Nalaya Rasi Palan
சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 27 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (14.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது,
நல்ல நேரம்
காலை: 9:15- 10:15 வரை
மாலை: 4:45- 5:45 வரை
ராசிபலன்
துலாம்- முயற்சி
விருச்சிகம்- தனம்
தனுசு- அச்சம்
மகரம்- பக்தி
கும்பம்- லாபம்
மீனம்- வெற்றி
Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (14.10.2022, வெள்ளி)
இன்றைய தினம் போராட்டமாக இருக்கும், மனத்திற்குள் அடுத்து என்ன செய்வது என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். பணியிடத்தில் நன்மைகள் நடக்காது. சக பணியாளரின் ஒத்துழைப்பு குறையும். எதிர்பார்த்த செல்வ நிலை கையில் இருக்காது.
குடும்ப வாழ்வில் சங்கடம் அதிகரிக்கும், உணர்ச்சிப்பூர்வமாக சில முடிவுகள் எடுப்பீர். காதல் வாழ்வில் ஆறுதல் கிடைக்கும். நண்பர்களின் உதவி தேவைப்படும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். முயற்சி!
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
அதிர்ஷ்ட எண்: 5
இன்றைய தினம் அலுவலக பணி முடிக்க எளிமையாக இருக்கும், சுய தொழில் புரியும் நபர்களுக்கு திருப்தி கிடைக்கும். போதுமான அளவு பணப்புழக்கம் கிடைக்கும், தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.
குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். கணவன் மனைவி உறவு இன்பமாக இருக்கும், புரிதல் அதிகமாகும். திருமண முயற்சி செய்யலாம். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. தனம்!
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
அதிர்ஷ்ட எண்: 1
இன்றைய தினம் ஓரளவு சிறப்பான நாளாக இருக்கும், வேலையில் முன்னேற்றம் குறையும். வியாபாரத்தில் கிடைக்காத லாபம் பயத்தை விதைக்கும். லாபம் குறையும், ஆனால் போதுமான அளவு பணப்புழக்கம் இருக்கும்.
குடும்ப வாழ்வில் சிறிய வாக்குவாதம் ஏற்படும், பேச்சின் மூலம் விரிசல் உண்டாகும். காதலர்களுள் முக்கியமான விவாதம் ஏற்படும், அனுசரித்து செல்ல வேண்டும். உடல்நலத்தில் சோர்வு உண்டாகும். அச்சம்!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 3
இன்று மனதில் இருக்கும் தைரியம் புதிய முயற்சிகள் பலவற்றை தொழிலில் ஏற்படுத்தும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாகும். கல்வியில் ஆர்வம் கூடும். வியாபார ரீதியாக பல செலவுகள் உண்டாகும், சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும்.
குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் இன்பமாக இருப்பீர். குடும்பத்தினரை புரிந்து நடப்பீர், சிலருக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கோளாறு ஏற்படலாம். பக்தி!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 3
இன்று வேலையின் காரணமாக சிறிய அலைச்சல் ஏற்படும், பலரின் சந்திப்பு கிடைக்கும். வேலையில் பல சவாலை சமாளிப்பீர். ஓரளவு பணப்புழக்கம் உண்டாகும். ஆனால் சேமிப்பதற்கு கஷ்டமாக இருக்கும்.
திருமண வாழ்வில் நேர்மறை எண்ணங்கள் பிரச்சனை அளிக்கும், ஒற்றுமை பாதிக்கும். வெளிப்படையான உரையாடல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் முதுகு அல்லது மூட்டு வலி உண்டாகும். லாபம்!
அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்
அதிர்ஷ்ட எண்: 4
இன்றைய தினம் சிறப்பான நாள், தெளிவான மனநிலையில் இருப்பீர். அலுவலக பணியில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகள் இலக்கை அடைவர். செல்வ வரவு உண்டாகும், பணத்தை சேமிக்க முடியும். புதிய ஆடம்பர பொருள் வாங்க ஆர்வம் வரும்.
வாழ்க்கை துணையுடன் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் உடன் பொழுதுபோக்கு அம்சத்தில் நேரம் ஒதுக்குவீர். காதல் வாழ்வில் மகிழ்ச்சி கூடும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. வெற்றி!
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்
அதிர்ஷ்ட எண்: 9
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…