Nalaya Rasi Palan
சுபகிருது வருடம் ஐப்பசி 2 மாதம் ஆம் நாள் புதன்கிழமை (19.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம்வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது,
நல்ல நேரம்
காலை: 09:45- 10:45 வரை
மாலை: 4:45- 5:45 வரை
ராசிபலன்
துலாம்- பயம்
விருச்சிகம்- நிறைவு
தனுசு- பரிசு
மகரம்- நன்மை
கும்பம்- ஆக்கம்
மீனம்- செலவு
Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (19.10.2022, புதன் )
இன்று சந்தோஷம் குறையும்,மனம் பதட்டமாக இருக்கும். தொழிலில் சிறிய தவறு நம்பிக்கையை குறைக்கும். ஆனால் சக பணியாளர் உதவி பலமாக அமையும். நிதி நிலை நன்றாக உள்ளது.
குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஆனால் பொறுமை தவறுவதால் வீட்டில் அமைதி குறையும். காதல் வாழ்வில் சலசலப்பு வரும். ஆரோக்கியத்தில் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனை இருக்கும். பயம்!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 3
இன்று மனதில் எந்த கவலையும் இல்லாத திருப்திகரமான நாளாகும், பணியில் ஒரு நிம்மதி இருக்கும். கல்வியில் ஆர்வம் கூடும். செல்வ நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
திருமண வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். வீட்டில் அதிக நேரம் செலவிட முடியும். குடும்பத்துடன் வெளியே செல்வீர். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும், திடீர் தொந்தரவு ஏற்படும். நிறைவு!
அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்
அதிர்ஷ்ட எண்: 5
தொழிலில் அசுர வளர்ச்சி காணும், அலுவலகத்தில் உங்களின் செயல் முதன்மை பெறும். வருமானத்தை உயர்த்தி கொள்ளுவீர்கள், ஆடம்பர செலவு கொஞ்சம் இருக்கும். வியாபாரத்தில் முதலீடு மூலம் சிக்கல் ஏற்படலாம்.
நண்பர்கள் மூலம் எதிர்பாராத சந்தோஷம் கிடைக்கும். வீட்டில் சற்று பொறுமையாக இருத்தல் வேண்டும், முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியதாக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. பரிசு!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9
இன்றைய நலமான நாளாக இருக்கும், சுறுசுறுப்பாக செயல்படுவீர். அலுவலகத்தில் வழக்கமான பணிகள் நல்ல பலனளிக்கும் ஆனால் புதிய முயற்சி சாதகமாகாது. செலவுகள் அதிகமாகும், கடன் வாங்குவீர்.
வீட்டில் உள்ளவரின் தேவையைப் பூர்த்தி செய்ய அதிகமாகப் போராட வேண்டியதாக இருக்கும். காதல் வாழ்க்கை அன்பு அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். உடல்நலத்தில் பெரிய பிரச்சனை இல்லை. நன்மை!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 4
இன்று சந்தோஷமாக இருப்பீர், மனநிலை தெளிவாக இருக்கும். ஆராய்ச்சி தொடர்பில் இருப்பவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். புதிய சிந்தனைகள் செயலாக மாற்ற முடியும். பண வரவு உண்டு.
வீட்டில் சந்தோஷமாக இருப்பீர். காதல் வாழ்வில் நட்பு அதிகரிக்கும். சுற்றத்தார் உடன் நட்பு பலமாகும். உடல்நலத்தில் கவனம் தேவை, உடல் சோர்வாக இருக்கும். ஆக்கம்!
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்
அதிர்ஷ்ட எண்: 6
உங்களுக்கு வேலைச் சுமை குறையும். தொழிலில் புதிய வேலைகள் சுமுகமாக நகரும், லாபம் பார்க்க முடியும். நிதி நிலையில் மிதமான பண வரவு இருக்கும், சேமிக்க முடியாது.
வீட்டில் அனைவருடன் இன்பமாகப் பொழுதை செலவிடுவீர்கள், குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக நகரும். காதல் வாழ்வில் வெளியே செல்லும் வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மூலம் புதிய விசயத்தை கற்றுக் கொள்ளுவீர். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. செலவு!
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
அதிர்ஷ்ட எண்: 1
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…