Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,188.62
-300.37sensex(-0.41%)
நிஃப்டி21,888.80
-107.05sensex(-0.49%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : அமைதியாக இருந்தால் இன்றைய தினம் சொர்க்கம் ...... 26.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : அமைதியாக இருந்தால் இன்றைய தினம் சொர்க்கம் ...... 26.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 10 ஆம் நாள் சனிக்கிழமை (26.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- யோகம்

விருச்சிகம்- பயம்

தனுசு- ஆதாயம்

மகரம்- மகிழ்ச்சி

கும்பம்- வரவு

மீனம்- சிந்தனை

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 3:15- 4:15 வரை

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (26.11.2022, செவ்வாய்)

Nalaya Rasi Palan : அமைதியாக இருந்தால் இன்றைய தினம் சொர்க்கம் ...... 26.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். மனதில் கேள்வியாக இருந்த பல விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். பணியிடத்தில் சுமுகமாக வேலை நடக்கும்.  இன்று தேவையற்ற செலவு உண்டாகும். 

இல்லற வாழ்வில் புரிதல் அதிகமாகும். நட்பு வட்டாரம் நன்மையைத் தரும், நண்பர்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாடுவீர். உடல்நலத்தில் அக்கறை வேண்டும் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனை உண்டாகும். யோகம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : அமைதியாக இருந்தால் இன்றைய தினம் சொர்க்கம் ...... 26.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று மனதில் இனம்புரியாத பயம் நிலவும். வேலை கொஞ்சம் அதிகமாகக் காணப்படும். இறை வழிபாடு நன்மை வகுக்கும். ஆன்மீக ஸ்தலம் செல்ல நினைப்பீர். நிதி நெருக்கடி உண்டாகும், ஆனால் பண உதவி கிடைக்கும். 

திருமண வாழ்க்கை கசப்பாக இருக்கும், அமைதியான பேச்சு வார்த்தை வேண்டும். காதல் வாழ்வில் தகவல் தொடர்பு  குறையும். உடல்நலத்தில் கவனம் தேவை, மன அழுத்தம் உடல்நலத்தைப் பாதிக்கும். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்  

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : அமைதியாக இருந்தால் இன்றைய தினம் சொர்க்கம் ...... 26.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்கள் வேலைக்கு ஏற்ற உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஆர்டர் கிடைக்கும், உங்களுக்கு துணையாக மனதிற்கு விருப்பமானவரின் உதவி கிடைக்கும். செல்வ நிலை நன்றாக உள்ளது. 

காதல் வாழ்க்கை இனிமையாக உள்ளது, ஒற்றுமை கூடும். குடும்பத்தினர் மூலம் பல நாள் ஆசை தீரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, மூட்டு அல்லது எலும்பு சார்ந்த தொந்தரவு உருவாகலாம். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : அமைதியாக இருந்தால் இன்றைய தினம் சொர்க்கம் ...... 26.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் பல புதிய யோசனைகள் பிறக்கும். கல்வி சார்ந்த சந்தேகம் கேட்டு படிக்கும் ஆர்வம் பிறக்கும். செல்வ நிலை உயரும் சேமிக்க முயல்வது நல்லது. 

வீட்டில் பொறுமையாக இருப்பதால் சந்தோஷம் இரட்டிப்பாகும். நண்பர்களின் மூலம் சந்தோஷம் கூடும். சளி இரும்பல் தொல்லை உண்டாகும், மருத்துவரின் ஆலோசனை அதிகமாகத் தேவைப்படும்.  மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:  4

Nalaya Rasi Palan : அமைதியாக இருந்தால் இன்றைய தினம் சொர்க்கம் ...... 26.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

பல நாட்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கும், மனம் ஆனந்தமாக இருக்கும். பணியிடத்தில் வேலை சுமுகமாக செல்லும். சக பணியாளரின் நட்பு கிடைக்கும், தொழிலில் அடுத்த நிலையை அடைய முடியும். போதுமான அளவு செல்வம் கையில் இருக்கும்.

வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசத்தால் பிரச்சனை உண்டாகும், குடும்ப உறுப்பினரின் மனதைக் காயப்படுத்துவீர். கல்வியில் ஆர்வம் கூடும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை.  வரவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : அமைதியாக இருந்தால் இன்றைய தினம் சொர்க்கம் ...... 26.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சாதாரணமாக நாளாக இருக்கும், வேலையில் பெரிய வளர்ச்சி இருக்காது. வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால் நஷ்டமில்லை. பணத்தைக் கவனமாக செலவிட வேண்டும். 

வாழ்க்கை துணையுடன் சண்டை ஏற்படும், வீட்டில் பேசும்போது நிதானமாக இருக்க வேண்டும். பல புதிய யோசனைகளை நண்பர்களிடம் ஆலோசிப்பீர். ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு இல்லை.  சிந்தனை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்