Fri ,Dec 08, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்று ரொம்ப உஷாராக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்களா.. அதுவும் மனைவி விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருக்க வேண்டும்... ஜூன் 02, 2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan June 01, 2022 & 17:00 [IST]
Nalaya Rasi Palan: இன்று ரொம்ப உஷாராக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்களா.. அதுவும் மனைவி விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருக்க வேண்டும்... ஜூன் 02, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan | Tomorrow Horoscope 

மேஷம் | Aries 2022 Horoscope

உங்களுடைய பணிவான நடத்தையை அனைவரும் வியந்து வாயார பாராட்டுவார்கள். உங்க வீட்டில் பெரிய மாற்றங்களை உங்களுக்கு பிடிச்ச மாதிரி செய்வீர்கள். அநாவசிய செலவை குறைப்பது நல்லது. உங்க நண்பருடன் சண்டை போட்டு நன்பில் சிறிய விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு. ஜாக்கிரதையாக இருங்கள். இதுவரை போரடித்து வந்த ஆபீஸ் வேலையில் ஒரு திடீர் நல்ல மாற்றம் ஏற்படும். தேவையில்லாத காரணத்துக்காக இன்று உங்க துணையுடன் சின்ன சின்ன சலசலப்பு, வாக்குவாதம் ஏற்படும். உறவினர்கள் உங்களுக்கு பக்கத்துணையாக இருப்பார்கள். பாராட்டு!

ரிஷபம் | Taurus 2022 Horoscope

வேலை செய்யும் இடத்தில் இன்று பணி அதிகரிப்பால் டென்சனை ஏற்படுத்தலாம். எனவே, நண்பர்களுடன் வெளியே சென்று ரிலாக்ஸ் செய்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பழைய உறவு உங்களை தேடி வருவார்கள். மகிழ்ச்சியான நாளாக மாறும். உங்களை குறை சொல்ல உங்கக்கூடவே ஒருவர் இருப்பார், பார்த்து பக்குவமாக இருந்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவி இடையே புரிதல்கள் உண்டாகும். இதனால், மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. டென்ஷன்!

மிதுனம் | Gemini 2022 Horoscope

வீட்டில் ஆனந்தம் தாண்டவம் ஆடும். குழந்தைகளுடனும், குடும்பத்துடனும் இன்றைய பொழுதை கழிப்பீர்கள். இன்று வியாபாரத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வெற்றி பெருவீர்கள். உங்களுடைய குழந்தைகள் இன்று உங்களை பெருமைப்பட வைப்பார்கள். குடும்பத்தில் எந்த பிரச்சனை இருந்தாலும் மனைவியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கிடையிலான அன்பையும், அந்நூநியத்தையும் அதிகரிக்கும். நீங்க காதலிக்கும் நபரிடம் உங்களுடைய காதலை இன்றே சொல்ல முயற்சி செய்யுங்கள். இன்று ஒரு ரொமான்டிக் தருணம் உங்களுக்கு காத்திருக்கிறது. ஒரு முக்கியமான விஷயத்தில் உங்களுடைய துணை உங்களுக்கு உதவியாக இருப்பார். ஆனந்தம்!

கடகம் | Cancer 2022 Horoscope

இன்று வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், இதனால் முகத்தில் ஒரே புன்னகை தான். அதிகம் பழக்கம் இல்லாதவர்களிடம் உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை ஷேர் செய்ய வேண்டாம். சிலருக்கு தொழிலில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து முன்னேற்றம் உண்டாகும். திருமணம் நிச்சயமானவர்கள், நீங்க திருமணம் செய்து கொள்ள போகும் நபரால் அதிக மகிழ்ச்சி அடைவீர்கள். தேவையில்லாத விஷயங்களில் விலகி இருப்பது நல்லது. உங்களால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்ய முயற்சி செய்யுங்கள். இன்று உங்க துணையிடம் இருந்து உங்களுக்கு ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது. கவனம்!

சிம்மம் | Leo 2022 Horoscope

குடும்பத்தில் அமைதியை காப்பாற்றவும், மகிழ்ச்சியை கொண்டுவரவும், இன்று உங்க கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பார்ட்னர்ஸிப் வேண்டாம், ஏனெனில் அவர்கள் உங்களை காரியத்திற்கு பயன்படுத்தி கொள்வார்கள். உங்களுடைய பழைய நண்பர்கள் உங்களிடம் பணம் கேட்டு வருவார்கள். உங்களிடம் இருக்கும் பணயிருப்பை பொறுத்து உதவி செய்யலாம். பகல் முழுவதும் சந்தோசமாக இருப்பீர்கள், ஆனால் இரவு அதற்கு ஆப்போஷிட்டாக மாறிவிடும். குடும்பத்தில் சில முக்கிய விஷயமான முடிவுகள் எடுப்பீர்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, எல்லாவற்றையும் மறந்து உங்க துணையுடன் உல்லாசமாக வெளியே சென்று பொழுதை கழிப்பீர்கள். கோபம்!

கன்னி | Virgo 2022 Horoscope

மன ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ஏனெனில் மனம்தான் வாழ்க்கையின் நுழைவாயில். இன்று பணத்தை எப்படி சேமிப்பது என்று கற்றுக் கொள்வீர்கள். நீங்க உங்க குழந்தைகளிடம் கோபமாக நடந்துக் கொள்வீர்கள். நீங்களும் உங்க காதல் துணையும் காதல் கடலில் மூழ்கி காதலின் உச்சத்தை அடைவீர்கள். அவசரபட்டு எந்த வாக்குறுதியும் தராதீர்கள். கணவன்-மனைவி இடையே உறவையே விட்டுவிடலாம் என்ற அளவிற்கு தொடர்ச்சியாக சண்டை வரும். அதற்காக, மனம் தளர்ந்துவிடாதீர்கள். பொறுமை!

