாராட்டுவார்கள். முன்னோர்கள் சொத்து கிடைப்பது பற்றிய செய்தி வந்து சேரும். உங்களுடைய துணை உங்களின் மீது அன்பையும் பாசத்தையும் பொழிந்து தள்ளுவார். நண்பர்களிடம் இருந்து ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்தடையும். வியாபாரத்தில் முதலில் சில தடைகள் வந்தாலும் பின்னர் முன்னேற்றம் காணப்படும். தெளிவு!
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 1
உங்க பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம். அதனால், எதிலும் அவரசம் காட்டாமல், நம்பிக்கையோடு கையாளுவது நல்லது. இல்லையென்றால் வீண் விவாதங்கள் வந்து நிற்கும். வேலை செய்யும் இடத்தில் வேலை அதிகமாக இருக்கும். துணையிடம் கேலியாக பேசுவதை தவிர்க்கவும். பண வரவு சற்று குறைவாக தான் இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அண்டைவீட்டாரால் வீண் விவாதம் ஏற்படும். வார்த்தையில் கணிவு வேண்டும். கூர்மையான ஆயுதங்களை கையாளும் போது கவனம். சிக்கல்!
அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்
அதிர்ஷ்ட எண்: 9
தன்னம்பிக்கையை அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள். உங்களுடைய இலக்கை அடைய கொஞ்சம் கடினமாக உழைக்க நேரிடும். கொடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்து மூலம் பண வரவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய செலவுகள் ஏற்படும். திடீர் விருந்தனர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணம் உருவாகும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உள்ளது. கனவுகள் நிறைவேரும் நாள். நலம்!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்
அதிர்ஷ்ட எண்: 4
எதையும் சரியாக திட்டமிட்டு, நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பெற்றோரிடமும், துணையுடனும் சில விஷயங்களில் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் இருக்கும். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். யாருக்காவும் உங்களுடைய முயற்சியை விட்டுக்கொடுக்காதீர்கள். சிலருக்கு தொழில் சார்ந்த பயணங்கள் ஏற்படும். நீண்ட நாள் கழித்து பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். ஆர்வம்!
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்
அதிர்ஷ்ட எண்: 5
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…