மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 3 ஆம் நாளுக்கான [17 மே 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நல்ல நேரம்
காலை: 09.30 – 10.30 வரை
மாலை: 04.30 – 05.30 வரை
வர்த்தக முதலீடுகளில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நீண்ட நாள் நண்பர்களைச் சந்திப்பதில் அதிக மகிழ்ச்சி காட்டுவீர்கள். உங்கள் பலம் மற்றும் பலவீனத்தைப் புரிந்து கொள்வதில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கணவன், மனைவி இடையே பிரச்சனைகள் விலகி புரிதல் உண்டாகும். எந்த காரியத்தையும், நிதானமாகவும், பொறுமையாகவும் செய்வது நல்லது. ஆழ்ந்த சிந்தனையுடன் செயல்பட்டு காரியத்தைச் செய்வதன் மூலம் வெற்றியைப் பெறலாம். சிந்தனை!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 6
உத்தியோகத்தில் இருந்து வந்த ஈடுபாடுகள் குறையும். பொருளாதாரத்தில் அதிக கவனம் தேவை. கடன் சார்ந்தவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. போட்டித் தேர்வுகளில் புதிய அனுபவம் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. நெருக்கமானவர்களால் சில நன்மைகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் நல்ல மாற்றத்தைத் தரும். பணியில் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். எளிதில் முடியக்கூடிய சில விஷயங்கள் சற்று அலைச்சலுக்குப் பின் நிறைவேறலாம்.. புகழ்!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 9
குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள். மனதில் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் ஈடேறும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மேலும், பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறைந்து நன்மைகள் உண்டாகலாம். வியாபாரத்தில் உங்களது முயற்சியால் நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். உங்களது புத்திக் கூர்மையால் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். கடன் சார்ந்த விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பொறாமை!
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 5
வியாபாரத்தில் இருந்து வந்து மந்தத்தன்மை குறைந்து நன்மைகள் உண்டாகலாம். தொழில்நுட்பத் துறையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். நினைத்த காரியங்கள் ஈடேறும். சில தூரப் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். புதிய அனுபவத்தைப் பெற்று, வாழ்வில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் முழு ஒத்துழைப்புப் பெறுவீர்கள். மனதளவில் ஏற்படும் மாற்றங்கள் நன்மையைத் தரும். முயற்சி!
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்
அதிர்ஷ்ட எண்: 7
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நன்மை உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் குறைந்து விருத்தி அடைவீர்கள். வியாபாரத்தில் இடமாற்றம் செய்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். சில பிரச்சனைகள் இன்று தீர்வுகள் கிடைக்கும் நாள். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் நலத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். விருத்தி!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட எண்: 3
கணவன், மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. இதனால், மனதில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரத்தில் மந்த நிலைகள் ஏற்படுவதர்கான வாய்ப்பு அதிகம். எதிர்பாராத சில நெருக்கடிகள் உண்டாகலாம். எனவே, முதலீடுகளில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் எழும். நிறைவு!
அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்
அதிர்ஷ்ட எண்: 6
கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகி நெருக்கம் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவையை அறிந்து விரைவாக செயல்படும் நாள். உத்தியோகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில ரகசியங்களை அறிந்து செயல்படுவீர்கள். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிலை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். உங்கள் புதிய முயற்சிகளால், பணியில் உயர் பதவி மற்றும் சம்பள ஔஅர்வு கியைப்பதற்கான நிலை உண்டாகும். வெற்றி!
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்
அதிர்ஷ்ட எண்: 4
புதிய பணி தொடர்பான முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். கடன் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கால்நடை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகாரிக்கும். மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் விலகி தெளிவான முடிவுகளை எடுக்கக் கூடிய நாளாக அமைகிறது. பணியிடத்தில் மேன்மை உண்டாகும். எதிர்பாராத தன வரவு உண்டாகும். முதலீடுகள் சார்ந்ததில் நன்மை அடைவீர்கள். உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் விலகி நன்மைகள் உண்டாகும். பெருமை!
அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்
அதிர்ஷ்ட எண்: 7
மனதில் புதுவிதமான கற்பனை சிந்தனைகள் உருவாகும். இவை நன்மையைத் தரும். உயர்கல்வி தொடர்பான பயணங்கள் சிறப்பாக அமையும் மற்றும் நன்மையில் முடியும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் நன்மைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்கள் உண்டாகலாம். எனவே, மிகுந்த பொறுமையுடன், நிதானமாகவும் செயல்படுவது நல்லது. உடல் நலம் சிறப்பாக உள்ளது. பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பாராட்டு!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்
அதிர்ஷ்ட எண்: 6
புதிய நபர்களின் அறிமுகம் நன்மையைத் தரும். உறவினர்களின் வருகையால், மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள். வருமான உயர்வு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவி இடையே நெருக்கங்கள் அதிகமாகும். அரசு சார்ந்த துறையில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்ப பெரியோர்களிடம் உண்டாகும் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் விரைவில் குறைந்து விடும். பணியிடத்தில் உங்களின் மதிப்பு மேலோங்கும். உயர்வு!
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 5
புதுவிதமான நன்மைகள் உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் விரைவில் முடிவடையும். சிறு தூர பயணங்களால் நன்மை உண்டாகும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். கஷ்டமான மற்றும் சவாலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி அடைவதுடன் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகி நன்மை உண்டாகும். உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். நலம்!
அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்
அதிர்ஷ்ட எண்: 8
குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில், உங்களுக்கான ஒத்துழைப்பு அதிக அளவில் கிடைக்கும். மனதில் தோன்றக்கூடிய கருத்துக்களை வெளிப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வாக்குவாதம் செய்வதின் மூலம், சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். இழுபறியான தனவரவு கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இதனால், புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக உள்ளது. எதிர்பார்த்த காரியங்கள் இனிதே நிறைவேறும். நட்பு!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட எண்: 4
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…