Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | Tomorrow Rasi Palan | நாளைய ராசிபலன் | 31 ஜனவரி 2023 செவ்வாய்

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | Tomorrow Rasi Palan | நாளைய ராசிபலன் | 31 ஜனவரி 2023 செவ்வாய்Representative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 17 ஆம் நாளுக்கான [31 ஜனவரி 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

Nalaya Rasi Palan | Tomorrow Rasi Palan | நாளைய ராசிபலன் | 31 ஜனவரி 2023 செவ்வாய்Representative Image

ராசிபலன்

மேஷம் - வெற்றி!

ரிஷபம் - லாபம்

மிதுனம் - ஆதரவு

கடகம் - வரவு

சிம்மம் - ஆக்கம்

கன்னி - மறதி

துலாம் - போட்டி

விருச்சிகம் - நன்மை

தனுசு - மறதி

மகரம் - சுபம்

கும்பம் - செலவு

மீனம் - வாழ்வு

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

Nalaya Rasi Palan | Tomorrow Rasi Palan | நாளைய ராசிபலன் | 31 ஜனவரி 2023 செவ்வாய்Representative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரத்தை பொறுத்த வரை அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படலாம். துணையின் விருப்பப்படி நடந்துக்கொள்வதன் மூலம் நல்லுறவு மேம்படும். சிலருக்கு தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். கடன் பிரச்சனையால் அவதிப்படுவோருக்கு ஆறுதலான நாள். மலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan | Tomorrow Rasi Palan | நாளைய ராசிபலன் | 31 ஜனவரி 2023 செவ்வாய்Representative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

பணியிடத்தில் நேர்மையாக நடந்து, மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். பயிர், மனை இவற்றால் லாபம் ஏற்படும். சிலருக்கு வாழ்க்கையில் புதுப்புது மாற்றங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தினம் மத்தியில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். திருமண வாழ்க்கையில் அன்பு, ஒற்றுமையும் ஏற்படும். சில செலவுகள் இருக்கும் ஆனால் பயனுள்ள விஷயத்திற்காகவே இருக்கும். கவலை வேண்டாம். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan | Tomorrow Rasi Palan | நாளைய ராசிபலன் | 31 ஜனவரி 2023 செவ்வாய்Representative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

நெருங்கிய நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் ஏற்பட இருந்த குழப்பங்கள் விலகும். சிலருக்கு நவீன உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் கூட எளிதில் கைகூடும். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தினரிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளதால், கோபத்தை தவிர்ப்பது நல்லது. எதிர்பாலினத்தவரால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது, ஜாக்கிரதையாக இருக்கவும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan | Tomorrow Rasi Palan | நாளைய ராசிபலன் | 31 ஜனவரி 2023 செவ்வாய்Representative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

புதிய வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்த மறந்துவிடாதீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பணஉதவிகள் எளிதில் கிடைக்கும். ஆசைப்பட்ட விஷயம் எதிர்பாராமல் கிடைக்கும். இதனால், நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி சார்ந்த முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற பரிசும் பாராட்டும் கிடைக்கும் நாள். குடும்ப வாழ்க்கை சிறப்ப. மந்தமாக இருந்த்ஹ வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியில் சென்றுவர வாய்ப்புக் கிடைக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan | Tomorrow Rasi Palan | நாளைய ராசிபலன் | 31 ஜனவரி 2023 செவ்வாய்Representative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

தந்தை வழி உறவுகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். நேரம் உங்களுக்கு சாதகமானதாக இல்லாததால், மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ளவும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. சிலர் வீண் வார்த்தைகள் பேசுவதன் மூலமாக வேண்டாத பகையை தேடிக் கொள்வர். வண்டியில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். நினைத்த காரியம் நிறைவேற தடங்கல் ஏற்படும். கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாக்குறிதிகளை கொடுக்கப்பதை தவிர்க்கவும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan | Tomorrow Rasi Palan | நாளைய ராசிபலன் | 31 ஜனவரி 2023 செவ்வாய்Representative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

எதிர்பாராத உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். நேர்மறை எண்ணம் கொண்டு செயலாற்றுவது நல்லது. தனிமையாக இருப்பது போன்று உணர்வீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்த்துக்கூடிய நாளாகவும் இருக்கும். தேவையில்லாத சிந்தனை மூலம் தூக்கமின்மை ஏற்படும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வியாபாரம் சுமாராக தான் இருக்கும். கவலை வேண்டாம் இதுவும் கடந்து போகும். மறதி! 

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan | Tomorrow Rasi Palan | நாளைய ராசிபலன் | 31 ஜனவரி 2023 செவ்வாய்Representative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

பிரியமானவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. வியாபாரத்தில் வசூல் கைக்கு கிடைக்க இழுத்தடிக்கும். அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வார்த்தைகளில் கவனம் தேவை. எந்த செயலையும் செய்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து செயல்படவேண்டும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan | Tomorrow Rasi Palan | நாளைய ராசிபலன் | 31 ஜனவரி 2023 செவ்வாய்Representative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

உங்களுக்கு புது நம்பிக்கையும், தைரியமும் ஏற்படுத்தும் நாளாக இருக்கும். சிலருக்கு குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு விலகி, மகிழ்ச்சி அதிகரிக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடித்து காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். சிலருக்கு குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். பணியிடத்தில் திட்டமிட்டபடி பணிகளை செய்து முடிப்பீர்கள். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan | Tomorrow Rasi Palan | நாளைய ராசிபலன் | 31 ஜனவரி 2023 செவ்வாய்Representative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

தேவையற்ற பேச்சுகளை தவிர்த்துக்கொள்வது உத்தமம். அது உறவோ, நட்போ, துணையோ. உத்தியோகத்தில் பொறுப்பும், வேலையும் அதிகரித்து காணப்படும். தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனதோடு செயல்படவும். தன்நம்பிக்கை அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் ஏமாற்றத்தை சந்திக்க நேரும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். தனவரவு சுமாராக தான் இருக்கும். அனாவசிய செலவுகளை தவிர்க்கவும். வாகன பயணத்தின்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். மறதி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan | Tomorrow Rasi Palan | நாளைய ராசிபலன் | 31 ஜனவரி 2023 செவ்வாய்Representative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். சந்தோஷத்திற்கு குறை இருக்காது. தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனை ஒரு முடிவு வரும். புதிய பெண்களிடம்  பேசும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பேசவும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பு அனுபவமிக்கவரிகளிடம் ஆலோசிப்பது இழப்பை தவிர்க்கும். சுபம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan | Tomorrow Rasi Palan | நாளைய ராசிபலன் | 31 ஜனவரி 2023 செவ்வாய்Representative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

உறவினர்கள், நண்பர்கள் வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பெண்கள் மூலம் அனுகூலப் பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருந்தாலும் செலவு இருமடங்காக இருக்கும். தொழிலில் லாபத்தை பெற உழைக்க வேண்டியிருக்கும். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களுடன் பிரச்சனை ஏற்படும் நாள், வார்த்தையை கவனமாக கையாள வேண்டும். எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. நினைத்த காரியம் நிறைவேற இழுத்தடிக்கும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan | Tomorrow Rasi Palan | நாளைய ராசிபலன் | 31 ஜனவரி 2023 செவ்வாய்Representative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த வங்கி கடன் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியாக மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். சிலர் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கவலைப்படுவதையும், உணர்ச்சி வசப்படுவதையும் தவிர்த்து மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். வேலைபளு அதிகமாக இருக்கும். திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். வாழ்வு!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்