Wed ,Apr 24, 2024

சென்செக்ஸ் 73,868.66
130.21sensex(0.18%)
நிஃப்டி22,410.55
42.55sensex(0.19%)
USD
81.57
Exclusive

புதிய நபர்களால் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்படும்.. | 14 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
புதிய நபர்களால் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்படும்.. | 14 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 2 ஆம் நாளுக்கான [14 பிப்ரவரி 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

புதிய நபர்களால் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்படும்.. | 14 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

எண்ணிய காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடி உண்டாகும். கால்நடை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எடுத்தோம் கவுத்தோம் என்று இல்லாமல், சிந்தித்து செயல்படுங்கள். வியாபாரத்தில் புதிய எதிரி தோன்றுவார்கள். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

புதிய நபர்களால் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்படும்.. | 14 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

பணியிடத்தில் சகபணியாளர்களிடம் இருந்த மனக்கசப்பு விலகி, ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும் நாள். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்கு கிடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கீர்த்தி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

புதிய நபர்களால் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்படும்.. | 14 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் கணிவான பேச்சு அவசியம். உங்க துணையிடம் உங்க கடந்த காலத்தை பற்றி சொல்ல நினைப்பதை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். மனதில் ஒருவிதமான மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாள் குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும் நாள். சலனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

புதிய நபர்களால் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்படும்.. | 14 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். புதிய முயற்சிக்கு பெற்றோர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் அஜாக்கரதையால் முக்கியமான பொறுப்பு கைநழுவி போகும். எச்சரிக்கையோடு இருங்கள். சிலருக்கு எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளின் ஆதரவு பெருகும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

புதிய நபர்களால் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்படும்.. | 14 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

புதிய மனை, வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் லாபம் பெருகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைப்பட்டு நின்ற காரியங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனையால மிகப்பெரிய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பு. திறமை வெளிபடும் நாள். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

புதிய நபர்களால் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்படும்.. | 14 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களால் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்படும். எந்த காரியத்தை சுறுசுறுப்பாகவும், உத்வேகத்துடனும் செய்து காட்டுவீர்கள். மனைவி வழி உறவினர்களால் நல்ல செய்தி வரும். வியாபாரம் அமோகமாக இருக்கும். பரிசு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

புதிய நபர்களால் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்படும்.. | 14 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

வியாபாரத்தில் உறவினர்களின் உதவி கிடைக்கும். கடன்பிரச்சனையால் ஒருவிதமான பயத்தோடே நாளை கழிப்பீர்கள். பெயர் தெரியாவதர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திடீர் விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். மலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. பயம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

புதிய நபர்களால் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்படும்.. | 14 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு நின்ற சுபக்காரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டு. மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும். அரசு சார்ந்த காரியங்களில் நிதானம் தேவை. பெரிய முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

புதிய நபர்களால் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்படும்.. | 14 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் வாயை திறக்காமல் இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். துணையால் அலைச்சல் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

புதிய நபர்களால் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்படும்.. | 14 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

பணியிடச்சூழல் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். கடனாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வாய்ப்பு உருவாகும். வியாபார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சனை தீரும். கணவன்-மனைவி இடையே நெருக்கம், பாசம் அதிகரிக்கும். தனவரவில் இருந்த நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது அதிக கவனம் தேவை. வரவு!

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

புதிய நபர்களால் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்படும்.. | 14 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

வியாபாரம் அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி, பாசம் அதிகரிக்கும். புதிய நபர்களால் குடும்பத்தில் சந்தோசமான சூழல் ஏற்படும். பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். இரவு நேர பயணத்தை தவிர்த்துக் கொள்வது சிறந்தது. நெருக்கமானவர்களின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

புதிய நபர்களால் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்படும்.. | 14 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த இடங்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் சார்ந்த வெளியூர் பயணங்கள் வெற்றியை தரும். பணியிடத்தில் நன்மதிப்பு கிடைக்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்