Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்றைக்கு கிடைக்கும் வாய்ப்பு... நம்ப முடியாத மாற்றம் கொடுக்கும் 16.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 15, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan : இன்றைக்கு கிடைக்கும் வாய்ப்பு...  நம்ப முடியாத மாற்றம் கொடுக்கும் 16.10.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 29 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (16.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம்  வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 06:15- 07:15 வரை

மாலை: 03:15- 04:15 வரை

ராசிபலன் 

துலாம்- உற்சாகம்

விருச்சிகம்- வருத்தம்

தனுசு- புகழ்

மகரம்- நிம்மதி

கும்பம்- சுகம்

மீனம்- இன்பம்

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (16.10.2022, ஞாயிறு)

Nalaya Rasi Palan : இன்றைக்கு கிடைக்கும் வாய்ப்பு...  நம்ப முடியாத மாற்றம் கொடுக்கும் 16.10.2022 ராசிபலன்! Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனதில் எந்த கவலையும் இருக்காது, சுகமான நாளாகும். தொழில் ஆர்வம் கூடும்.  புதிய வேலை வாய்ப்பு உருவாகும். செல்வ நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

காதல் வாழ்வில் ஆனந்தம் அதிகரிக்கும். திருமண பந்தத்தில் நேர்மையான நடத்தை புரிதலை உருவாக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்,ஓய்வு அதிகமாக இருக்கும். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : இன்றைக்கு கிடைக்கும் வாய்ப்பு...  நம்ப முடியாத மாற்றம் கொடுக்கும் 16.10.2022 ராசிபலன்! Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று மனதில் குழப்பம் அதிகமாக இருக்கும், அதிகமான நேரம் என்ன செய்வது என்ற எண்ணம் தான் அதிகமாக ஓடிக்கொண்டு இருக்கும். வியாபாரத்தில் கவனம் குறையும். பணிகள் நிலுவையில் கிடக்கும். 

குடும்ப வாழ்வில் அன்பான நடத்தை மதிக்கப்படும். அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர். காதல் வாழ்வில் பொறுமை தேவை, முக்கிய முடிவு எதுவும் எடுக்காதீர். வயிற்றில் சிறிய தொந்தரவு ஏற்படும். வருத்தம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு  

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : இன்றைக்கு கிடைக்கும் வாய்ப்பு...  நம்ப முடியாத மாற்றம் கொடுக்கும் 16.10.2022 ராசிபலன்! Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

பல நாட்களாக நீங்கள் செய்த செயலின் பலனாக மதிப்பு கிடைக்கும், ஆனால் வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். தொழில் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமிக்க முயலவும். 

குடும்பத்தில் இன்பம் அதிகரிக்கும். சுற்றத்தார் மூலம் ஆதாயம் உண்டு. உறவினர் வருகை இருக்கும். உணவு பழக்கம் ஆரோக்கியத்தில் கோளாறு அளிக்கும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : இன்றைக்கு கிடைக்கும் வாய்ப்பு...  நம்ப முடியாத மாற்றம் கொடுக்கும் 16.10.2022 ராசிபலன்! Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மிகவும் திருப்திகரமாக இருக்கும், வேலையில் ஓய்வு கிடைக்கும். பயணம் உண்டு. எதிர்பாராத பண வரவு உண்டு, புதிய சொத்து வாங்க முடியும்.  

குடும்பத்தில் உற்சாகமாக இருப்பீர், கணவன் மனைவி உறவில் நட்பு அதிகரிக்கும். அன்பான நடத்தையால் புதிய நட்பு கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்:  2

Nalaya Rasi Palan : இன்றைக்கு கிடைக்கும் வாய்ப்பு...  நம்ப முடியாத மாற்றம் கொடுக்கும் 16.10.2022 ராசிபலன்! Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று மகிழ்ச்சி அதிகமாக இருக்கும், அலுவலக பணிகள் நிலையாக செல்லும். சுய தொழிலில் புதிய முயற்சிகள் உருவாகும். நிதி நிலை நன்றாக உள்ளது, சுதந்திரமாக பல செலவுகள் செய்ய முடியும்.

வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக பொழுது செல்லும், தனிப்பட்ட அணுகுமுறை பிரச்சனையை அகற்றி நல்ல தீர்வு பிறக்கும். மனநிலை தெளிவாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : இன்றைக்கு கிடைக்கும் வாய்ப்பு...  நம்ப முடியாத மாற்றம் கொடுக்கும் 16.10.2022 ராசிபலன்! Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

எதிர்பாராத வெற்றி இன்று சந்தோஷத்தை இரட்டிப்பாக மாற்றும். வியாபாரத்தில் அசுர வளர்ச்சி உண்டு. ஆனால் வேலையில் அழுத்தம் சிறிய பதட்டம் அளிக்கும். பணத்தை நிதானமாக செலவு செய்ய வேண்டும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக நகரும், அவ்வப்போது வரும் சண்டைகள் குறையும். வயதான மீன ராசியினருக்கு நல்ல தகவல் கிடைக்கும். உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும், சிலருக்கு வயிறு, அடிவயிறு பிரச்சனை ஏற்படும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்