Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

வியாபாரத்தில் தனவரவு கைக்கு வர இழுத்தடிக்கும்.. வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும்.. | 20 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
வியாபாரத்தில் தனவரவு கைக்கு வர இழுத்தடிக்கும்.. வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும்.. | 20 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 08 ஆம் நாளுக்கான [20 பிப்ரவரி 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 06.30 - 07.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

வியாபாரத்தில் தனவரவு கைக்கு வர இழுத்தடிக்கும்.. வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும்.. | 20 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக சொந்த ஊர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பிரியமானவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்க அனுசரித்து நடந்துக்கொள்வது நல்லது. மற்றவரை விமர்சிப்பதால் தேவையற்ற இன்னல்களை சந்திக்க நேரிடலாம். தனவரவு திருப்திகரமாகவே இருக்கும். சேமிப்பும் உயரும். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

வியாபாரத்தில் தனவரவு கைக்கு வர இழுத்தடிக்கும்.. வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும்.. | 20 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

எதிர்பாராத உதவியால் மனதில் ஒரு மகிழ்ச்சி நிலவும். நெருங்கியவர்களால் ஒரு பரிசு காத்திருக்கிறது. நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை மேம்படும். கடன் கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படலாம். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். சகஊழியர்களிடத்தில் இருந்துவந்த மனகசப்பு நீங்கும். ஜெயம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

வியாபாரத்தில் தனவரவு கைக்கு வர இழுத்தடிக்கும்.. வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும்.. | 20 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் திறமையாக செயல்பட்டு, மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். தொழிலில் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எழுத்து சம்பந்தமான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

வியாபாரத்தில் தனவரவு கைக்கு வர இழுத்தடிக்கும்.. வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும்.. | 20 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

வேலை செய்யும் இடத்தில் எதை பேசுவதாக இருந்தாலும் யோசித்து பேச வேண்டும். இல்லையென்றால் அதுவே ஆப்பாக வந்து நிற்கும். பணத்தை கவனமாக முதலீடு செய்ய வேண்டிய நாள். முன்கோபத்தால் பல வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அஜாக்கிரதையால் முக்கியமான விஷயம் நழுவும். வரவோடு செலவும் காணப்படும். உங்களால் முடியும் என்றால் மட்டும் வாக்குறுதி கொடுங்கள். எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று இருந்தால், இழப்பு உங்களுக்கே. போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

வியாபாரத்தில் தனவரவு கைக்கு வர இழுத்தடிக்கும்.. வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும்.. | 20 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

அனைத்து காரியங்களும் நீங்கள் நினைத்த படியே நடக்கும். உங்களுக்கு புது நம்பிக்கையும், தைரியமும் ஏற்படுத்தும் நாளாக இருக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். நீண்ட நாட்களாக பார்க்க விரும்பிய நபரை சந்திப்பீர்கள். சிலருக்கு குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு விலகி, மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். கூர்மையான ஆயுதங்களை கையாளும்போது கவனம் வேண்டும். கீர்த்தி!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

வியாபாரத்தில் தனவரவு கைக்கு வர இழுத்தடிக்கும்.. வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும்.. | 20 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

பணியிடத்தில் மற்றவர்களை நம்பாமல், தானே பணிகளை மேற்கொண்டால் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாகவே உள்ளது. சேமிப்பு உயரும். சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்திக் கொள்ளுங்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். வர்த்தக பணிகளில் அதிகமாக முதலீடு செய்வதை குறைத்துக் கொள்ளவும். சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள். யோகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

வியாபாரத்தில் தனவரவு கைக்கு வர இழுத்தடிக்கும்.. வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும்.. | 20 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

பணவரவு அமோகமாக இருக்கும். விருந்தினர் வருகையால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்துடன் வெளியில் சென்று வர வாய்ப்புள்ளது. சிலருக்கு வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே பாசம், அன்பு, அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள். வராத கடன்கள் உங்களை வந்தடையும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

வியாபாரத்தில் தனவரவு கைக்கு வர இழுத்தடிக்கும்.. வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும்.. | 20 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களின் போது பொருட்கள் திருடு போக வாய்ப்புள்ளது. கடன் பிரச்சனையால் மனதில் கவலை குடிக்கொள்ளும். உங்க துணையுடன் வீண்விவாதங்கள் ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும். எனவே, அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்காலம் சம்பந்தமான சிந்தனையால் ஒருவித பயத்தோடே நாள் கடக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய நன்மதிப்பிற்கு பங்கம் வரும் வாய்ப்பு உள்ளது. அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

வியாபாரத்தில் தனவரவு கைக்கு வர இழுத்தடிக்கும்.. வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும்.. | 20 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

தனவரவு தாராளமாக இருக்கும். பெரியவர்கள் ஆசியால் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனை ஒரு முடிவு வரும். புதிய பெண்களிடம்  பேசும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பேசவும். பிள்ளைகள் பெற்றோர்களிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. சிலருக்கு மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். சொத்து விஷயத்தில் சின்ன சலசலப்பு ஏற்படலாம். தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

வியாபாரத்தில் தனவரவு கைக்கு வர இழுத்தடிக்கும்.. வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும்.. | 20 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

சிலர் வீண் வார்த்தைகள் பேசுவதன் மூலமாக வேண்டாத பகையை தேடிக் கொள்வீர்கள். விழா, விஷேசங்களுக்கு செல்வதில் தடை ஏற்படும். வியாபாரத்தில் தனவரவு கைக்கு வர இழுத்தடிக்கும். எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாக்குறிதிகளை கொடுக்கப்பதை தவிர்க்கவும். துணையிடம் பேசும் போது வார்த்தையில் கவனம் தேவை. சகோதரனின் நடவடிக்கைகள் கோபத்தை ஏற்படுத்தலாம், அனுசரித்து போவது நல்லது. தோல்வி!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

வியாபாரத்தில் தனவரவு கைக்கு வர இழுத்தடிக்கும்.. வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும்.. | 20 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். எண்ணத்தில் தெளிவு வேண்டும். கண்டதையும் நினைத்து கொண்டு, முக்கியமான காரியங்களில் கோட்டைவிட்டு விட வேண்டாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பணியிடத்தில் கீழ் பணிபுரிவர்களால் பிரச்சனை ஏற்படலாம். உணர்ச்சிகளை கட்டுபடுத்த வேண்டும். அதேபோல், மற்றவர்களிடம் உங்க குடும்ப விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். ஆரோக்கியம் சிறப்பு. நலம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

வியாபாரத்தில் தனவரவு கைக்கு வர இழுத்தடிக்கும்.. வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும்.. | 20 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

மறதியால் முக்கியமான சில விஷயங்களை கோட்டைவிடுவீர்கள். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேறுவதில் உங்களுக்கு அலைச்சல் உண்டாகும். பணியிடத்தில் மறைமுக விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் கல்வியில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்