Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இனி தொழிலில் ஏறுமுகம் தான்... 4.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 03, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan: இனி தொழிலில் ஏறுமுகம் தான்... 4.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 17 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (4.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- மீனம் வரை 12 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

ராசிபலன் 

மேஷம்- வெற்றி

ரிஷபம்- அன்பு

மிதுனம்- சுகம்

கடகம்- உயர்வு

சிம்மம்- நட்பு

கன்னி- அமைதி

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (4:10:22)

Nalaya Rasi Palan: இனி தொழிலில் ஏறுமுகம் தான்... 4.10.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

அலுவலகத்தில் உங்கள் நிலை சாதகமாக இருக்கும், தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.செல்வ நிலை அமோக உள்ளது, எதிர்கால சேமிப்பில் அக்கறை வரும். மாணவர்களுக்கு கல்வியில் உற்சாகம் பிறக்கும். 

திருமண வாழ்க்கையில் நல்ல நெருக்கம் உருவாகும், அன்பு அதிகரிக்கும். பெற்றோர் உங்களின் மீது அதிக நம்பிக்கை வைப்பர். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: இனி தொழிலில் ஏறுமுகம் தான்... 4.10.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்களுக்கு அலுவலகத்தில் முக்கியத்துவம் குறைவதாக உணர்வீர். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். செல்வ நிலையில் பிரச்சனை இல்லை, ஆனால் செலவு அதிகரிக்கும். 

திருமணப் பந்தத்தில் நல்ல புரிதல் ஏற்படும்.   குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும். காதல் வாழ்வில் நல்லுறவு ஏற்படும். உடல்நலத்தில் அக்கறை வேண்டும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: இனி தொழிலில் ஏறுமுகம் தான்... 4.10.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

வியாபாரத்தில் வழக்கமான வேலையில் பிரச்சனை ஏற்படாது, புதிய முயற்சியில் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லதாகும். இன்று செல்வ நிலையில் திடீர் செலவு வரும், செய்யும் முதலீட்டில் கவனமாக இருங்கள். திருமண வாழ்க்கை  ஊடல்கள்  ஏற்படும்.  

குடும்பத்தாருடன் கலந்து உரையாடுவது முக்கியமான விசயங்களில் தவறு நடப்பதைத் தவிர்க்கும். உடல்நலத்தில் நரம்பு சார்ந்த தொல்லைகள் ஏற்படும்.  சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இனி தொழிலில் ஏறுமுகம் தான்... 4.10.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டு. அலுவலக வேலையில் நல்ல பலன் உண்டு. சிறப்பான சூழல் தொழிலில் உண்டு. சக பணியாளரின் உதவி பலமாக அமையும். பணப்புழக்கம் நன்றாக உள்ளது. 

வீட்டில் நெருக்கம் அதிகமாகும். குடும்ப உறுப்பினருடன் அன்பாக பொழுதை செலவிடுவர். நண்பர்கள் மூலம் திருப்தி கிடைக்கும், தொழிலில் ஆதாயம் உண்டு. கல்வியில் முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: இனி தொழிலில் ஏறுமுகம் தான்... 4.10.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அதிக  நேரம் தொழிலில் நேரம் ஒதுக்குவீர். புதிய மனிதரின் சந்திப்பு கிடைக்கும். திருப்திகரமான பண வளர்ச்சி உண்டு. செலவுகளைக் கவனமாக செய்ய வேண்டும். 

காதல் வாழ்க்கையில் புரிதல் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகமாகும். கல்வியில் ஆர்வம் கூடும். உடல்நலத்தில் சளி, காய்ச்சல் போன்ற சிறிய பிரச்சனைகள் ஏற்படும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: இனி தொழிலில் ஏறுமுகம் தான்... 4.10.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் இருந்த பிரச்சனை சரி செய்ய உதவி கிடைக்கும். அலுவலகத்தில் வேலைகள் முழுமூச்சாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். செலவில் கவனம் தேவை.

குடும்பத்தில் நல்லுறவு ஏற்படும். திருமண வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் மன அமைதி கிடைக்கும். உணவு பழக்கத்தால் சிறிய பிரச்சனை கிடைக்கும்.  அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்