'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம்.
அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 18 ஆம் நாள் திங்கட்கிழமை [ 02 ஜனவரி 2023] நாளுக்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!
ராசிபலன்:
மேஷம் - அதிர்ஷ்டம்
ரிஷபம் - பாராட்டு
மிதுனம் - ஜாக்கிரதை
கடகம் - தனம்
சிம்மம் - பொறுமை
கன்னி - உதவி
நல்ல நேரம்:
காலை: 09.30 - 10.30 வரை
மாலை: 04.30 - 05.30 வரை
இன்னைக்கு ஒரு இனிமையான செய்தி காத்திருக்கிறது. உங்க விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும். இந்த நாளை இன்னும் சிறப்பாக்க உங்க வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள். சின்ன முயற்சியில் பெரிய வெற்றி கிடைக்கும். அனைவரும் வியந்து பாராட்டுவார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். எந்த சின்ன வாய்ப்புகளை மிஸ் பண்ணிட வேண்டாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். பணவரவும் அமோகமாக இருக்கும். ஆக மொத்தம் அதிர்ஷ்டமான நாள். அதிர்ஷ்டம்!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்
அதிர்ஷ்ட எண்: 8
வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்த மறந்துவிடாதீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறி திருப்தி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்க திறமைக்கேற்ற பரிசும் பாராட்டும் கிடைக்கும் நாள். கணவன்-மனைவி இடையே பாசம், அன்பு, அக்கறை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் இரட்டிபாகும். பாராட்டு!
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்
அதிர்ஷ்ட எண்: 3
எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வார்த்தைகளில் கவனம் தேவை. எந்த செயலையும் செய்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து செயல்படவேண்டும். வேலை செய்யும் இடத்தில் எதை பேசுவதாக இருந்தாலும் யோசித்து பேச வேண்டும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவு பெருகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். ஜாக்கிரதை!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட எண்: 1
நேரம் உங்களுக்கு சாதகமானதாக இல்லாததால், எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வராத கடன்கள் உங்களை வந்தடையும். கண் சம்பந்தமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒரு சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. தனம்!
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 6
வருமானம் அதிகமாகும் வாய்ப்பு உருவாகும். செல்வ நிலையை கூட்ட முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். தொழிலில் பொறுப்பு சுமை அதிகரிக்கும். பணத்தை கவனமாக முதலீடு செய்ய வேண்டும். குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும், முடிந்தவரை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அஜாக்கிரதையால் முக்கியமான விஷயம் நழுவும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க உதவி கிடைக்கும். பொறுமை!
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்
அதிர்ஷ்ட எண்: 8
நெருங்கிய நண்பர்களின் உதவியுடன், தொழிலில் இரட்டிப்பு லாபம் ஈட்டுவீர்கள். இன்று முதல் நிறைவேறாத ஆசைகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற தொடங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். ஒருசிலருக்கு வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இருப்பினும் முக்கிய முடிவுகளை எடுக்க இது நல்ல நாள் அல்ல. பூர்வீக சொத்து வகையில் பணவரவு காணப்படும். உதவி!
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 5
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…