Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | வைகுண்ட ஏகாதசி நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 02.01.2023 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | வைகுண்ட ஏகாதசி நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 02.01.2023 ராசிபலன்!Representative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 18 ஆம் நாள் திங்கட்கிழமை [02 ஜனவரி 2023] நாளுக்கான துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்! 

ராசிபலன்: 

துலாம் - சிக்கல்

விருச்சிகம் - நிதானம்

தனுசு - கவனம்

மகரம் - தாமதம்

கும்பம் - சிந்தனை

மீனம் - முயற்சி

நல்ல நேரம்:

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 07.30 - 08.30 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [02.01.2023]

Nalaya Rasi Palan | வைகுண்ட ஏகாதசி நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 02.01.2023 ராசிபலன்!Representative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

திருமணம் சம்பந்தமான பேச்சுவார்தைகளில் அனுகூப்பலன் உண்டாகும். எந்த காரியத்திலும் பக்குவமாகவும் புத்திசாலித்தனத்துடனும் சூழ்நிலைகளை கையாள வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். வரவோடு செலவும் காணப்படும். தொழில் சற்று மந்தமாக காணப்படும். யாராவது உங்க குடும்பத்தினரை பற்றி எதாவது கூறினால், அதை அப்படியே நம்ப வேண்டாம். அப்படி சந்தேகம் இருப்பின் அவர்களிடமே சென்று கேட்டுவிடுங்கள். கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தின் கவனம் தேவை. சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan | வைகுண்ட ஏகாதசி நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 02.01.2023 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

உறவினர்கள் வழியில் திடீர் என்று நல்ல செய்தி வரும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமை எதிர்ப்புகள் குறைந்து மனஅமைதி உண்டாகும். உங்களால் முடியும் என்றால் மட்டும் வாக்குறுதி கொடுங்கள். வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனம் தேவை. புதிய முடிவுகள் எடுக்க அற்புதமான நாள். சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எடுக்கும் சின்ன முயற்சிக்கூட பெரிய வெற்றியை கொடுக்கும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan | வைகுண்ட ஏகாதசி நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 02.01.2023 ராசிபலன்!Representative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

முன்கோபத்தால் பல வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, விட்டு கொடுத்து போவது நல்லது. தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும். உங்கள் மீது அன்பாக இருப்பவர்களை தேவையில்லாமல் சந்தேகப்பட வேண்டும். எந்த செயல்களிலும் பொறுமையான அணுகுமுறை தேவை. எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று இருந்தால், இழப்பு உங்களுக்கே. ஒருசிலருக்கு தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan | வைகுண்ட ஏகாதசி நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 02.01.2023 ராசிபலன்!Representative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

தனவரவு தாராளமாக இருக்கும். பெற்றோர்களின் ஆதரவையும் அன்பையும் பெறுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமம் ஏற்படும். உங்க துணையுடன் வீண்விவாதங்கள் ஏற்படும். எனவே, எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வது நன்மை அளிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு போக வாய்ப்புள்ளது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan | வைகுண்ட ஏகாதசி நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 02.01.2023 ராசிபலன்!Representative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து, நம்பிக்கையுடன் செயல்பட்டால் அதிகம் சாதிக்கலாம். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும் நாள். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தேவையில்லாத சிந்தனைகளை மனதில் இருந்து விரட்டுவது, நல்ல முறையில் செயல்பட உதவும். பணவரவு சுமாராக இருக்கும். எனவே, அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. சிந்தனை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan | வைகுண்ட ஏகாதசி நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 02.01.2023 ராசிபலன்!Representative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு தாராளமாக கிடைக்கும். பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசித்து பேசவேண்டிய நாள். நீங்க சாதாரணமாக பேசும் வார்த்தைக்கூட மற்றவரை காயப்படுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய நன்மதிப்பிற்கு பங்கம் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே, ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 9


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்