Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | இந்த ராசிக்காரருக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும்.. 04.01.2023 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | இந்த ராசிக்காரருக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும்.. 04.01.2023 ராசிபலன்!Representative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 20 ஆம் நாள் புதன்கிழமை [04 ஜனவரி 2023] நாளுக்கான துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்! 

ராசிபலன்: 

துலாம் - கவனம்

விருச்சிகம் - அலைச்சல்

தனுசு - அனுகூலம்

மகரம் - வெற்றி

கும்பம் - நஷ்டம்

மீனம் - அன்பு

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: 06.30 - 07.30 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [04.01.2023]

Nalaya Rasi Palan | இந்த ராசிக்காரருக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும்.. 04.01.2023 ராசிபலன்!Representative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதனால் உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். புதிய பொருள் வாங்குவது சம்பந்தமான எண்ணங்கள் ஈடேறும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்வது சிறந்தது. கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதம் உண்டாகும். மனம் திறந்து பேசுவதன் மூலம் சுமூகமான பலனை பெறலாம். வரவு செலவு இரண்டும் இருக்கும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan | இந்த ராசிக்காரருக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும்.. 04.01.2023 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவித செயல்பாடுகளில் தடைகள் ஏற்படும், நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். உறவினர்களிடம் கோபத்தை குறைத்துக்கொண்டு விட்டுக்கொடுத்து செல்லவும். தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள நேரும், இதனால் மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் அவ்வளவாக இருக்காது. கணவன், மனைவி இடையே பாசம் அதிகரிக்கும். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan | இந்த ராசிக்காரருக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும்.. 04.01.2023 ராசிபலன்!Representative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

கடின முயற்சியால் சிறந்த வளர்ச்சி காணப்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் நாள். கணவன், மனைவி இடையே அன்பும், அரவணைப்பும் அதிகரித்தே காணப்படும். தொழிலில் லாபம் இரட்டிபாகும், இதனால் சேமிப்பை உயர்த்த முடியும். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan | இந்த ராசிக்காரருக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும்.. 04.01.2023 ராசிபலன்!Representative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

வெற்றியை அடைய வேண்டுமென்றால் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். அதேபோல், எந்த செயலையும் உறுதியுடன் செய்தால் வெற்றி நிச்சயம். வீண் சந்தேகங்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களிடம் உங்க குடும்ப விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். தோல் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் சுமாராக தான் இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan | இந்த ராசிக்காரருக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும்.. 04.01.2023 ராசிபலன்!Representative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

விருப்பத்தை அடைவதில் சில தடைகளை சந்திக்கலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். தந்தைவழி உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பணியில் எச்சரிக்கையும் நிதானமும் வேண்டும். எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று இருக்க வேண்டாம். வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள். நஷ்டம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan | இந்த ராசிக்காரருக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும்.. 04.01.2023 ராசிபலன்!Representative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

சில காரியங்களில் தடைகளை கண்டு அதன்பின் வெற்றி காண்பீர்கள். சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். மனதில் தன்பிக்கை அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் தேடி வரும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்