Nalaya Rasi Palan
சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 28 ஆம் நாள் சனிக்கிழமை (15.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது,
நல்ல நேரம்
காலை: 10:45- 11:45 வரை
மாலை: 9:30- 10:30 வரை
ராசிபலன்
மேஷம்- நன்மை
ரிஷபம்- ஊக்கம்
மிதுனம்- செலவு
கடகம்- நிம்மதி
சிம்மம்- அமைதி
கன்னி- ஏமாற்றம்
Most Read: 2022 சூரிய கிரகணத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்.....!
உங்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள். செய்யும் முயற்சி நல்ல பலன் அளிக்கும். பணியிடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், குறித்த நேரத்தில் வேலைகள் முடியும். பணப்புழக்கம் அதிகமாகும்.
குடும்பத்தில் அன்பாக நடந்து கொள்ளுவீர். வாழ்க்கை துணையுடன் பயணம் செய்ய முடியும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. நன்மை!
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்
அதிர்ஷ்ட எண்: 1
தொழிலில் இன்று போராட்டமாக இருக்கும். பணியில் ஏற்படும் சிக்கலை சரி செய்ய அதிகம் கடினமாக இருக்கும். மற்றவர்களின் உதவி தொழிலில் ஊக்கம் அளிக்கும். செலவை சமாளிக்கும் பணப்புழக்கம் இருக்கும்.
குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். வீட்டில் பெரியவர்களின் அறிவுரை பலமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஊக்கம்!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 2
இன்றைய தினம் மகிழ்ச்சியாக செல்லும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு, இடையூறு இல்லாமல் வேலை நடக்கும். சுப செலவு உண்டு, குடும்ப தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.
வாழ்க்கை துணையுடன் சகஜமாகப் பழக வேண்டும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். செரிமானம் சார்ந்த தொல்லைகள் இருக்கும். செலவு!
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 9
இன்றைய நாள் நிம்மதியான நாள் ஆகும், அலுவலகத்தில் வேலை சீராக செல்லும். ஆனால் பணியில் பொறுப்புகள் கூடும். நிதி நிலையில் குறைந்த அளவு பணப்புழக்கம் இருக்கும்.
குடும்பத்தில் அமைதி இருக்கும், இல்லற வாழ்வில் வெளிப்படையான பேச்சு அன்பை அதிகரிக்கும். உடல்நலத்தில் அக்கறை வேண்டும், திடீர் கோளாறு ஏற்படும். நிம்மதி!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 7
உங்களுக்கு இன்று மனநிலை அமைதியாக இருக்கும், வேலையைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியும். தொழிலில் திருப்தி உண்டாகும். கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், வீட்டில் ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியைப் பரிமாறி கொள்ளுவீர். இன்பமான உரையாடல் இருக்கும். சிறந்த ஆரோக்கியம் இருக்கும். அமைதி!
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 6
இன்று வெற்றியை பெற தாமதமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆர்டர் நழுவும். பணியிடத்தில் மோதல் ஏற்படலாம், அமைதி காக்க வேண்டும். ஆனால் நிதி நிலை நன்றாக உள்ளது, ஓரளவு செல்வத்தை மிச்சப்படுத்த முடியும்.
குடும்பத்தில் இன்று சந்தோஷமாக இருப்பீர், வாழ்க்கை துணையுடன் அன்பாக பேசுவீர். காதல் வாழ்வில் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உடல்நலம் சுறுசுறுப்பாக இருக்கும். ஏமாற்றம்!
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 7
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…