Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இனி இந்த ராசிக்காரருக்கு யோகமான வாழ்க்கை தான்.. 31.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 30, 2022 & 13:35 [IST]
Nalaya Rasi Palan: இனி இந்த ராசிக்காரருக்கு யோகமான வாழ்க்கை தான்.. 31.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 14 ஆம் நாள் திங்கட்கிழமை (31.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்-  மீனம்  வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 3:00- 4:00 வரை

ராசிபலன் 

துலாம்- ஆக்கம்

விருச்சிகம்- இன்பம்

தனுசு- நற்செயல்

மகரம்- சிரமம்

கும்பம்- உற்சாகம்

மீனம்- உதவி

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (31.10.2022, திங்கள்)

Nalaya Rasi Palan: இனி இந்த ராசிக்காரருக்கு யோகமான வாழ்க்கை தான்.. 31.10.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இருக்கும் பிடிவாதம் தொழிலில் அசுர வளர்ச்சி காணும், அலுவலகத்தில் உங்களின் செயல் முதன்மை பெறும். தொழிலில் பல புதிய யுக்திகளைக் கையாளுவீர்.  வருமானத்தை உயர்த்தி கொள்ளுவீர்கள், ஆடம்பர செலவு கொஞ்சம் இருக்கும்.

வீட்டில் முக்கிய பொறுப்புகள் எடுப்பீர், நீண்ட உரையாடல் இருக்கும். காதல் வாழ்க்கையில் முக்கிய  முடிவு எடுக்க வேண்டியதாக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, ஓய்வு தேவைப்படும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: இனி இந்த ராசிக்காரருக்கு யோகமான வாழ்க்கை தான்.. 31.10.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று மனதில் இருக்கும் உறுதி இன்று ஏற்படும் பிரச்சனைகளை லாவகமாக சரி செய்யும், தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது. வியாபாரத்தில் எதிர்பார்த்த முடிவுகள் இல்லை, பங்குதாரர்களின் அலட்சியம் பண விரையத்தை அளிக்கும். 

குடும்பத்தினர் அன்பாக நடந்து கொள்வர். கணவன் மனைவி உறவில் முக்கியமான உரையாடல் இருக்கும்.  மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்:  கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இனி இந்த ராசிக்காரருக்கு யோகமான வாழ்க்கை தான்.. 31.10.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்களின் திறமையான அணுகுமுறை தொழிலில் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கக் கூடும். கையில் தேவையான அளவு பணம் நிற்கும். மாணவர்களுக்கு எதிர்பாராத உதவி கிடைக்கும். 

காதல் வாழ்வில் சந்தோஷம் கூடும், ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்லுவீர்.  கணவன் மனைவி உறவு அமைதியாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இனி இந்த ராசிக்காரருக்கு யோகமான வாழ்க்கை தான்.. 31.10.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று தொழில் ஸ்தானத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் பெரியளவு நஷ்டம் இருக்காது. நிதி நிலை மிதமான பண வரவு இருக்கும், ஆனால் பணத்தைக் கவனமாக செலவு செய்ய வேண்டும்.

குடும்பத்தில்  சிறிய விரிசல் உருவாகும், கணவன் மனைவி உறவில் பொறுமையாக இருப்பது நல்லது. காதல் வாழ்க்கையில் நட்பான அணுகுமுறை நல்ல நெருக்கத்தை அளிக்கும். உடல்நலத்தில் வயிறு சார்ந்த பிரச்சனை ஏற்படும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் 

அதிர்ஷ்ட எண்:  1

Nalaya Rasi Palan: இனி இந்த ராசிக்காரருக்கு யோகமான வாழ்க்கை தான்.. 31.10.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று வெற்றி அடைய பல தடைகளைக் கடக்க வேண்டியதாக இருக்கும். வியாபாரத்தில் இன்று போட்டிகள் அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலையில் செலவு தான் ஓங்கி இருக்கும், தேவையற்ற செலவைக் குறைக்க முயலுவீர்கள்.

குடும்ப வாழ்க்கையில் ஆனந்தம் அதிகமாகும், குடும்பத்தினர் உடன் சகஜமாக பழகுவீர். வீட்டில் ஆறுதல் கிடைக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, மனம் உற்சாகமாக செயல்படும். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: இனி இந்த ராசிக்காரருக்கு யோகமான வாழ்க்கை தான்.. 31.10.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் இலக்கை முடிக்கக் கடினமாக இருக்கும், தடைகள் பல உருவாகும். குறித்த நேரத்தில் முடிக்க முடியாது கால தாமதம் ஏற்படும். சக மாணவர்களின் உதவியை எதிர்பார்ப்பீர்கள். செல்வ நிலையில் பிரச்சனை இல்லை. 

காதல் வாழ்வில் பொறுமையாக இருப்பது பிரச்சனை அளிக்காது. வீட்டில் பேச்சினால்  இன்று வாக்குவாதம் ஏற்படும், கணவன் மனைவி உறவு அமைதியாக இருப்பது நல்லது. ஆரோக்கியம் நன்றாக உள்ளது. உதவி!

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்