Nalaya Rasi Palan
சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 23 ஆம் நாள் திங்கட்கிழமை (10.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது,
நல்ல நேரம்
காலை: 06:00- 07:00 வரை
மாலை: 04:45- 05:45 வரை
ராசிபலன்
மேஷம்- வெற்றி
ரிஷபம்- ஏமாற்றம்
மிதுனம்- உயர்வு
கடகம்- அமைதி
சிம்மம்- முயற்சி
கன்னி- நன்மை
Also Read: பித்ரு தோஷம் நிவர்த்தி செய்ய எது சரியான நாள்..!
இன்று நீங்கள் மனதார செய்யும் செயலுக்கு நல்ல பலன் கிடைக்கும், தொழிலில் ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் வேகத்துக்கு தகுந்த மனிதரின் ஒத்துழைப்பு நல்ல பலன் அளிக்கும். செல்வ நிலை ஓரளவு நன்றாக உள்ளது.
குடும்பத்தில் பிரச்சனை இல்லை, உங்கள் முன் கோபம் வீட்டில் அமைதியை குறைக்கும். காதல் வாழ்வில் புரிதல் ஏற்படும். கல்வியில் நல்ல வளர்ச்சி உண்டு. ஆரோக்கியத்தில் கால் வலி வந்து மறையும். வெற்றி!
அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3
இன்று எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி தாமதமாக கிடைக்கும். தொழிலில் வேலைகள் மெதுவாக நடக்கும் வேகம் குறையும். வியாபாரத்தில் இருப்பவர்கள் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்.
காதல் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், வெளியிடத்திற்கு பயணம் மேற்கொள்ளுவீர். குடும்பத்துடன் நிம்மதியாக பொழுது செல்லும். உடல்நலத்தில் சிறிய கவனம் தேவை. ஏமாற்றம்!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 3
இன்றைய தினம் உங்களுக்கு முன்னேற்றமான நாள், தொழில் ஸ்தானம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் நீங்கள் முதன்மை ஸ்தானத்தில் இருப்பீர். பண வரவு சிறப்பாக இருக்கும்.
குடும்ப வாழ்க்கை சுமுகமாக இருக்கும், பிறருக்கு அறிவுரை வழங்கும் ஸ்தானத்தில் இருப்பீர். உங்களால் சுற்றத்தாருக்கு நன்மை நடக்கும். நண்பர்கள் மூலம் சந்தோஷம் அதிகமாகும். உடல்நலம் நன்றாக உள்ளது. உயர்வு!
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்
அதிர்ஷ்ட எண்: 3
இன்றைய தினம் அமைதியான நாளாக இருக்கும், மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். தொழில் சுமுகமாக செல்லும். நிலுவை வேலைகளை செய்வீர். நிதி உதவி கிடைக்கும், செலவை சமாளிக்கலாம்.
குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், விட்டில் குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்க முடியும். கணவன் மனைவி உறவில் நட்பு உண்டாகும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. அமைதி!
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 1
Also Read: கடக ராசிக்கு இந்த ராசியில் காதலர் இருந்தால் வாழ்க்கையே சொர்க்கம் தான்...!
இன்று மனதை அமைதியாக வைக்க முயற்சி செய்யவும், தேவையில்லாத எண்ணங்கள் நேரத்தை விரையமாக்கும். சிலருக்கு பேச்சின் மூலம் வம்பு வளரும். வியாபாரத்தில் முக்கிய முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். பணம் அதிகமாக விரையமாகும்.
காதல் வாழ்க்கையில் விரிசல் ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு துணையாக இருக்கும். கல்வியில் பிரச்சனை இல்லை. உடல்நலம் நன்றாக உள்ளது, ஆழ்ந்த தூக்கம் தேவைப்படும். முயற்சி!
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
அதிர்ஷ்ட எண்: 6
உங்கள் ராசிக்கு இன்றைக்கு அதிர்ஷ்டமான நாள், பணியில் சாதாரணமாகசெய்யும் செயல் நல்ல பலன் அளிக்கும். அனுபவம் வாய்ந்த மனிதரின் உதவி உங்கள் வியாபாரத்தில் பலமாக அமையும். பண வரவு அமோகமாக உண்டு.
குடும்பத்தில் மகிழ்ச்சி ததும்பும். வீட்டிற்கு புதிய பொருள் வாங்குவீர். கணவன் மனைவி உறவு சிறப்பாக செல்லும். மாணவர்களுக்கு கல்வியில் உதவி கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. நன்மை!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (10.10.2022, திங்கள்)
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…