Nalaya Rasi Palan
சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 3 ஆம் நாள் வியாழக்கிழமை (20.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது,
நல்ல நேரம்
காலை: 10:45- 11:45 வரை
மாலை: -
ராசிபலன்
மேஷம்- எதிர்ப்பு
ரிஷபம்-தடங்கல்
மிதுனம்- மகிழ்ச்சி
கடகம்- லாபம்
சிம்மம்- சுகம்
கன்னி- வெற்றி
தொழிலில் எதிர்பார்த்த ரிசல்ட் பெற மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் போட்டி அதிகமாக இருக்கும், லாபம் பார்ப்பது போராட்டமாக இருக்கும். செல்வ நிலை வழக்கம்போல் இருக்கும்.
வீட்டில் தனிமையாக இருக்க நினைப்பீர். குடும்ப உறுப்பினர் அறிவுரை மனதில் நம்பிக்கையைத் துளிர் விட செய்யும். ஆரோக்கியத்தில் எந்த தொந்தரவு இல்லை. எதிர்ப்பு!
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
இன்றைய தினம் அலுவலகத்தில் இருக்கும் மந்தமான நிலை, பணியில் கவனம் செலுத்த தூண்டாது. வழக்கமான வேலையிலும் தாமதம் ஏற்படும். பண வரவு குறையும், செலவு பெரியதாக இருக்காது.
குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களின் உதவி நிதி சார்ந்த தொல்லையை சமாளிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, உடல் சோர்வாக இருக்கும். தடங்கல்!
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 3
இன்று அமைதியான நாள், அலுவலகத்தில் வேலைகள் வழக்கம்போல் செயல்படும். புதிய மனிதரின் சந்திப்பு கிடைக்கும், தொழில் சார்ந்த தொல்லை கிடைக்கும். செல்வ நிலையில் வரவும் செலவும் சமமாக இருக்கும்.
வீட்டில் பொழுது சந்தோஷமாக செல்லும், மனம் அமைதியாக இருக்கும். குடும்பத்தினர் உடன் கலகலப்பான உரையாடல் இருக்கும். காதல் வாழ்வில் ஒற்றுமை கூடும். சுறுசுறுப்பாக செயல்படுவீர். மகிழ்ச்சி!
அதிர்ஷ்ட நிறம்: ஆர்ஞ்சு நிறம்
அதிர்ஷ்ட எண்: 1
இன்றைய தினம் அதிர்ஷ்டமான நாள் ஆகும், வியாபாரிகளுக்கு எதிர்பார்க்காத மாற்றம் ஏற்படும். புதிய முதலீடு செய்வீர். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், புதிய பொருள் வாங்குவீர்.
குடும்பத்தினர் உடன் வெளியே செல்வீர், ஆடம்பர செலவு ஏற்படும். இல்லற வாழ்வில் அனந்தம் அதிகமாகும். நண்பர்களுடன் மாலை பொழுதில் நேரம் ஒதுக்க முடியும். உடல்நலத்தில் கண் எரிச்சல் போன்ற பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. லாபம்!
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்
அதிர்ஷ்ட எண்: 5
இன்றைய தினம் மனமும் உடலும் ஒருநிலையில் செயல்படும், தொழிலில் நிதானமாக செயல்படுவீர். துல்லியமான விஷயங்களில் வெற்றி காண்பீர். மாணவர்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பண வரவு உண்டு.
குடும்பத்தில் பொறுமை காப்பது நல்லது, வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். திருமண பந்தத்தில் அமைதியாக இருக்க வேண்டும். உடல்நலம் நன்றாக உள்ளது. சுகம்!
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 3
இன்று உங்களை முன்னுதாரணமாகச் செய்து பெருமைப்படுத்துவர், அலுவலக வேலை சிறப்பாகச் செயல்பட உடல்நலம் ஒத்துழைக்கும். கல்வியில் எதிர்பார்த்த நிலை கிடைக்கும், சுற்றத்தாரின் மதிப்பு கிடைக்கும். போதுமான அளவு பணப்புழக்கம் கையில் இருக்கும்.
குடும்பத்தினர் உடன் நல்லுறவு இருக்கும். காதல் வாழ்க்கையில் நெருக்கம் அதிகமாகும், திடீர் இன்ப அதிர்ச்சி இருக்கும். நட்பு வட்டாரம் நன்றாக உள்ளது. ஆரோக்கியமாக செயல்படுவீர். வெற்றி!
அதிர்ஷ்ட நிறம்: பிங்க் நிறம்
அதிர்ஷ்ட எண்: 8
Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (20.10.2022 வியாழன்)
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…