Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.05.2023

Nandhinipriya Ganeshan Updated:
உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.05.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 11 ஆம் நாளுக்கான [25 மே 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: -

உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.05.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

விரும்பியது கிடைக்காது. ஆனால், அதற்காக மனம் தளர வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் நீண்ட நாட்களாக தடையாக இருந்துவந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் காலையில் வாக்குவாதம் ஏற்பட்டாலும் மாலையில் சமாதனம் ஆகி விடுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு போராட வேண்டிய நிலை வரும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். ஒரு சிலருக்கு வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் மனதில் அதிகரிக்கும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 3

உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.05.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

சில விஷயங்கள் கசப்பான தருணத்தை உருவாக்கலாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். வருமானம் சிறப்பாகவே உள்ளது. பிறருடன் பேசும் போது மட்டும் யோசித்து பேசுங்கள். வேலை செய்யும் இடத்தில் தடைகளும் ஏமாற்றங்களும் காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்த வரையில், செரிமானம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. அதிக தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். மலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். நஷ்டம்!

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.05.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பல சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். கவனக்குறைவு காரணமாக பணியில் சின்ன சின்ன தவறுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் உங்க கருத்துக்கு மதிப்பு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டு. வரவேண்டிய தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 7

உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.05.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வீடு, மனை சார்ந்த முதலீடுகளில் ஆர்வம் ஏற்படும். மேலதிகாரிகளுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். கூர்மையான ஆயுதங்களை கையாளும்போது எச்சரிக்கை வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு விஷயம் ஏமாற்றத்தை தரும். வருத்தம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 5

உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.05.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பணம் பற்றாக்குறையால் வீட்டில் சின்ன சின்ன பிரச்சனை வரலாம். கணவன், மனைவி இடையே அனுசரித்து செல்லவும். புதிய முயற்சியில் ஈடுபடும்போது பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யவும். சிலருக்கு நீண்டநாள் கனவு நிறைவேறும் நாள். நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பணி நிமிர்த்தமான ரகசியங்களை பகிர வேண்டாம். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.05.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். நம்பிக்கையுடன் ஈடுபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டு. பணிசுமை அதிகமாக காணப்படும். திறமையுடன் செயல்பட வேண்டும். சிலருக்கு நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத வரவு மூலம் சேமிப்பு மிகும், கடன் பிரச்சனை குறையும். பூர்விக சொத்து விவகாரம் சாதகமாக அமையும். வியாபாரத்தில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதன் மூலம் லாபம் மேம்படும். அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.05.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உடன் பணிபுரிபவர்களின் உதவி கிட்டும். நிதி நிலைமை சிறப்பாக உள்ளது. துணையுடன் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். சில நல்ல காரியங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள். சிலர் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. இருப்பினும், அடுத்தவரின் குடும்ப விஷயத்தில் ஒதுங்கி இருப்பது நல்லது. நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: பிங்க்

அதிர்ஷ்ட எண்: 8

உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.05.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கடின உழைப்பிற்கு சரியான பரிசு கிடைக்கும். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாகன பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட சில காரியங்களில் எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். அதிகம் நன்மை நடக்கும் நாள். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவு கிடைக்கும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.05.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

பணம் சம்பந்தபட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் மாற்றத்தை தரும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். வீண் செலவுகளை குறைத்து கொள்ளவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.05.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

சகோதர்களின் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். சிலர் விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகஊழியர்களால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். அதிக பணம் முதலீடு செய்வதை தவிர்க்கவும். காதலர்கள் சந்தேகப்படுவதை தவிர்க்க வேண்டிய நாள். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.05.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

சந்தேக புத்தியால் நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டாகும். மற்றவர்களை நம்பி வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். எளிமையான பணிகள்கூட தாமதமாகும். புதிய நபர்களால் குடும்பத்தில் மாற்றங்கள் ஏற்படும். பணியிடத்தில் சகஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. குடும்பத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெண் சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 7

உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.05.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் வந்து போகும். வியாபாரம் சம்பந்தமான பயணம் ஆதாயம் தரும். நிதிநிலைமை பலன் தரும் வகையில் இருக்கும். பணிகளை விரைவாகவும் திறமையாகவும் செய்து முடிப்பீர்கள். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு வருமானம் அமோகமாக இருக்கும். உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் எல்லாம் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்