Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | 13 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | 13 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 01 ஆம் நாளுக்கான [13 பிப்ரவரி 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 06.30 - 07.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | 13 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

உங்களுடைய முயற்சியால் வெற்றி காண்பீர்கள். அதிகம் நன்மை நடக்கும் நாள். பணியிடத்தில் வேலை அதிகமாக இருந்தாலும் குறித்த நேரத்தில் முடித்து, மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்து விவகாரம் சாதகமான பலனை தரும். துணையின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். இரக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | 13 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

எதிர்பாரா பணவரவால்,  உடனடி செலவுகளை சமாளிப்பீங்க. எதிர்காலம் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். உடன் பணியிடத்தில் சகபணியாளர்களிடம் இருந்த சங்கடம் விலகும். அதிக வேலை காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. துணையின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். சகோதர்களால் ஆதாயம் உண்டு. இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | 13 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

இலக்குகளை நிர்ணயித்து முயற்சி செய்தால் வெற்றி உங்களுக்கு தான். வேலை செய்யும் இடத்தில் சவால்கள் நிறைய இருக்கும். ரொம்ப கவனத்தோடு நம்பிக்கையோடு பணியை செய்யுங்க. உங்களின் திறமைகளை நீங்களே அறியும் நாள். எதிர்பாராத நேரத்தில் பணஉதவி உங்களை தேடி வரும். தொழில், வியாபாரத்தில் நீங்க நினைத்தபடி லாபம் இருக்கும். புதிய நபரால் அனுகூலம் கிட்டும். தடைப்பட்டு நின்ற சுபக்காரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | 13 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

தன்னம்பிக்கை, மன உறுதியுடன் எந்த காரியத்தையும் செய்வீர்கள். சந்தேக குணத்தை விட்டொலிப்பது நன்மை பயக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்து ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. பணியிடச்சூழல் சிறப்பாக இருக்கும். வியாபாரம் ஏற்றம் இரக்கமின்றி சீராக இருக்கும். உறவினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் நாள். முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | 13 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன்-மனைவி உறவில் நல்ல புரிந்துணர்வு காணப்படும். வீட்டில் நல்ல காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. கூட்டு முயற்சிகள் மற்றும் பார்ட்னர்ஷிப்களில் இருந்து தள்ளியிருங்க. எந்த காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வியாபாரத்தை பொறுத்த வரை சுமாராக தான் இருக்கும். ஆரோக்கியமும் சூப்பர். தாயின் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | 13 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

சின்ன முயற்சியில் பெரிய வெற்றி கிடைக்கும். அனைவரும் வியந்து பாராட்டுவார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். உங்க விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும். பணவரவும் அமோகமாக இருக்கும். ஆக மொத்தம் அதிர்ஷ்டமான நாள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வராத கடன்கள் உங்களை வந்தடையும். ஒரு சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | 13 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

பரந்த மனம் உள்ளவராக, நல்லது செய்பவராக இருங்க. இவ்வளவு நாளா நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும். ஆனால், சில போராட்டங்களுக்கு பிறகே அது சாத்தியம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் சகஊழியர்கள் உங்களுடைய வேலையை பாராட்டுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். துணையிடம் இருந்த பிரச்சனை விலகி, அன்பு, பாசம் அதிகரிக்கும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | 13 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

தொழில் சம்பந்தமான பயணம் மேற்கொள்வீர்கள். பயணத்தின் போது பணத்தின் மீது அதிக கவனம் தேவை. பணியிடத்தில் பணிச்சுமை அதிகரித்து காணப்படும். மனதிற்கு பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்வினர்கள் வழியில் நற்செய்தி வந்து சேரும். குடும்பத்தில் இருந்த சிக்கல் தீரும் நாள். கடனாக கொடுத்த கைக்கு வரும். தடைப்பட்டு நின்ற காரியங்களை செய்து முடிப்பீர்கள். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | 13 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

முதலீடுகள் லாபம் அளிக்கும். யாராவது எனக்கு பிரச்சனை என்று உங்ககிட்ட வந்தா அமைதியாக ஒதுங்கிக் கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பேரும் கிடைக்க வேண்டுமென்றால் ஸ்மார்ட்டாக சிந்திக்க ஆரம்பிங்க. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சிக்கல் இருக்கும். துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டு. ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | 13 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.  பயணத்தின் போது பணத்தை இழப்பதற்கான வாய்ப்புள்ளது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்களால் மனதில் குழப்பம் குடிக்கொள்ளும். எடுத்த முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு ஏமாற்றம் அளிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களிடம் எச்சரிக்கை இருப்பது நல்லது. விலங்குகளால் ஆபத்து உண்டு, ஒதுங்கி இருங்கள். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | 13 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

கவலையே கெதி என்று இருந்த உங்களுக்கு நல்ல மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு அமையும். திருமண முயற்சிகள் தொடங்க நல்ல அனுகூலமான நாளாகும். தூரத்து உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். எப்போதும் கடிந்துக்கொண்டே இருந்த நீங்க, துணையிடம் கனிவாக நடந்துக் கொள்வீர்கள். குடும்ப நலனில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் | 13 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

கூட்டு வியாபாரம் செய்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை கூறும்போது எச்சரிக்கையாக இருங்கள். இல்லையென்றால், அதுவே உங்களுக்கு ஆப்பாக திரும்பும். துணையுடன் அகந்தை பேச்சை குறைத்துக்கொள்ளவும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணப்புழக்கம் சுமாராக இருக்கும். வேண்டுமென்றே சிலர் உங்களை வம்பிற்கு இழுப்பார்கள். சுதாரித்திக்கொண்டு சிக்கிக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். நஷ்டம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்