Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: பல யோசனைகள் பிறக்கும் நாளாக இருக்கும்... 17.10.2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi October 16, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan: பல யோசனைகள் பிறக்கும் நாளாக இருக்கும்... 17.10.2022 ராசிபலன்..!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 30 ஆம் நாள் திங்கள்கிழமை (17.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 1:45- 2:45 வரை

ராசிபலன் 

மேஷம்- பொறுமை

ரிஷபம்- போட்டி

மிதுனம்- ஆசை

கடகம்- விவேகம்

சிம்மம்- ஆக்கம்

கன்னி- பாராட்டு

Nalaya Rasi Palan: பல யோசனைகள் பிறக்கும் நாளாக இருக்கும்... 17.10.2022 ராசிபலன்..!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் இருக்கும் வேலை பழு மனதில் கவலையை அதிகப்படுத்தும், மற்றவர்கள் மீது கோபமாக வெளிப்படும். வியாபாரத்தில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். செல்வ நிலையில் செலவு அதிகரிக்கும். 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் இருக்கும். ஆனால் திடீர் கோபம் வீட்டில் விரிசலை உருவாக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, பதட்டமான நிலையில் இருப்பீர். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: பல யோசனைகள் பிறக்கும் நாளாக இருக்கும்... 17.10.2022 ராசிபலன்..!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உற்சாகமான நாள், தொழிலில் ஆரோக்கிய போட்டி இருக்கும். உத்தியோகத்தில் வேலைகள் வேகமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும், போட்டி தேர்வு சாதகமாகும். பண விரையம் ஏற்படும்.

குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் பெரியவர்களுடன் வாக்குவாதம் உருவாகி மறையும். நண்பர்களின் ஆதரவு இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: பல யோசனைகள் பிறக்கும் நாளாக இருக்கும்... 17.10.2022 ராசிபலன்..!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்த அந்தஸ்து கிடைக்கும், நாணயமான பரிவர்த்தனைகள் நடக்கும். அலுவலகத்தில் சுமுகமான நிலையே இருக்கும். செல்வ நிலை உயரும்.

குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும், குடும்ப உறுப்பினர் மூலம் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, கால்வலி ஏற்படும். ஆசை!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: பல யோசனைகள் பிறக்கும் நாளாக இருக்கும்... 17.10.2022 ராசிபலன்..!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று நீங்கள் எதிர்பார்க்காத நபர் மூலம் ஆதாயம் உண்டு. புதிய முயற்சியில் தெளிவாக செயல்படுவீர். வருமானத்தை உயர்த்த புதிய ஐடியா கிடைக்கும். மாணவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். 

வீட்டில் நிம்மதியாக பொழுது செல்லும். சுற்றத்தாருடன் ஆரோக்கியமான உறவு உண்டாகும். காதல் வாழ்வில் இனிமைகள் கூடும். உடல்நலம் நன்றாக உள்ளது. விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: பல யோசனைகள் பிறக்கும் நாளாக இருக்கும்... 17.10.2022 ராசிபலன்..!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மிகவும் நிதானமாக இருப்பீர், தொழிலில் பல முக்கிய முடிவுகளை எடுப்பீர். சக பணியாளரின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் மிகவும் துல்லியமான முடிவுகள் எடுப்பீர். பண வரவு உண்டு. 

வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும், திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும்.  காதல் வாழ்வில் பேச்சு தொடர்பு குறையும். தெளிவான மனநிலை இருக்கும், உடல்நலம் நன்றாக இருக்கும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: பல யோசனைகள் பிறக்கும் நாளாக இருக்கும்... 17.10.2022 ராசிபலன்..!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று லாபகரமான நாளாகும், பல திட்டங்கள் இன்று செயலாக மாறும். பணியிடத்தில் இன்று நல்ல தருணமாக இருக்கும். மாணவர்களுக்கு புதிய முயற்சிக்கு புகழ் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். 

குடும்பத்தில் அமைதியான நிலை இருக்கும், கணவன் மனைவி உறவில் வருங்கால சார்ந்த உரையாடல் இருக்கும். நண்பர்களுக்கு உதவி செய்வீர். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (17.10.2022, திங்கள்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்