Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினர் எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டும்... | Tomorrow Rasi Palan in Tamil | 20.05.2023

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசியினர் எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டும்... | Tomorrow Rasi Palan in Tamil | 20.05.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 06 ஆம் நாளுக்கான [20 மே 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

இந்த ராசியினர் எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டும்... | Tomorrow Rasi Palan in Tamil | 20.05.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

தேவைகளை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்வீர்கள். தொழிலில் புதிய யுக்தியை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். தொடங்கும் புதிய முயற்சி பெரிய வெற்றிக்கு வழி காட்டும். உத்தியோகம் சிறப்பாக இருக்கும். நெருக்கமானவர்களிடம் சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்வீர்கள். இதனால், இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இழுபறியாக இருந்த கடன் வந்துசேரும். சேமிப்பதற்கான வாய்ப்பு உருவாகும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசியினர் எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டும்... | Tomorrow Rasi Palan in Tamil | 20.05.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

தவறுகள் நேர வாய்ப்புள்ளதால், எந்த செயல்களையும் புத்திசாலித்தனத்துடன் செய்ய வேண்டும். வழக்கு சம்பந்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். பிரியமானவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். செலவுகள் அதிகரிக்கும். சலனம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினர் எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டும்... | Tomorrow Rasi Palan in Tamil | 20.05.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

கூட்டு தொழிலில் லாபம் மேம்படும். அனுசரனையான வார்த்தைகளின் மூலம் பிறரை கவர்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். தொழில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணியில் சவால்களை ஈஸியாக சமாளிப்பீர்கள். சகஊழியர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி சம்பந்தமான விஷயங்களில் பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். நல்ல விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசியினர் எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டும்... | Tomorrow Rasi Palan in Tamil | 20.05.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். இதன் மூலம் உங்க திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்யலாம். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் வந்துபோகும். தொழிலை விரிவுபடுத்த புதிய யுக்திகளை கையாளுவீர்கள். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள். இருப்பினும், நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்வது சிறந்தது. நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினர் எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டும்... | Tomorrow Rasi Palan in Tamil | 20.05.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பணவரவு கைக்கு வரும். குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நினைத்து காரியங்கள் நிறைவேறுவதில் தடை ஏற்படலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணிச்சுமை அதிகரித்து காணப்படும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற செலவுகளை எதிர்க்கொள்ள நேரும். துணையுடன் அனுசரித்து நடந்துக்கொண்டால் அனைத்தும் சிறப்புடன் நடக்கும். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசியினர் எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டும்... | Tomorrow Rasi Palan in Tamil | 20.05.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

மனதில் புதுவிதமான தெம்பும், தைரியமும் பிறக்கும். நிர்வாகம் சார்ந்த புதிய முடிவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மற்றவர்களுக்கு உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் கவனமாகப் பழக வேண்டும். துணையுடன் விளையாட்டான பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அனத்தம் உங்களுக்கே. பயணங்களின் போது பணத்தை கையாளுவதில் கவனம் தேவை. ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசியினர் எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டும்... | Tomorrow Rasi Palan in Tamil | 20.05.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் அனுகூலமான செய்திகள் தேடி வரும். எந்தச் செயல் செய்தாலும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். பணியிடத்தில் பதட்டம் ஏற்படும், இதனால் சாதகமான சூழ்நிலை ஏற்படாது. இருப்பினும், சிலருக்கு பதவி உயர்வுக்கான சூழல் ஏற்படும். மற்றவரை விமர்சிப்பதால் தேவையற்ற இன்னல்களை சந்திக்க நேரிடலாம். நீண்ட நாட்கள் கட்ட முடியாமல் தவிர்த்த கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசியினர் எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டும்... | Tomorrow Rasi Palan in Tamil | 20.05.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

ஆன்மீக ஈடுபாடுகளில் நேரத்தை செலவிடுவதன் மூலமாக மன ஆறுதல் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேறுவதில் உங்களுக்கு அலைச்சல் உண்டாகும். அதேபோல், விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது உத்தமம். பணியிடத்தில் மறைமுக விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தோரின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடலாம். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினர் எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டும்... | Tomorrow Rasi Palan in Tamil | 20.05.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

கடின முயற்சியால் சிறந்த வளர்ச்சி காணப்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் நாள். கணவன், மனைவி இடையே அன்பும், அரவணைப்பும் அதிகரித்தே காணப்படும். தொழிலில் லாபம் இரட்டிபாகும், இதனால் சேமிப்பை உயர்த்த முடியும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினர் எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டும்... | Tomorrow Rasi Palan in Tamil | 20.05.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

சில காரியங்களில் தடைகளை கண்டு அதன்பின் வெற்றி காண்பீர்கள். சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். மனதில் தன்பிக்கை அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் தேடி வரும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். சாதனை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசியினர் எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டும்... | Tomorrow Rasi Palan in Tamil | 20.05.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக சொந்த ஊர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் சோர்வாக உணர்வீர்கள். குடும்பத்தினருடன் கலந்து பேசி பழைய பிரச்சனைகளுக்கு முடிவு காண்பீர்கள். துணையுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்க அனுசரித்து நடந்துக்கொள்வது நல்லது. தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஒரு சிலர் குடும்ப சூழலுக்காக கடன் வாங்குவீர்கள். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினர் எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டும்... | Tomorrow Rasi Palan in Tamil | 20.05.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

மிகுந்த ஆற்றலுடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் அனைத்தும் சுமுகமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். தனவரவு திருப்திகரமாகவே இருக்கும். சேமிப்பும் உயரும். கண் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கை வேண்டும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்