துலாம் | Libra 2022 Horoscope

கோபத்தை கட்டுப்படுத்துங்கள். சிறிய தொழில் செய்பவர்களுக்கு இன்று உங்களுடைய தொழில் சம்பந்தமான ஆலோசனைகளை பெறுவீர்கள். இதனால், தொழிலில் முன்னேற்றம் அடைந்து, நிதி ரீதியாக பயனளிக்கும். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இருக்காது. மகிழ்ச்சி மட்டுமே இருக்கும். உங்களுடைய ஆலோசனைகளை மற்றவர்கள் எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள். அந்த வகையில், நீங்க என்ன சொன்னாலும் நீங்க சொல்வது சரியாக தான் இருக்கும் என்று அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இன்று வீட்டில் ஜாலியாக இருப்பீர்கள், உங்களுக்குப் பிடித்ததை செய்துக் கொண்டு பொழுதை கழிப்பீர்கள். பூமியில் சொர்க்கம் உள்ளதென்று இன்று உங்க துணை உங்களுக்கு உணர்த்துவார். மகிழ்ச்சி!

விருச்சிகம் | Scorpio 2022 Horoscope

இன்று எதிர்பாராத வழியில் பணம் உங்களை தேடி வரும். உங்க ஆசைகளை உங்க குடும்பத்தினர் நிறைவேற்றாமல் போகலாம். எனவே, ஆசையை குறைத்து கொள்வது நல்லது, இதனால் மனஉலைச்சலில் இருந்து விடுபடலாம். எனவே, உங்களுடைய கவனத்தை வேறு பக்கம் கொண்டு சென்றுவிடுங்கள். இன்று நீங்க மிகவும் விரும்பும் நபருடன் கடுமையாக நடுந்துக் கொள்வதால், சின்ன சின்ன சலசலப்பு ஏற்படலாம். திருமண வாழ்க்கையை பொறுத்த வரையில், மனைவியின் விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள், இல்லையென்றால் அவருடைய கடும் கோபத்திற்கு ஆளாவீர்கள். எனவே, இன்று உங்க வேலையை மட்டும் பார்த்தால் போதுமானது. புதிய முயற்சியில் இறங்குவீர்கள். வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும், உங்க குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் துணையின் மூட் சரியில்லாததால் சிறிது சலிப்பை ஏற்படுத்தும். பணவரவு!

தனுசு | Sagittarius 2022 Horoscope

இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள், எந்த காரியத்தையும் வழக்கத்தைவிட மிக விரைவாக செய்து முடிப்பீர்கள். உங்க பேரக் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உங்க துணையுடன் பணம் சம்பந்தமான பிரச்சனைகளால் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் ஒரு சூப்பரான திருப்பத்தை காண்பீர்கள். இதுவரை கடுகடுவென்று நடந்துக்கொண்ட உங்க பாஸ் இன்று கூலாக நடந்துக் கொள்வார். உங்களுடைய துணையின் மனதை புரிந்துக் கொள்வீர்கள். உற்சாகம்!

மகரம் | Capricorn 2022 Horoscope

குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. நீண்டதூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. யாருடைய குடும்ப விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது உத்தமம். இன்று முழுவதும் ஆபிஸில் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் பணியை மேற்கொள்வீர்கள். நீங்க ஃபிரீயாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள், ஆனால் உங்க குடும்ப உறுப்பினர்கள் அதை அனுபவிக்க விடமாட்டார்கள். உங்களுடைய துணை உங்களின் பலவீனத்தை பற்றி அறிந்துக் கொண்டு அதற்கேற்றவாறு நடந்துக் கொள்வார். இது உங்களை மகிழ்ச்சியாக்கும். மனநிம்மதி!

கும்பம் | Aquarius 2022 Horoscope

இன்று உறவினர்களிடம் அல்லது நண்பர்களிடம் இருந்து பணவரவு இருக்கும், இது குடும்பத்தின் பணப்புழக்கத்தை குறைக்கலாம். இதனால், மனநிம்மதி அடைவீர்கள். உங்கள் துணையின் மிக ரொமான்டிக் மறு பக்கத்தை காண்பீர்கள். இன்று உங்களுடைய புத்திசாலி தனத்தால் பணம் சம்பாதிப்பீர்கள். ஆபிஸில் உடன் பணிபுரிபவர்களிடம் ஃபிரியாக பேசிக்கொண்டு ஜாலியாக இருப்பீர்கள். ஆனால், அவ்வாறு இருப்பது உங்க மனநிலையை கெடுக்க வாய்ப்புள்ளது. சந்தோஷம்!

மீனம் | Pisces 2022 Horoscope

உண்மையான காதலை நீங்கள் இன்று உணருவீர்கள். எந்த முயற்சியிலும் வெற்றி காண்பீர்கள். இன்று பணிச்சுமை அதிகம் இருக்காது. எப்பவும் போல கேஸுவலாக இருப்பீர்கள். இந்த நேரத்தை வீணாக்காமல் உங்களுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்திக் கொள்வீர்கள். இன்று கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாகும். தியானம், யோகா, மற்றும் உடற்பயிற்சியில் கவனத்தை திருப்புங்கள். இன்று அனைவரிடமும் பாராட்டை பெறுவீர்கள். அன்பு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்