Nalaya Rasi Palan
சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 19 ஆம் நாள் வியாழக்கிழமை (6.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது,
நல்ல நேரம்
காலை: 10:45- 11:45 வரை
மாலை: -
ராசிபலன்
துலாம்- நன்மை
விருச்சிகம்- பொறுமை
தனுசு- வரவு
மகரம்- நிறைவு
கும்பம்- ஆதரவு
மீனம்- போட்டி
Part 1:- மேஷம்- கன்னி ராசிபலன் (6.10.2022, வியாழன்)
இன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் அலுவலகத்தில் வேலைகள் நன்றாக செல்லும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற வெகுமதி கிடைக்கும். ஆனால் நிதி நிலையில் செலவு தான் அதிகமாக இருக்கும்.
குடும்பத்தில் அனைவருடனும் அனுசரணையாக இருப்பீர். இல்லற வாழ்வில் மகிழ்ச்சி அதிகமாகும். நண்பர்கள் மூலம் சந்தோஷம் பிறக்கும். ஆரோக்கியத்தில் சிறிய தொல்லைகள் ஏற்படும், மருத்துவ ஆலோசனை தேவைப்படும். நன்மை!
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்
அதிர்ஷ்ட எண்: 2
தொழில் இன்று அதிக பொறுமையாக இருக்க வேண்டும். புதிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். சுயதொழிலில் அதிகமாக உழைக்க வேண்டியதாக இருக்கும். ஓரளவு லாபம் பார்க்க முடியும். வரவும் செலவும் சமமாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும், சண்டை சச்சரவு அதிகரிக்கும். பெரியவர்களின் அறிவுரை தேவைப்படும். நண்பர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். உடல்நலத்தில் சோர்வு இருக்கும், ஓய்வு தேவைப்படும். பொறுமை!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 3
இன்றைய தினம் கையில் கணமான பணப்புழக்கம் இருக்கும். பணியிடத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். திறமைக்கு ஏற்ற பாராட்டு உண்டு. நிதிநிலையில் சிறப்பான வளர்ச்சி இருக்கும்.
வீட்டில் நிம்மதியாக இருப்பீர். காதல் வாழ்வில் இனிமையாக பேச்சு அன்யோன்யத்தை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. வரவு!
அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்
அதிர்ஷ்ட எண்: 6
நீங்கள் செய்யும் செயலால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவல வேலையில் கவனமாக இருக்க வேண்டும், சிறிய அலட்சியம் பணியைத் திரும்ப செய்ய வைத்துவிடும். பணப்புழக்கம் ஓரளவு இருக்கும், செலவை சமாளிக்கலாம்.
குடும்ப வாழ்வில் பொறுமை தேவை, அனுசரித்து செல்வதால் பிரச்சனை ஏற்படாது. நண்பர்களுடன் சண்டைகள் ஏற்படும். காதல் வாழ்வில் பிரச்சனை ஏற்பட்டு ஒற்றுமை அளிக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். நிறைவு!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 9
எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியாக இருப்பது தினத்தை சுமுகமாக அமைக்கும், பணியிடத்தில் வேலைகள் மும்முரமாக இருக்கும். பண விசயத்தில் சாதகமான நிலை இல்லை, செலவில் நிதானமாக இருக்க வேண்டும்.
காதல் வாழ்வில் பிரச்சனை இருக்காது. மனதில் இருக்கும் பதட்டம் குடும்ப உறுப்பினர் மீது கோபத்தை உருவாக்கும், ஆனால் குடும்பத்தினரின் அக்கறை மனதிற்கு நிம்மதி அளிக்கும். அமைதியின்மை உடலில் திடீர் பிரச்சனை அளிக்கும். ஆதரவு!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 4
இன்றைய தினம் மனதில் அமைதி குறையும், வெற்றி பற்றிய சிந்தனை தொழிலில் போட்டியை உருவாக்கும். லாபம் பார்க்க அதிகம் போராட வேண்டியதாக இருக்கும். கையில் பணம் நிற்பது அரிது.
குடும்பத்தில் சிறிய பிரச்சனை பெரிய விளைவை உருவாக்கும். கணவன் மனைவி உறவில் சந்தோஷம் குறையும், ஆனால் எதிர்கால தேவைக்காக கடினமாக போராடுவீர். ஆரோக்கியத்தில் கால் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும். போட்டி!
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 5
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…