Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு மட்டும் இன்று ஆபத்து..... 25.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு மட்டும் இன்று ஆபத்து..... 25.11.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 9 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (25.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- இரக்கம்

விருச்சிகம்- சிரமம்

தனுசு- நலம்

மகரம்- நட்பு

கும்பம்- எதிர்ப்பு

மீனம்- குழப்பம்

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை 

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (25.11.2022, வெள்ளி)

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு மட்டும் இன்று ஆபத்து..... 25.11.2022 ராசிபலன்! Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருக்கும் அமைதி இன்று மற்றவரிடம் அமைதியாக நடக்க வைக்கும்.  வெளியூர் பயணம் உண்டு. தொழில் சுமுகமாக செல்லும். பண வரவு உண்டு, எதிர்கால தேவைக்கு சேமிக்க முடியும்.

வீட்டில் அமைதியான அணுகுமுறை நெருக்கம் அளிக்கும். குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்குவீர். கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், உயர்கல்விக்காக அயல்நாடு செல்லும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இரக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு மட்டும் இன்று ஆபத்து..... 25.11.2022 ராசிபலன்! Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வேலையில் இருக்கும் அழுத்தம் உங்களின் மனதின் அமைதியைக் குறைக்கும். பணியிடத்தில் சலிப்பு உண்டாகும். வரவும் செலவும் சமமாக அமையும், பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்காது. 

குடும்ப வாழ்க்கை அன்பாக நகரும். கணவன் மனைவி உறவில் நீண்ட உரையாடல் இருக்கும்.  நட்பு வட்டாரத்துடன் பயணம் ஏற்படும். தூக்கமின்மை உடலை சோர்வாக மாற்றும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு மட்டும் இன்று ஆபத்து..... 25.11.2022 ராசிபலன்! Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று நன்மைகள் நிறைந்த நாளாக அமையும். வியாபார ரீதியாக பல  மாற்றங்கள் உண்டாகும். வழக்கத்தை விட அதிகமாக வேலை இருக்கும். செலவு அதிகமாகும், பணத்தை நிதானமாக செலவு செய்ய வேண்டும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். வீட்டில் தேவையை பூர்த்தி செய்வீர், குடும்பத்தினரை சந்தோஷப்படுத்துவீர். உடல்நலத்தில் சளி, காய்ச்சல் போன்ற கோளாறு உருவாகலாம். குளிர்ச்சியான உணவை தவிர்க்கவும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு மட்டும் இன்று ஆபத்து..... 25.11.2022 ராசிபலன்! Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று எதிர்பாராத வெளியூர் பயணம் உண்டாகும். சிலருக்கு தொழில் மாற்றம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையில் நல்ல வளர்ச்சி உண்டும், சேமிக்க சரியான நேரமாகும். 

வெளிப்படையான பேச்சு குடும்ப வாழ்க்கை சகஜமாக வைக்கும். வீட்டில் நட்பாக நடந்து கொள்ளுவீர். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, புத்துணர்ச்சியாக செயல்படுவீர். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1 

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு மட்டும் இன்று ஆபத்து..... 25.11.2022 ராசிபலன்! Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

நீங்கள் திட்டமிட்ட செயலை முடிக்க மிகவும் சிரமமாக இருக்கும். அலுவலக வேலையைத் தனியாக செய்ய வேண்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்காது. வழக்கத்தை விட அதிகமான பணப்புழக்கம் கிடைக்கும். 

கணவன் மனைவிக்குள் நல்லுறவு கூடும். உங்களின் பேச்சு சில எதிர்ப்பை உருவாக்கிவிடும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் ஆனால் உங்களின் அலட்சியம் வாய்ப்பை தவறவிடும். ஆரோக்கியம் உற்சாகமாக செயல்படும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்:  2

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு மட்டும் இன்று ஆபத்து..... 25.11.2022 ராசிபலன்! Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று இருக்கும் மனநிலை உங்களை என்ன செய்வது போன்ற நிலையை உருவாக்கும். பணியிடத்தில் அமைதியற்ற சூழல் இருக்கும். பொறுமையாக இருப்பது நல்லது.  செலவை சமாளிக்கும் பணப்புழக்கம் உண்டு. 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வீட்டில் பெரியவரின் ஆலோசனை கேட்பீர்.  மாணவர்கள் அமைதியாக கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. உணவு பழக்கத்தில் கவனம் தேவை, வயிறு சார்ந்த பிரச்சனை வரும். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்