Nalaya Rasi Palan
சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 16 ஆம் நாள் திங்கட்கிழமை (3.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது,
நல்ல நேரம்
காலை: 06:15- 07:15 வரை
மாலை: 04:45- 05:45 வரை
ராசிபலன்
மேஷம்- ஆதாயம்
ரிஷபம்- ஆதரவு
மிதுனம்- ஏமாற்றம்
கடகம்- போட்டி
சிம்மம்- லாபம்
கன்னி- பெருமை
இன்று தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது, பணி செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். தெய்வ வழிபாடு அவசியம் ஆகும், கல்வியில் முன்னேற்றம் இருக்கும். செல்வ நிலையைப் பொறுத்தவரை லாப ஸ்தானமாகும். தன நிலை உயரும்.
வீட்டில் நிம்மதி இருக்கும், குடும்பத்தினரின் உதவி தொழிலில் நல்ல பலன் அளிக்கும். நண்பர்கள் மூலம் வெறி கிடைக்கும். ஆன்மீக பயணம் செல்ல விரும்பார்கள். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. ஆதாயம்!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2
அலுவலகத்தில் வேளைகள் திட்டமிட்ட படி சிறப்பாக நடக்கும், சக பணியாளர் உதவி பலமாக இருக்கும். தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். செல்வ நிலை நன்றாக இருக்கும்.
குடும்பத்தில் அமைதி நிலவும். அனைவரையும் குஷி படுத்த கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருக்கும். காதல் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் உருவாகும். ஆதரவு!
அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்
அதிர்ஷ்ட எண்: 3
இன்று நீங்கள் எதிர்பார்த்த வெற்றி தொழிலில் கிடைக்காது. வியாபாரம் மந்தமாக இருக்கும். கல்வி நிலையில் பிரச்சனை இல்லை, மாணவர்கள் வழக்கம்போல் படிப்பர். கையில் போதுமான அளவு பணப்புழக்கம் இருக்கும்.
காதல் வாழ்வில் விரிசல் ஏற்படும். இல்லற வாழ்வில் அனுசரித்து செல்ல வேண்டும். எதிர்பார்ப்புகள் பொய்யாகும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது, ஓய்வு தேவைப்படும். ஏமாற்றம்!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 6
இன்று அலுவலகத்தில் வேலை மெதுவாக நடக்கும். அதுமட்டுமின்றி இலக்கை அடைய பல தடைகளை கடக்க வேண்டியதாக இருக்கும். பண வரவு உண்டு, இதுவரை இருந்த நிதி நெருக்கடியைத் தீர்க்கும். மாணவர்களுக்கு உருவாகும் புதிய ஐடியாவுக்கு ஆசிரியர் நல்ல மதிப்பு அளிப்பார்.
குடும்ப வாழ்க்கை சுமுகமாக செல்லும், பெரியவர்களின் அறிவுரை மனதை அமைதிப்படுத்தும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, ஒரு சிலருக்கு கண் எரிச்சல் இருக்கும். போட்டி!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1
இன்று வியாபாரம் சிறப்பாக இருக்கும், புதிய முயற்சி நல்ல பலன் அளிக்கும். கணமான பண வரவு உண்டு. பொழுதுபோக்கு காரியத்தில் செலவிட விரும்பம் வரும். புதிய இடத்திற்குச் செல்ல ஆசைப்படுவீர்கள்.
இல்லற வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், நல்லுறவு ஏற்படும். நண்பர்களால் சந்தோஷம் இரட்டிப்பாக அதிகமாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். லாபம்!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4
உங்களின் விடாமுயற்சி தொழிலில் மதிப்பை உருவாக்கும். வியாபாரத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சுற்றத்தார் மத்தியில் இன்று நீங்கள் முதன்மை வகுப்பீர். தேவையை சமாளிக்கும் அளவு பணப்புழக்கம் இருக்கும்.
குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், குழந்தைகள் மூலம் பெற்றோருக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் வயிறு சார்ந்த தொல்லை ஏற்படும். பெருமை!
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 3
Part 2: துலாம்- மீனம் வரை 3.10.22 ராசிபலன்………..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…